#அபிராமிஅந்தாதிபாடல்63#

 #அபிராமிஅந்தாதிபாடல்63#



தேரும்படி சில ஏதுவும் காட்டி, 


முன் செல்கதிக்குக்

கூறும் பொருள், 


குன்றில் கொட்டும் தறி


குறிக்கும்-சமயம்

ஆறும் தலைவி இவளாய் 


இருப்பது அறிந்திருந்தும்,


வேறும் சமயம் உண்டு என்று கொண்டாடிய வீணருக்கே            


பொருள்:-

     

ஆறு சமயங்களுக்கு தலைவியாக இருக்கக் கூடியவள், அபிராமி அன்னையாகும். 


அவளே பேதையர்களுக்கு நற்கதியடைவதற்குச் சில உண்மையான வழிகளைக் காட்டுபவள். 


அப்படியிருந்தும் சில வீணர்கள் பிற சமயம் உண்டென்று அலைந்து திரிகிறார்கள். 


இவர்களின் செயல் பெரிய மலையைத் தடி கொண்டு தகர்ப்பேன் என்பது போல் உள்ளது.


விளக்கவுரை:-


சமயங்கள் ஆறு உண்டு. 


சைவம்,

வைணவம், 

கௌமாரம், 

காணாபத்யம், 

சௌரம்,

சாக்தம் எனப்படுபவை அவை.


சிவபெருமானை வழிபடுவது சைவம். விஷ்ணுவை வழிபடுவது வைணவம். குமரக் கடவுளை வழிபடுவது கௌமாரம். 

கணபதியை வழிபடுவது காணாபத்யம். 

சூரியனை வழிபடுவது சௌரம்.


சக்தியை, அந்த அன்னை அபிராமியை வழிபடுவது, சாக்தம்.


இப்படி ஆறு சமயங்கள் இருந்தாலும், அவை அனைத்திற்கும் தலையாயதாக இருப்பது எது என்று கேட்கிறார் பட்டர். 


சிவ பெருமானே வழிபடுவது யாரை? அந்த மகா விஷ்ணு போற்றிப் புகழ்வது யாரை? 


அந்த முருகக் கடவுளும், கணபதியும் யாரைத் தொழுது நிற்கிறார்கள்? அந்த சூரியன் நித்தமும் வழிபடுவது யாரை? 


இவர்கள் அனைவரும் வழிபடுவது நம் அன்னை அபிராமியை அல்லவா?


இப்படி, 


இந்த மற்ற ஐந்து சமயத்துக் கடவுளர்களுமே அபிராமியைத் தொழுது நிற்பார்களேயானால், அந்தத் தெய்வம்தானே முழுமுதல் தெய்வமாக இருக்க முடியும்?


அப்படியென்றால், 


நேரே அந்தத் தெய்வத்தினைத் தொழுவதுதானே முறை?


இந்த முறையான வழியை விட்டு விட்டு, மற்ற தெய்வங்களை வழிபடுவது என்பது, 


அந்த வழிபாட்டின் மூலம் நல்ல கதியை அடையலாம் என்பது, 


ஒரு பெரும் மலையினை சுத்தியலால் உடைக்க முற்சிப்பது போலத்தான் என்கிறார் பட்டர்.


நமது வினைப்பயன் என்பது சாதாரணமாக உடைக்கக் கூடியதே அல்ல. 


எத்தனையோ பிறவிகள் எடுத்து எடுத்து, 


அத்தனைப் பிறவிகளிலும் பெரும் பாவங்கள் செய்து, 


அந்த வினைப்பயன் பெரும் மலை போல் உருவெடுத்து நிற்கிறது. அதனை உடைத்தெறிய, 


மிகப் பெரும் சக்தி தேவைப்படுகிறது. அந்த மாபெரும் சக்திதான், அன்னை அபிராமி. 


அந்த சக்தியை நாடுவதை விடுத்து, மற்ற சிறிய சக்திகளை நாடுவதால், என்ன பயன்? என்று கேட்கிறார்

பட்டர்.


#ஓம்ஶ்ரீஅபிராமிதாயே#

Comments

Popular posts from this blog

லலிதா சகஸ்ரநாமம்

அம்பாளின் தாடங்க மஹிமைப் பற்றிய வர்ணணை.

ஶ்ரீசக்ர தாடங்கங்கள்