அபிராமிஅந்தாதி பாடல்70

 அபிராமிஅந்தாதி பாடல்71


அழகுக்கு ஒருவரும்


ஒவ்வாத வல்லி,


அரு மறைகள்


பழகிச் சிவந்த பதாம்புயத்தாள், 


பனி மா மதியின்


குழவித் திருமுடிக் 


கோமள யாமளைக் கொம்பிருக்க,


இழவுற்று நின்ற நெஞ்சே!-


இரங்கேல், உனக்கு என் குறையே?    


#பொருள்:-


அபிராமித் தேவி எவருக்கும் இணையில்லாத திருமேனியழகுடையவள். 


வேதப் பொருளிலே திருநடம் புரிந்த சிவந்த பாதத் தாமரைகளை உடையவள். 


குளிர்ந்த இளம்பிறையைத் தன் திருமுடிகளில் சூடிய கோமளவல்லி, இனிமையான கொம்பான தேவி இருக்க, 


நெஞ்சே! 


ஊக்கம் குறைந்து, 


ஏக்கம் கொள்ளாதே! 


உற்ற இடத்தில் ஊன்று கோலாக அன்னை இருக்க உனக்கு ஏன் குறை?


அவள் அழகுக்கு ஏதேனும் ஒப்புமை உண்டா என்ன? இல்லை!


அவளுடைய காலடிகள், 


சிவந்து இருக்கின்றன. 


எதனால்? வேதங்கள், அவளது காலடியிலே விழுந்து விழுந்து நமஸ்காரம் செய்கின்றன. 


அப்படி ம்றைகளாகிய வேதங்கள் விழுந்து விழுந்து வணங்குவதனாலேயே, 


அவளுடைய காலடிகள் சிவந்து விட்டனவாம்! சிவந்து, 


சிகப்பான தாமரை மலர்கள் போல இருக்கின்றனவாம்!


இங்கே, 


லலிதா சஹஸ்ரனாமத்தினை நினைவு படுத்துகிறார் பட்டர். 


"ஸ்ருதி சீமந்த சிந்தூரி, க்ருத பாதாப்ஜ தூளிகா" என்று 


சொல்கிறது லலிதா சஹஸ்ரனாமம். 


அதனை இங்கே அப்படியே தமிழ்ப் படுத்துகிறார்.


அவள், சந்திரனைத் தம் முடியிலே சூடியவள்.


 சந்திரசூடரின் ஒரு பாகமல்லவா! அந்தக் கோமளவல்லி, 


இனிமையான கொம்பு போன்ற தேவி இருக்கும்போது, 


நமக்கு என்ன குறை இருந்து விட முடியும்? நெஞ்சே, 


நீ ஏன் ஊக்கம் குறைந்து, வருத்தம் தோய்ந்து, அழுது கொண்டிருக் கிறாய்? 


உனக்கு என்ன குறை இப்போது?


மரணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் ஒருவரது பார்வையிலிருந்து,


இந்தப் பாடலை நாம் பார்க்க வேண்டும். தேவி ஏதேனும் கருணை புரிந்தாலன்றி, மரணம் சர்வ நிச்சயம்.


அந்த சமயத்தில், 


அவளை மிக நிச்சயமாக நம்பி, 


அவள் அருள் புரிவாள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இன்றி இருக்க வேண்டுமானால், 


எப்பேர்ப்பட்ட நம்பிக்கை அந்த அபிராமியின்மேல் இருந்திருக்க வேண்டும்? 


ஆவதும், 


அழிவதும், 


நிற்பதும்,


நடப்பதும், 


பிறப்பதும், 


இறப்பதும், 


எல்லாமும் அவளால்தான் என்பதிலே எத்தனை உறுதி இருந்திருந்தால், இப்படி இருக்க முடியும்!


நெஞ்சே! 


நீ ஏன் நம்பிக்கை தளர்ந்து போகிறாய்? 


அவள் பார்த்துக் கொள்வாள் ! உனக்கு இப்போது என்ன குறை வந்து விட்டது! 


அவள் பக்கத்திலேயே இருக்கும்போது, 


உனக்கு என்ன நேர்ந்துவிட முடியும்? எது நேர்ந்தாலும், அது அவளது அருளினால்தான் என்பது நிச்சயமானால், 


நீ ஏன் அழுது கொண்டிருக்கிறாய்? கவலை உற்றிருக்கிறாய்?


அவளது பாதாரவிந்தங்களிலே, அந்த வேதங்களே, 


எந்தப் பாதாரவிந்தங்களிலே நித்தம் வணங்கி நிற்கின்றனவோ, 


அந்தப் பாதாரவிந்தங்களிலே மனதை நிறுத்தி, உற்சாகமாக இரு. அவள் இருக்கும்போது, 


உனக்கு எந்த ஒரு குறையும் வந்துவிடாது என்று சொல்கிறார் பட்டர்.


"குறை ஒன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா" என்ற பாடலும், 


இந்த அந்தாதிப் பாடலினால் பிறந்து இருக்குமோ? !!


Comments

Popular posts from this blog

லலிதா சகஸ்ரநாமம்

அம்பாளின் தாடங்க மஹிமைப் பற்றிய வர்ணணை.

ஶ்ரீசக்ர தாடங்கங்கள்