அபிராமி அந்தாதி பாடல்64
#அபிராமிஅந்தாதிபாடல்64
வீணெ பலி கவர்
தெய்வங்கள்பால் சென்று,
மிக்க அன்பு பூணேன்;
உனக்கு அன்பு பூண்டுகொண்டேன்;
நின்புகழ்ச்சி அன்றிப்
பேணேன்,
ஒரு பொழுதும்;
திருமேனி ப்ரகாசம் அன்றிக்
காணேன்,
இரு நிலமும் திசை நான்கும்
ககனமுமே
#பொருள்:-
ஏ, அபிராமி! உன்னையன்றி வீணாகப் பலி வாங்கும் வேறொரு தெய்வத்தை நாடேன்.
உன்னையே அன்பு செய்தேன். உன்னுடைய புகழ் வார்த்தையன்றி வேறொரு வார்த்தை பேசேன்.
எந்நேரமும் உன்னுடைய திருமேனிப் பிரகாசத்தைத் தவிர, வேறொன்றும் இவ்வுலகத்திலும், நான்கு திசைகளிலும் காண மாட்டேன்
#விளக்கம்:-
பட்டர், இந்தப் பாடலில்,
அபிராமியிடம் தாம் வைத்த
பக்தி பற்றிப் பேசுகிறார்.
ஹிந்து மதத்தில் நிறைய தெய்வங்கள் உண்டு.
சிவனும் விஷ்ணுவும்
இரு பெருமதத்தாரால் போற்றப்பட்டு வந்தாலும்,
சிறு தெய்வங்களும் நிரம்ப உண்டு.
மாடன், காடன், வேடன் என்று,
எல்லை காக்கும் தெய்வங்கள் என்ற பல தெய்வ உருவங்கள் இங்கே ஊருக்கு ஊர் உண்டு.
அவற்றோடு,
பட்டர் வாழ்ந்த காலத்தில்,
பலி கொடுத்தலும்,
அவ்வாறு பலி கொடுத்தால் அதனால் மிக்க நன்மைகள் விளையும் என்ற எண்ணமும் நிலவி வந்தது.
அப்படியொறு
கால கட்டத்தில் வாழ்ந்தாலும்,
பட்டர்,
அபிராமியிடமே பக்தி பூண்டு,
அந்த அபிராமியைத் தவிற வேரு ஒரு தெய்வம் இல்லை என்று பாடுகிறர்.
அம்மா, அபிராமி!
உன்னிடம் அன்பு பூண்டு விட்டேன்.
ஒரு பொழுதும்,
பலி கொள்ளும் மற்ற தெய்வங்களிடம் அன்புபூண மாட்டேன்.
நின் புகழ்ச்சி அல்லால் வேறு எதுவும் பாட மாட்டேன்.
காண்பது யாவுமே அபிராமித் தாயாகவே காண்பேன்.
வேறு எதுவும் என் கண்ணில் படாது.
வானும், மண்ணும் என இரு நிலங்களும் நீயே ஆனாய்.
நான்கு திசைகளும் நீயே ஆனாய்.
இந்த உலகு யாவுமே நீயே ஆனாய். எங்கும்,
எவ்விடத்தும்,நீயே நீக்கமற நிறைந்து இருக்கிறாய். எங்கும்,
எல்லா இடத்திலும், எப்போதும், உன்னையே கண்டு,
உன்னிடத்தில் மட்டுமே நான் பக்தி செய்ய்ய வெண்டும் அம்மா என்று கேட்கிறார் பட்டர்.

Comments
Post a Comment