அபிராமிஅந்தாதிபாடல்-68.
அபிராமிஅந்தாதிபாடல்-68. பாரும், புனலும், கனலும், வெங்காலும், படர் விசும்பும், ஊரும் முருகு சுவை ஒளி ஊரு ஒலி ஒன்றுபடச் சேரும் தலைவி, சிவகாம சுந்தரி, சீரடிக்கே சாரும் தவம், உடையார் படையாத தனம் இல்லையே. பொருள்:- அபிராமி! நீ நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐவகைப் பூதங்களாகவும், சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற அவைகளின் தன்மையாகவும் நிற்கக் கூடியவள். சுந்தரியே! உன்னுடைய செல்வம் பொருந்திய திருவடிகளைச் சார்ந்தவர்கள் சிறந்த தவத்தைப் பெறுவர். அத்துடன் அவர்கள் அடையாத செல்வமும் இல்லை எனலாம் (எல்லாச் செல்வமும் பெறுவர்). பொருளுரை:- அந்த அபிராமி, அந்த உமையவள், அந்த சிவகாம சுந்தரி எங்கு இருக்கிறாள்? எவ்விதம் இருக்கிறாள்? நிலம்,நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என பஞ்ச பூதங்களாக இருக்கிறாள் அவள். ஊறு, ஒளி, ஒலி, சுவை, மணம் என ஐந்து உணர்வுகளாகவும் அவளே இருக்கிறாள். இப்படி, எங்கும் நிறைந்திருக்கும் அபிராமி அன்னையின் பாதம் பணிவார்கள் அடையமுடியாத செல்வமே இல்லை. மேலாகப் பார்க்கும்போது, இந்தப் பாடலின் பொ...