அபிராமிஅந்தாதிபாடல்73
தாமம் கடம்பு, படை பஞ்ச பாணம், தனுக் கரும்பு,
#அபிராமிஅந்தாதிபாடல்73
தாமம் கடம்பு,
படை பஞ்ச பாணம்,
தனுக் கரும்பு,
யாமம் வயிரவர்
எத்தும் பொழுது;
எமக்கு என்று வைத்த
சேமம் திருவடி,
செங்கைகள் நான்கு,
ஒளி செம்மை, அம்மை
நாமம் திரிபுடை,
ஒன்றோடு
இரண்டு நயனங்களே
#பொருள்:-
ஏ, அபிராமி!
உன்னுடைய மாலை,
கடம்ப மாலை,
படைகளோ பஞ்ச பாணங்கள் (ஐவகை மலர் அம்புகள்);
வில்லோ கரும்பு;
உன்னுடைய நெற்றிக் கண்களோ அருட் கண்கள்;
நான்கு கரங்களோ செந்நிறமாகும்.
உன்னை வயிரவர்கள் வணங்கும் நேரமோ நள்ளிரவாகும்.
திரிபுரை என்ற பெயரும் உண்டும்.
நீ எனக்கு மேலாக வைத்திருக்கும் செல்வம் நின்னுடைய திருவடித் தாமரைகளேயாகும்.
#பொருளுரை
அவள் கடப்ப மாலை அணிந்து கொண்டிருக்கிறாள்.
பஞ்ச பாணங்களைக் கைக் கொண்டு இருக்கிறாள்.
கரும்பாலான வில்லைக் கொண்டிருக்கிறாள்.
அவளைத் துதிக்கும் பொழுது என்பது
நள்ளிரவு -
அப்போதுதான் பைரவர்கள் அம்பிகையை பூஜிப்பார்கள்.
நமக்கு என்று என்ன சொத்து வைத்திருக்கிறாள் அம்பிகை?
நமக்கு என்றே,
அவளது திருவடித் தாமரைகள் காத்துக் கொண்டு இருக்கின்றன.
அவளது நான்கு கைகளும் செம்மையான நிறத்தில் காட்சி தருகின்றன.
அவளது உருவமே ஒளியாலானது போல் இருக்கின்றது.
அவளது நாமமோ, 'திரிபுரை' என்பது. அதற்கு ஏற்ப,
அவளது மூன்று நயனங்களும் காட்சி அளிக்கின்றன.
அம்பிகையை வர்ணிக்கிறார் பட்டர் இங்கே.
அவளது வர்ணனைக்கு நடுவிலே,
அவள் நமக்காக வைத்திருக்கும் சேவடிகள் பற்றியும் சொல்கிறார்.
அவளை சிறப்பாக பூஜிக்கும் பைரவர்கலை பற்றியும்,
அந்த நள்ளிரவு பற்றியும் சொல்கிறார்.
அது நள்ளிரவாய் இருந்தால் என்ன என்று தோன்றுகிறது பட்டருக்கு.
ஏன்? ஏன் எனில்,
அம்மையோ, ஒளியே வடிவானவள்.
நள்ளிரவிலே,
அவளை நினைத்தால்,
அந்த பொழுதே பகல் போல் ஆகிவிடாதா என்ன!
அதன் பின்னர், அவளது மூன்று கண்களும் நினைவுக்கு வருகின்றன.
அன்னையின் நாமம் கூட,
#திரிபுரை' என்பது தானே!
இப்படி, அன்னையைப் பற்றி,
அங்க வர்ணனையில் தொடங்கி, பைரவர்கள் ஏத்தும் பொழுது பற்றிச் சொல்லி,
அவளது முக்கண்கள் பற்றிச் சொல்லி,
அவளது சேவடித் தாமரைகள் பற்றியும் சொல்லி முடிக்கிறார் பட்டர்.

Comments
Post a Comment