#அபிராமிஅந்தாதிபாடல்-25#
#அபிராமிஅந்தாதிபாடல்-25#
பலன் - நினைத்த காரியம் கைக்கூடும்
பின்னே திரிந்து,
உன் அடியாரை பேணி,
பிறப்பறுக்க முன்னே
தவங்கள் முயன்று கொண்டேன்,
முதல் மூவருக்கும்
அன்னே,
உலகுக்கு அபிராமி என்னும்
அருமருந்தே
என்னே?
இனி உன்னை யான்
மறவாமல் நின்று ஏத்துவனே.
பொருள்:
மும்மூர்த்திகளுக்கும் தாயே,
அவள் ஆதிபராசக்தி, அதனால் அவளிடமிருந்து மூன்று பிரம்மாக்களை தோன்றிவித்தால் அதனால் அவள் மூவருக்கும் அன்னை ஆனால்.
உலகுக்கு அருமையான மருந்தே, அன்னை அபிராமியே,
போன பாடலில் கூறியது போல் அவள் இந்த பிறப்பு எனும் பிணிக்கு அவள் அருமருந்தே.
இனி பிறக்கக்கூடாது என்பதற்காக, தவங்கள் பல செய்தேன்,
மறு பிறவி வேண்டாம் என்பதற்கு பல தவங்கள் செய்துக் கொண்டு இருக்கிறேன் என்கிறார் பட்டர்..
உன் அடியார்களுக்கு தொண்டு செய்கிறேன்.
பகவானை விட அவனது பக்தர்களுக்கு தொண்டு செய்தால் பகவானுக்கு மிகவும் பிடித்த ஒன்று.
தனது பக்தைக்காக பிட்டுக்கு மண் சுமந்தான் சுந்தரேஸ்வரர்
அரசன் கட்டிய கோவிலை விட பூசலனார் கட்டிய கோவிலுக்கு திருநீராட்டு விழாவிற்கு இசைந்து வந்தான் என பல வரலாறுகள் உள்ளது.
எப்பொழுதும் உன்னை மட்டுமே மறவாமல் துதி செய்கின்றேன். இனியும் துதிப்பேன்.
கண்ணியது உன் புகழ் -
நான் எப்போதும் பாடல்கள் கொண்டு பாடுவது உன் புகழ்
கற்பது உன் நாமம் -
நான் எப்போதும் கற்பது உன் நாமம்
கசிந்து பக்தி பண்ணியது உன் இரு பாத அம்புயத்தில் -
என் மனம் கசிந்து பக்தி பண்ணுவதோ உன் இரு திருவடித் தாமரைகளில்
அம்புயம் - அம்புஜம் என்னும்
வடமொழிப் பெயரின் திரிபு;
அம்பு - நீர்,
ஜம் - பிறந்தது;
நீரில் பிறந்த மலர்
அம்புஜம்-தாமரை.
தாமரைப்போன்ற பாதாம்பூயம். அம்பாளின் திருவடி தாமரையில் சரணாகதி என்பதை குறிப்பிடுகிறார்.
அனைத்து மஹான்களும் அடைய நினைப்பது அம்பாளின் பாதார விந்தமாகிய பத்மபாதமலரில் சரணடைவது தான்.
அதைத் தான் ஒவ்வொரு பாடலிலும் திரும்ப திரும்ப பாடிகிறார்.
#இதைதான்மஹாபெரியவாதெய்வத்தின்குரலில்எனக்குமுக்யம்அம்பாள்என்றதலைப்பில்அருளிஇருப்பார்#.
Comments
Post a Comment