Posts

Showing posts from June, 2025

#அபிராமிஅந்தாதிபாடல்-27#

Image
 #அபிராமிஅந்தாதிபாடல்-27# பலன்: மனநோய் அகலும் உடைத்தனை வஞ்சப் பிறவியை, உள்ளம் உருகும்  அன்புபடைத்தனை,  பத்ம பதயுகம்  சூடும் பணி  எனக்கே அடைத்தனை,  நெஞ்சத்து அழுக்கை  எல்லாம் நின்  அருள் புனலால் துடைத்தனை,  சுந்தரி  நின் அருள் ஏதென்று  சொல்லுவதே பொருள்: சுந்தரி - அழகி - அபிராமியே,  உன் அருள் பெருமையை என்னவென்று சொல்வது? முதலில், வஞ்சகம், கோபம் போன்ற அழுக்குகள் நிறைந்த பிறவியை அறுத்தாய். பின்னர் அன்பே ததும்பும் உள்ளம் கொடுத்தாய். பின்னர் உன் பாத கமலங்களை வணங்கும் பணியினை எனக்கே அளித்தாய்.  எல்லாவற்றிற்கும் மேலாக,  என் நெஞ்சத்தின் அழுக்கை உன் அருள் வெள்ளத்தினால் துடைத்தாய்.  பேரழகியே, அடியேனது கன்மத்தால் வந்த பிறவியைத் தகர்த்தாய்;  என் உள்ளம் உருகும்படியான அன்பை அவ்வுள்ளத்திலே உண்டாக்கினை;  தாமரை போன்ற இரண்டு திருவடிகளைத் தலையால் வணங்கும் தொண்டை எனக்கென்றே ஒப்பித்தாய்;  அடியேனது நெஞ்சில் இருந்த ஆணவம் முதலிய அழுக்கை எல்லாம் நினது கருணையாகிய தூய நீரால் போக்கினை;  இங்ஙனம் செய்த நின் திருவருட் சிறப்ப...

ஆன்மீகம் மற்றும் லௌகீகம்

Image
 ஆன்மீகம் மற்றும் லௌகீகம் லௌகீகம் என்பது உலகியல் வாழ்க்கை,  ஆன்மீகம் என்பது ஆன்மீக வாழ்க்கை.  இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை,  ஆனால் வெவ்வேறு நோக்கங்களைக் கொண்டுள்ளன.  லௌகீகம் (உலகியல் வாழ்க்கை):  இது ஒருவரின் அன்றாட வாழ்க்கை, சமூக வாழ்க்கை, தொழில் வாழ்க்கை மற்றும் உலகளாவிய உறவுகளை உள்ளடக்கியது. இது பொருள் சார்ந்த விஷயங்கள், குடும்பம், வேலை, நண்பர்கள் மற்றும் சமூக செயல்பாடுகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. இது உலக இன்பங்கள் மற்றும் வெற்றியை அனுபவிப்பதில் ஆர்வம் காட்டுகிறது.  ஆன்மீகம் (ஆன்மீக வாழ்க்கை): இது ஒருவரின் உள்மனம்,  ஆன்மீக வளர்ச்சி, பிரபஞ்சத்தின் புரிதல் மற்றும் ஒருவரின் உண்மையான தன்மையைக் கண்டறிதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. இது ஒருவரது அகவாழ்வு, தியானம், பக்தி, மற்றும் ஆன்மீக நடைமுறைகள் போன்றவற்றில் ஆர்வம் காட்டுகிறது. இது உலகப் பற்றுக்களைக் குறைத்து,  ஒருவரது ஆன்மாவை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.  இரண்டுக்கும் உள்ள தொடர்பு: இரண்டுமே ஒரு மனிதனின் வாழ்க்கையின் முக்கியமான பகுதிகள். சிலர் லௌகீக வாழ்க்கையை து...

அபிராமிஅந்தாதிபாடல்- 26#

Image
 #அபிராமிஅந்தாதிபாடல்- 26# பலன்: செல்வாக்கு, சொல்வாக்கு அருளும் ஏத்தும் அடியவர்  ஈரேழ் உலகினையும்  படைத்தும் காத்தும்  அழித்தும்  திரிபவராம்,  கமழ் பூங்கடம்பு சாத்தும் குழல் அணங்கே,  மணம் நாறும்  நின்தாளிணைக்கு  என் நாத் தங்கு  புன்மொழி  ஏறியவாறு  நகையுடைத்தே பொருள்: மணம் கமழ் கடம்ப மாலையினை கூந்தலில் அணிந்திருக்கும் ஆரணங்கு (அழகிய பெண்) அபிராமி. அவளை அவள் அடியவர்கள் மற்றும் 14 உலகினையும் முறையே படைத்து,  காத்து,  அழிக்கும்  தொழில்கள்  செய்யும் மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய தேவர்களும் வணங்குகின்றனர்.  அத்தகைய அன்னையின் மணம் கமழ் திருவடிகளை எளியவனான என் நாவலிருந்து தோன்றிய பாடல்கள் அவற்றை நன்றாக வர்ணிக்கின்றன.  இவ்வாறு எண்ணும்போது சிறிய நகை உண்டாகிறது.  ஏனென்றால், நீ கொடுத்த வாக்கு சக்தியால்,  உன்னையே தொழுகிறேன்.  அதை பெரிதாக கருதி சொல்வதால். இப்படியே,  ஆதி சங்கரர் தனது சௌந்தர்ய லஹரி 100-வது ஸ்லோகத்தில், வினயத்தோடு கூறியுள்ளார். பிரதீப-ஜ்வாலாபி: திவஸகர-நீராஜன-விதி:...

நாம் ஏன் நாள்தோறும் ஸ்நானம், செய்ய வேண்டும்?

Image
 நம் ஒவ்வொருவரிலும் இறைவன் உறைகிறானா என்பதற்கு பரமச்சார்யாளின் அருமையான விளக்கம். காரணம் அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது. எது அண்டத்திலும் பிண்டத்திலும் உள்ளது. "நாம் ஏன் நாள்தோறும் ஸ்நானம், செய்ய வேண்டும்?  மடி, ஆசாரம்,விரதம், உபவாசம் என்றெல்லாம் கடைப்பிடிக்கணும்?  நெற்றிக்கு, எதற்காகத் திலகம் வைத்துக் கொள்ளணும்?  யோகிகள் திருநீறு இட்டுக் கொண்டார்களா?  நாமம் போட்டுக் கொண்டார்களா?--   பெரியவாளிடம்  ஒருவர் கேள்வி. பெரியவாளின் சாட்டையடி பதில்- கேள்வி கேட்ட  குறும்புக்கார  மனிதருக்கு. #அஸாவாதித்யோப்ரஹ்மாப்ரஹ்மவாஹமஸ்மி# "சில யோகிகள்,சித்த புருஷர்கள் பல காலம் வரை ஸ்நானம் செய்வதில்லை.  ஜபம்,தவம் செய்வதில்லை.  ஆகார நியமங்களும் கிடையாது. ஆனால், அவர்கள், பல அமானுஷ்யமான காரியங்களைச் செய்து காட்டி நம்மைப் பிரமிக்க வைக்கிறார்கள்.  செப்பிடு வித்தை மாதிரி வெறும் பொய்த்  தோற்றம் இல்லை. அப்பிடியிருக்க, நாம் ஏன் நாள்தோறும் ஸ்நானம் செய்ய வேண்டும்.? ஶ்ரீஶ்ர மடி - ஆசாரம்; விரதம் - உபவாசம் என்றெல்லாம் கடைப்பிடிக்கணும்.? நெற்றிக்கு ...

ஆஷாட நவராத்திரியும் அம்பாள் வாராஹியும்

Image
இன்று போதாயண அமாவாசை நாளை ஸர்வ அமாவாசை 26ம் தொடங்கி அடுத்த மாதம் 5ம் தேதி வரை ஆஷாட நவராத்திரி . போன வருடம் போல் இந்த வருடமும் அம்பாளின் கிருபையால் தஞ்சை பெரிய கோவிலில் உள்ள வாராஹி அம்பாளுக்கு தினசரி அலங்காரம் சேவை கிடைக்க வேண்டும் என அம்பாளை பிராதிக்கிறேன். ஆஷாட நவராத்திரி  இந்த நவராத்திரி  அன்னை லலிதா த்ரிபுரஸுந்தரி என்று அழைக்கப்படும் ஶ்ரீ ராஜ ராஜேஸ்வரி அன்னையின் படை தளபதியாக விளங்கிய சப்த மாதர்களில், ஒருவரான வராகி அன்னையின் வழிபாடு உகந்த வழிபாடு தினம் வராகி திருமாலின் வராக அம்சமாவார்.  இவர் வராகமெனும் முகமும்,  கூர்மையான கோரை பல்,  நான்கு கரங்களையும் உடையவர்.  பின் இரு கரங்களில் தண்டத்தினையும்,  கலப்பையையும் கொண்டவராவார். இவர் கருப்பு நிற ஆடையுடுத்தி சிம்மம் வாகனத்தில் அமர்ந்திருக்கு அன்னை . மகா வராகி,  ஆதி வராகி,  ஸ்வப்னவராகி,  லகு வராகி,  உன்மத்த வராகி,  சிம்ஹாருடா வராகி,  மகிஷாருடா வராகி,  அச்வாருடா வராகி என்போர்  எட்டு வராகிகள் (அஷ்டவராகி) என்று அழைக்கப்படுகிறார்கள். இந்த ஆஷாட நவராத்திரி தினமான இந்த 11 நாட...

ஹிந்து சனாதனதர்மம் நமக்கு என்ன போதிக்கிறது என்பதற்கு

Image
 ஹிந்து சனாதனதர்மம் நமக்கு என்ன போதிக்கிறது என்பதற்கு பகவான் அன்புடன் விளக்குகிறார்... சனாதன தர்மம் (இந்து மதம்) என்பது ஒரு நம்பிக்கை அமைப்பு அல்ல.  அது இயற்பியல், வேதியியல், கணிதம் போன்ற அறிவியல். **ஒரு இந்துவாக இருப்பதற்கு 101 சிறந்த காரணங்கள்...* 1. நான் ஒரு இந்து, ஏனென்றால் அது வாழ்க்கையின் நோக்கம் கடவுளை உணர்தல் என்று எனக்குச் சொல்கிறது. 2. நான் ஆன்மா, உடல் அல்ல என்று இந்து மதம் கற்பிக்கிறது. 3. நான் விரும்பும் எந்த பெயரிலும் வடிவத்திலும் கடவுளை வழிபட இந்து மதம் எனக்கு முழுமையான சுதந்திரத்தை அளிக்கிறது. 4. இந்து மதத்தில், கடவுள் வெளியே மட்டுமல்ல, எனக்குள்ளும் இருக்கிறார். 5. உண்மை மட்டுமே வெற்றி பெறுகிறது என்று இந்து மதம் கற்பிக்கிறது. 6. துறவிகளும் முனிவர்களும் கடவுளின் அன்பு மற்றும் கருணையின் உயிருள்ள சான்றுகள். 7. தன்னலமற்ற சேவை என்பது மிக உயர்ந்த கடமை என்று இந்து மதம் கற்பிக்கிறது. 8. இந்து மதம் எனது சொந்த உண்மையான சுயத்தைக் கண்டறிய எனக்கு உதவுகிறது. 9. இந்து மதம் மதத்தை நமக்குள் ஏற்கனவே இருக்கும் தெய்வீகத்தின் வெளிப்பாடாகக் கருதுகிறது.  10. உடலின் நிலையற்ற தன்மை...

#அபிராமிஅந்தாதிபாடல்-25#

Image
 #அபிராமிஅந்தாதிபாடல்-25# பலன் - நினைத்த காரியம் கைக்கூடும் பின்னே திரிந்து,  உன் அடியாரை பேணி,  பிறப்பறுக்க முன்னே  தவங்கள் முயன்று கொண்டேன்,  முதல் மூவருக்கும் அன்னே,  உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே என்னே?  இனி உன்னை யான்  மறவாமல் நின்று ஏத்துவனே. பொருள்: மும்மூர்த்திகளுக்கும் தாயே, அவள் ஆதிபராசக்தி, அதனால் அவளிடமிருந்து மூன்று பிரம்மாக்களை தோன்றிவித்தால் அதனால் அவள் மூவருக்கும் அன்னை ஆனால். உலகுக்கு அருமையான மருந்தே, அன்னை அபிராமியே,  போன பாடலில் கூறியது போல் அவள் இந்த பிறப்பு எனும் பிணிக்கு அவள் அருமருந்தே. இனி பிறக்கக்கூடாது என்பதற்காக, தவங்கள் பல செய்தேன், மறு பிறவி வேண்டாம் என்பதற்கு பல தவங்கள் செய்துக் கொண்டு இருக்கிறேன் என்கிறார் பட்டர்.. உன் அடியார்களுக்கு தொண்டு செய்கிறேன்.  பகவானை விட அவனது பக்தர்களுக்கு தொண்டு செய்தால் பகவானுக்கு மிகவும் பிடித்த ஒன்று. தனது பக்தைக்காக பிட்டுக்கு மண் சுமந்தான் சுந்தரேஸ்வரர் அரசன் கட்டிய கோவிலை விட பூசலனார் கட்டிய கோவிலுக்கு திருநீராட்டு விழாவிற்கு இசைந்து வந்தான் என பல வரலாறுகள் உள்ளது. ...

எனக்கு முக்கியம் அம்பாள்” : கடைசி பகுதி

Image
 எனக்கு முக்கியம் அம்பாள்” :  கடைசி பகுதி  தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)-4. நாம் பெரிய பெரிய நல்ல காரியமாக ஏதோ செய்ய வேண்டும் என்பதே இல்லை.  முதலில் நாம் தப்புப் பண்ணாமல் இருக்க முயன்றாலே போதும்.  தப்புப் பண்ணுகிறபோதெல்லாம் அம்பாளிடம் பிரார்த்தித்துக்கொண்டு, அவள் கிருபையால் ஆத்ம சுத்தி செய்து கொண்டு,  படிப்படியாக நமக்கு நிறைவைப் பெற்று, நம் மதத்துக்கும் நிறைவை உண்டு பண்ணுவோம்.  நம் மதம் என்பது லோகம் முழுவதற்கும் பொதுவானதால், இதன் மூலம் சகல தேச ஜனங்களுக்கும் க்ஷேமத்தைத் செய்வோம். எல்லா மதங்களும் முடிவில் மோக்ஷம் அடைவதைத்தான் லக்ஷியமாகச் சொல்கின்றன.  பரம சத்தியத்தை அநுபவத்தினால் அறிகிற ஞானம்தான் அந்த மோக்ஷம்.  அந்தப் பரம ஸத்யத்தைத்தான் வேதாந்தத்தில் பிரம்மம் என்பது. பிரம்மத்தின் சித்சக்தி என்கிற ஞான ஸ்வரூபமாக இருக்கிற அம்பாளை உபாஸித்தாலே, அவளுடைய அநுக்கிரகத்தால் நாமும் அந்த ஸத்தியம்தான் என்கிற ஞானத்தை அடைய முடியும். இகலோகத்தில் பலவிதமான சௌக்கியங்களை அநுக்கிரகம் செய்கிற அம்பாள், முடிந்த முடிவாக இந்த ஞானத்தை, மோக்ஷத்தை அருளுகிறாள்.  அவள் அ...

#அபிராமிஅந்தாதிபாடல்-24#.

Image
 #அபிராமிஅந்தாதிபாடல்-24#. பலன்: நோய்கள் அகலும் மணியே,  மணியின் ஒளியே,  ஒளிரும் மணி புணைந்த அணியே,  அணியும் அணிக்கு  அழகே,  அணுகாதவற்கு பிணியே,  பிணிக்கு மருந்தே,  அமரர் பெருவிருந்தே, பணியேன் ஒருவரை  நின் பத்ம பாதம் பணிந்த பின்னே. இப்பாடல், இதற்கு முந்திய பாடல் இரண்டிலும்,  பட்டர், அபிராமியை தவிர வேறொருவரை வணங்கமாட்டேன் என்கிறார்.  வேண்டுவனவற்றை அளிக்கும் சிந்தாமணி அன்னை அபிராமி. #தரித்ராணாம்சிந்தாமணிகுணநிகா# என்று சௌந்தர்ய லஹரி 3-வது ஸ்லோகத்தில்  (அவித்யனாம்...) அன்னையின் பாத தூளி கேட்பவர்களுக்கு கேட்டதை அளிக்கும் சிந்தாமணி குவியல் என்று சங்கரர் கூறியுள்ளார்.  அவித்³யாநாமந்த-ஸ்திமிர-மிஹிரத்³வீபநக³ரீஜடா³னாம்ʼ சைதன்ய-ஸ்தப³க-மகரந்த³-ஸ்ருதிஜ²ரீ . த³ரித்³ராணாம்ʼசிந்தாமணிகு³ணனிகா ஜன்மஜலதௌ⁴ நிமக்³னானாம்ʼ த³ம்ʼஷ்ட்ரா முரரிபு-வராஹஸ்ய ப⁴வதி .. 3.. ஸ்ரீதேவி!  உமது தாமரைப் பாதங்களின் தூசி: அறியாமையின் இருளை நீக்கும் சூரியர்களின் தீவு நகரம்[1], மந்தமான புத்திசாலிகளுக்கு அறிவு என்ற அமிர்தத்தை ஊற்றும் மலர்களின் கொத்து[2], ஏழைகளுக்க...

எனக்கு முக்கியம் அம்பாள்” :

Image
 "எனக்கு முக்கியம் அம்பாள்” :  தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)-1 வீடு அழுக்கு இல்லாமல் இருந்தால் போதாது.  துணி அழுக்கு இல்லாமலிருந்தால் போதாது. உடம்பு அழுக்கு இல்லாமலிருந்தால் போதாது.  நம் மனம் அழுக்கு இல்லாமல் ஆகவேண்டும். இதற்கு சாக்ஷாத் பராசக்தியும், பரமேசுவர பத்தினியுமான அம்பாளுடைய சரணாரவிந்தத் தியானம்தான் வழி.  அம்பாளின் சரணத்தைத் தியானித்துக் கொண்டே இருந்தால் அழுக்கெல்லாம் போய்,  குறை எல்லாம் தீர்ந்து பூரணமாக அப்படியே நிரம்பிப் போய்விடுவோம். அழுக்கும் குறையும் உள்ள ஜீவர்களாக நாம் உண்டாகியிருப்பது அவள் விளையாட்டுத்தான்.  எனவே இதிலிருந்து நம்மை மீட்டு நிர்மலமாக, பூரணமாகப் பண்ணுவதும் அவள் காரியம்தான். ஆடு மாடு மாதிரி சாகாமல், சாந்தியும் ஆனந்தமும் நிரம்பி நம் உயிர் உடம்பிலிருந்து பிரிந்து மறுபடியும் உடம்பு எடுக்காமல் இருப்பதற்காகத்தான் இத்தனை மதங்களும் உள்ளன.  அம்பாளின் தியானத்தைவிட, வேறு மதம் வேண்டியதே இல்லை; சாந்தியும், ஆனந்தமும் தந்து நம்மை பூரணத்துவம் அடையச் செய்வது அதுவே. அம்பாளைத் தியானித்து தியானித்து நம்மில் யாராவது நிரம்பிப் போய்விட்டால்...

அம்பாளும் அவளது குணங்களும்.

Image
 அம்பாளும் அவளது குணங்களும். அம்பாள், சத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய மூன்று குணங்களைக் கொண்டவள். சத்வம் என்பது தூய்மை, அறிவு, ஞானம், இரஜஸ் என்பது செயல், இச்சா சக்தி, தமஸ் என்பது அறியாமை, அறியாமை எனப்படுகிறது.  அம்பாள் தனது சத்வ குணமாக சித்தம், இச்சா சக்தி, கிரியா சக்தியாகவும் வெளிப்படுகிறாள்,  சத்வம் (Sattva): இது தூய்மையான குணமாகும், இது அறிவு, ஞானம், அமைதி, நல்லிணக்கம் போன்றவற்றை வெளிப்படுத்துகிறது. அம்பாள் சத்வ குணத்தின் மூலம் தூய்மையான அறிவையும், ஞானத்தையும், அமைதியையும் வழங்குகிறாள். ரஜஸ் (Rajas): இது செயல், ஆர்வம், இயக்கம் போன்றவற்றை வெளிப்படுத்துகிறது.  அம்பாள் ரஜஸ் குணத்தின் மூலம் இச்சா சக்தி, செயல் திறன் ஆகியவற்றை வழங்குகிறாள். தமஸ் (Tamas): இது அறியாமை, மந்தம், மந்த நிலை போன்றவற்றை வெளிப்படுத்துகிறது.  அம்பாள் தமஸ் குணத்தின் மூலம் அறியாமை, மந்தத்தை போக்கி, தெளிவையும், அறிவையும் வழங்குகிறாள்.  இந்த மூன்று குணங்களும் அம்பாளின் அனைத்து ரூபங்களிலும் வெளிப்படுகின்றன.  உதாரணமாக,  துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி போன்ற ரூபங்களில்,  அம்பாள் சத்வம், ரஜஸ்...

லலிதா சகஸ்ரநாமம் ஏன் படிக்கவேண்டும்?

Image
 லலிதா சகஸ்ரநாமம்  ஏன் படிக்கவேண்டும்?  லலிதா மகா திரிபுரசுந்தரி  சிவனோடு ஒன்றிணைந்த  பிரிக்கமுடியாத ஆதிப் பரம்பொருள். சிவசக்தி ஐக்கியம் என்று பெயர்.  இதற்கு மேல் தெய்வம் ஏதுமில்லை. "துவளேன் இனி ஒரு தெய்வம்  உண்டாக மெய்த் தொண்டு செய்தே" என்கிறார் அபிராமி பட்டர்.  சகஸ்ரநாமம் என்பது அன்னையின்  ஆயிரம் பெயர்கள்.  லலிதா சகஸ்ர நாமத்தைப் பாராயணம் செய்யும்போது லலிதாம்பிகையின்  பெருமைகள் மட்டுமல்ல, ஆன்மிகம் பற்றிய விழிப்புணர்வு  மந்திரங்கள் தந்திரங்கள்  பிரபஞ்சத்தின் படைப்பு ரகசியங்கள்  என்று முழுமையான ஞானம்  உருவாகும்.  சரஸ்வதியின் குருவான ஹயக்ரீவர்  அகத்திய மகரிஷிக்கு லலிதா  சகஸ்ரநாமத்தின் பெருமைகளை  பின்வருமாறு கூறுகிறார். தேவியின் ஆயிரம் நாமங்களை  உமக்குக் கூறினேன் இவை ரகசியங்களுள் ரகசியமானது.  இதைப் போன்ற துதி ஒன்றுமில்லை.  இது நோய்களைப்போக்கும்.  செல்வத்தை அளிக்கும்.  அபமிருத்யுவைப் போக்கும்.  (அப மிருத்யு என்றால் அகால மரணம் ) நீண்ட ஆயுள் தரும். பிள்ளைப் பேறு இல்லாதவ...

"ஏழு பெரிய முனிவர்கள் (சப்தரிஷி)...

Image
 பகவான் அன்புடன் விளக்குகிறார்... .. ॐ १.. "ஏழு பெரிய முனிவர்கள் (சப்தரிஷி)...  வசிஷ்டர்,  விஸ்வாமித்திரர்,  அங்கிரஸ்,  அத்ரி,  பிருகு,  புலஸ்தியர் மற்றும்  மரீச்சி - தெய்வீக ஞானம் மற்றும் ஆன்மீக அறிவின் மூலம் மனிதகுலத்தை வழிநடத்தும் வான ரிஷிகள்." பங்களிப்புகள்: வசிஷ்டர்: அரச குரு மற்றும் பல வேத பாடல்களின் ஆசிரியர்; ராமர் போன்ற மன்னர்களுக்கு ஆன்மீக ஞானம் மற்றும் வழிகாட்டுதலுக்காக அறியப்பட்டவர். விஸ்வாமித்திரர்: முதலில் தீவிர தவத்தின் மூலம் முனிவராக மாறிய மன்னர்; காயத்ரி மந்திரத்தை உருவாக்கியவர் மற்றும் ராமர் மற்றும் லட்சுமணருக்கு வழிகாட்டி. அங்கிரஸ்: ஆரம்பகால வேத முனிவர்களில் ஒருவர்; ரிக்வேதத்திற்கு பங்களித்தவர் மற்றும் நெருப்பு வழிபாட்டு சடங்குகளை நிறுவியவர். அத்ரி: தனது பாடல்கள் மற்றும் வானியல் அறிவுக்கு பெயர் பெற்ற வேத முனிவர்; தத்தாத்ரேயர் மற்றும் பல மரியாதைக்குரிய நபர்களின் தந்தை. பிருகு: கணிப்பு ஜோதிடத்தை தொகுத்தவர் (பிருகு சம்ஹிதை);  கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் பற்றிய அறிவுக்குப் பெயர் பெற்றவர். புலஸ்தியர்: ராவணனின் தாத்...

மஹாபெரியவா அருள்வாக்கு

Image
 மஹாபெரியவா அருள்வாக்கு "அவர் ஈஸ்வர அவதாரம் அவரைவிட்டுப் போகாதே" ( சபரிமலை மேல் சாந்தி என்னும் அர்ச்சகர் சொன்ன தெய்வவாக்கு, தெய்வ ரகசியமாக உணர்த்தப்பட்ட நேரத்தில்) ஸ்ரீமடம் பாலுவிற்கு ஏற்பட்ட உணர்ச்சிப் பெருக்கு) ஸ்ரீமடம் பாலு மகாபெரியவாளின் நிழல் என்றுதான சொல்ல வேண்டும். 1954-ம் வருடம் முதல் மகானை மிகவும் கண்ணும் கருத்துமாக கவனித்து வந்தவர். ஒரு சமயம்,மகா பெரியவாளுக்கு மார்வலி வந்து அவஸ்தைப்படுவதைக் கண்ணுற்ற பாலு.அதற்காகவே சபரிமலை ஐயப்பனிடம் வேண்டிக் கொண்டார். எனவே சபரிமலை சென்றுவர மகாபெரியவாளிடம் உத்தரவு கேட்டார். கேலியான புன்னகையுடன்,   "என்னடா உன் அப்பா,தாத்தா யாராவது சபரிமலைக்குப் போயிருக்காளா?  உனக்கென்ன தெரியுமுன்னு நீ போறேங்கறே?" என்று கேட்டார் ஆசார்யா. "அவா யாரும் போனதில்லே பெரியவா.பெரியவாளுக்கு அடிக்கடி வரும் மார்வலி சரியாகணும்னு ஐயப்பனை வேண்டிண்டேன்.அதனாலே மலைக்குப் போயிட்டு வரேன்" என்று மகானிடம்  வேண்டி நின்றார் பாலு. பாலு சொன்னதைக் கேட்ட மகான் சற்று நேரம் யோசிப்பது போலிருந்தது - பிறகு சொன்னார். "நீ வெள்ளை வேட்டியோடேயே போலாம் - நீ பிரம்மச்...

#அபிராமிஅந்தாதிபாடல்-20#

Image
#அபிராமிஅந்தாதிபாடல்-20# அசையா சொத்துக்கள் (வீடு, நிலம்) போன்றவை கிட்டும். உறைகின்ற நின் திருக்கோவில் -  நின் கேள்வர்  ஒரு பக்கமோ அறைகின்ற  நான்மறையின் அடியோ முடியோ,  அமுதம் நிறைகின்ற வெண்திங்களோ,  கஞ்சமோ,  எந்தன் நெஞ்சகமோ , மறைகின்ற வாரிதியோ?  பூரணாசல மங்கலையே பூரணாசல - நிறைந்த குன்று மங்கலை - மங்களம் நிறைந்தவள் அன்னையே,  நீ என்றும் நிறைந்தவள்.  மங்களமே வடிவானவள் (பவானி, சிவானி என்ற பெயர்கள் மங்கள வடிவை குறிக்கின்றன).  நீ எங்கு இருக்கிறாய்?  நின் கணவர் (கேள்வர்) சிவனின் ஒரு பாகத்திலா?  அல்லது  நான் மறையின் ஆதியில்  அல்லது முடிவில்?  அமுதம் பொழியும் வெண்மையான சந்திரனிலா?  அல்லது  (கஞ்சம் - தாமரை)  தாமரையிலா? அல்லது எனது நெஞ்சத்திலா?  அல்லது செல்வமெல்லாம் மறைந்திருக்கும் பாற்கடலிலா?  எல்லா இடத்திலும் நிறைந்து இருக்கிறாய்.  அதனால்,  எதில் என்று குறிப்பாக சொல்ல முடியாது. பாபநாசம் சிவன்,  தனது  உன்னை அல்லால் வேறே கதி இல்லை அம்மா உலகெல்லாம் ஈன்ற அன்னை (உன்னை அல்லால்) என்னை ...