#அபிராமிஅந்தாதிபாடல்-24#.
#அபிராமிஅந்தாதிபாடல்-24#.
பலன்: நோய்கள் அகலும்
மணியே,
மணியின் ஒளியே,
ஒளிரும் மணி புணைந்த
அணியே,
அணியும் அணிக்கு
அழகே,
அணுகாதவற்கு
பிணியே,
பிணிக்கு மருந்தே,
அமரர் பெருவிருந்தே,
பணியேன் ஒருவரை
நின் பத்ம பாதம் பணிந்த பின்னே.
இப்பாடல், இதற்கு முந்திய பாடல் இரண்டிலும்,
பட்டர், அபிராமியை தவிர வேறொருவரை வணங்கமாட்டேன் என்கிறார்.
வேண்டுவனவற்றை அளிக்கும் சிந்தாமணி அன்னை அபிராமி.
#தரித்ராணாம்சிந்தாமணிகுணநிகா#
என்று சௌந்தர்ய லஹரி 3-வது ஸ்லோகத்தில்
(அவித்யனாம்...) அன்னையின் பாத தூளி கேட்பவர்களுக்கு கேட்டதை அளிக்கும் சிந்தாமணி குவியல் என்று சங்கரர் கூறியுள்ளார்.
அவித்³யாநாமந்த-ஸ்திமிர-மிஹிரத்³வீபநக³ரீஜடா³னாம்ʼ சைதன்ய-ஸ்தப³க-மகரந்த³-ஸ்ருதிஜ²ரீ .
த³ரித்³ராணாம்ʼசிந்தாமணிகு³ணனிகா ஜன்மஜலதௌ⁴
நிமக்³னானாம்ʼ த³ம்ʼஷ்ட்ரா முரரிபு-வராஹஸ்ய ப⁴வதி .. 3..
ஸ்ரீதேவி!
உமது தாமரைப் பாதங்களின் தூசி:
அறியாமையின் இருளை நீக்கும் சூரியர்களின் தீவு நகரம்[1],
மந்தமான புத்திசாலிகளுக்கு அறிவு என்ற அமிர்தத்தை ஊற்றும் மலர்களின் கொத்து[2],
ஏழைகளுக்கு ரத்தினங்களை விளைவிக்கும் ஆசை என்ற மாலை[3].
அது அண்ட பன்றியின் தந்தமாக மாறுகிறது
( வராஹம், விஷ்ணுவின் அவதாரம்)[4]
மக்களை சம்சாரக் கடலில்
(முடிவற்ற பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சி ) மூழ்கடிக்கிறது!
ஒரு சிந்தாமணி இருந்தாலே எல்லாவற்றையும் அளித்துவிடும். இங்கே அன்னையின் பாத தூளியே, சிந்தாமணி குவியல்.
அப்போ அன்னை எப்படிப்பட்டவள்?
அன்னை மணி போல் உயர்ந்தவள்.
அந்த மணியாகிய ரத்தினத்தின் ஒளி அவளே.
ஒளிர்கின்ற ரத்தினங்கள் ஒன்றாய் தொடுத்த அணிகலன் அவளே.
அணிகின்ற அந்த அணிகலனின் அழகும் அன்னையே.
அவளை அணுகாமல் ஒருவர் இருந்தால், அவர் பிணியால் பீடிக்கப்பட்டவர் ஆவார்.
அந்த பிணியும் அவளே.
இங்கு பிணி என்று எதை குறிப்பிடுகிறார்.
சம்சார சாகரத்தில் உழுவது அதாவது புனரபி மரணம் புனரபி ஜனனம் என்ற சங்கரரின் வாக்கையே அவர் பிணி எனக் குறிப்பிடுகிறார்.
காரணம் ஜனனத்துக்கும் அவள் தான் காரணம் மரணத்திற்க்கும் அவள் காரணம் இந்த லோக வியாபாரத்திற்கு அவளே காரணம் அதைத்தான் இங்கு பிணி என்கிறார் பட்டர்.
அவர்கள் திருந்தி அன்னையை அணுகினால், அவருக்கு பிணியை களைந்து அறுத்துவிடுபவள் அன்னையே.
அதனால் அந்த பிணிக்கு மருந்தும் அவளே.
தேவர்களுக்கு அன்னையே சிறந்த பரிசாவாள்.
தேவேந்த்ரனுக்காக பல சமயங்களில் அருள் செய்துள்ளாள்.
இப்படிபட்டவளான அபிராமியின் தாமரை பாதங்களை விடுத்து வேறொன்றையும் பணிய மாட்டேன்.
Comments
Post a Comment