#அபிராமிஅந்தாதிபாடல்67

 #அபிராமிஅந்தாதிபாடல்67



தோத்திரம் செய்து, 


தொழுது, 


மின் போலும் நின் தோற்றம் 


ஒரு மாத்திரைப் போதும் 


மனத்தில் வையாதவர்


வன்மை,


குலம்,


கோத்திரம், 


கல்வி, 


குணம், 


குன்றி, 


நாளும் குடில்கள் தோரும்


பாத்திரம் கொண்டு 


பலிக்கு உழலா நிற்பர்-


பார் எங்குமே                        


#பொருள்#


அன்னையே! அபிராமி! 


உன்னையே பாடி, 


உன்னையே வணங்காமல்,


மின்போலும் ஒளியுடைய 


நின் தோற்றத்தை ஒரு மாத்திரை நேரமாகிலும் மனதில் நினையாத பேர்களுக்கு, என்ன நேரும் தெரியுமா? 


அவர்கள் கொடைக்குணம், 


சிறந்த குலம், 


கல்வி குணம் இவையெல்லாம் குன்றி, 


வீடு வீடாகச் சென்று, 


ஓடேந்தி உலகெங்கும் பிச்சை எடுத்துத் திரிவர்.


அன்னையைத் தொழுது நிற்போருக்கு என்ன கிடைக்கும் என்று சொல்லி வந்த அபிராமி பட்டர்,


அவ்வாறு தொழாமல் நிற்போருக்கு என்ன நேரும் என்று இந்தப் பாடலிலே சொல்கிறார்.


#பொருளுரை#


அந்த அபிராமியைத் தோத்திரம் செய்து, கை கூப்பித் தொழுது,


அவளின் உருவத்தை ஒரு கண நேரம் 


- அதிகமில்லை - 


ஓரே ஒரு கண நேரம் தனது மனத்தினிலே வைக்க இயலாதவருக்கு, 


இந்த வையகத்தில் பல இன்னல்கள் நேரும். 


அவர்களுடைய வன்மை குன்றும்.


குலப்பெருமை அழியும். 


கல்வி காணாமல் போகும். 


குணம் மாறிப் போகும். 


பிறர்க்கு ஈதல் என்னும் பெரும் புகழ் நிலையிலிருந்தவர்கள்கூட, 


வீடு வீடாகச் சென்று பாத்திரம் கொண்டு இரந்து வாழும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.


அந்த அபிராமியின் பக்தர்களுக்கு என்னவெல்லாம் கிடைக்கும்? 


அந்த அபிராமியின் நாமமே, 


அவளின் பக்தர்களுக்கு, 


தனம் தரும்; 


கல்வி தரும்;


ஒரு நாளும் தளர்வு அறியா மனம் தரும், 


நெஞ்சில் வஞ்சம் இல்லா நண்பர்களைத் தரும். 


பெரும் போக வாழ்வினையும் தரும்.


ஆனால், அதே சமயத்தில், 


அந்த அன்னையின் நாமத்தைச் சொல்லாமல், 


அவளின் திரு உருவத்தை ஒரு மாத்திரைப் போதுகூட மனத்தில் இருத்தி தியானம் செய்ய முடியாதவர்களின் வாழ்வு, 


வாழ முடியாத அளவிற்கு இழிவான நிலைக்கும் போகும் என்று எடுத்துரைக்கிறார் பட்டர்.


#அன்னைஅபிராமியேநமஹ#

Comments

Popular posts from this blog

லலிதா சகஸ்ரநாமம்

அம்பாளின் தாடங்க மஹிமைப் பற்றிய வர்ணணை.

ஶ்ரீசக்ர தாடங்கங்கள்