#அபிராமிஅந்தாதிபிடல்62#
#அபிராமிஅந்தாதிபிடல்62#
தங்கச் சிலை கொண்டு,
தானவர்
முப்புரம் சாய்த்து,
மதவெங்கண்
உரி போர்த்த
செஞ்சேவகன்
மெய்யடையக்
கொங்கைக் குரும்பைக்
குறியிட்ட நாயகி,
கோகனகச்
செங்கைக் கரும்பும்,
மலரும்,
எப்போதும் என் சிந்தையதே
அபிராமி அந்தாதியிலே
மறுபடி மறுபடி வரக்கூடிய சிந்தனைகள் சில.
அவற்றில் ஒன்று,
'தவ மா முனிவராக' இருந்த
சிவ பெருமானையும் தன் அழகினால் சாய்த்த அம்மையின் பெருமை.
அந்தச் சிவனார் எப்படிப் பட்டவர்?
தங்கத்தினால் ஆன வில் கொண்டு, அரக்கர்களின் முப்புரங்கள் எனச் சொல்லப்படும் மூன்று கோட்டைக்
கலையும் சாய்த்த பெருமை உடையவர்.
அனைவரையும் அழித்துவிடுமாறு எதிர்த்து வந்த,
தாருகா வனத்து முனிவர்களால் ஏவப்பட்ட யானையினைக் கொன்று,
அதன் தோலை எடுத்துத் தனக்கு ஆடையாகப் போர்த்திக் கொண்டவர்.
அப்படிப்பட்ட பரமசிவனாரையும் அவரது உடல் தளர்ந்து போகுமாறு தனது குரும்பை ஒத்த கொங்கைகளால் சாய்த்த பெருமை உடைவள் அல்லவோ நமது அம்மை அபிராமி!
அந்த பெருமையும் சிறப்பும் உடைய அபிராமி அன்னையின் செம்மையான திருக்கரங்களிலே இருக்கும்
கரும்பும்,மலர்களும், எப்போதும் என் சிந்தையிலே இருக்கட்டும் என்று பேசுகிறார் அபிராமி பட்டர்.
ஏ, அபிராமி!
உன் கணவர் பொன் மலையை வில்லாகக் கொண்டு,
முப்புரத்தை எரித்த,
சிவந்த கண்களை உடைய, யானைத்தோலைப் போர்த்திய
சிறந்த காவலனாவான்.
அன்னவனின் திருமேனியையும்,
உன்னுடைய குரும்பையொத்த கொங்கையால் சோர்வடையச் செய்தவளே!
பொன் போன்ற சிவந்த கைகளில் கரும்பு வில்லோடும், மலர் அம்போடும், என் சிந்தையில் எப்போதும் உறைந்திருப்பாய்.
பொன்னார்மேனியர்

Comments
Post a Comment