Posts

#அபிராமிஅந்தாதிபாடல்60 :

Image
 #அபிராமிஅந்தாதிபாடல்60 : பாலினும் சொல் இனியாய்!  பனி மா மலர்ப் பாதம் வைக்க மாலினும், தேவர் வணங்க நின்றோன்  கொன்றை வார் சடையின் மேலினும்,  கீழ்னின்று வேதங்கள் பாடும் மெய்ப்பீடம் ஒருநாலினும்,  சால நன்றோ அடியேனுடை  நாய்த் தலையே? என்னை தண்டித்து விடாதே அம்மா என்று முந்திய பாடலில் சொன்ன அபிராமி பட்டர்,  இந்தப் பாடலிலே,  அபிராமி அன்னையின் அருளைப் பற்றிப் பேசுகிறார். உன்னை நெஞ்சில் நினைக்க இயலாத என்னை நீ தண்டிப்பது முறையா?  என்று சென்ற பாடலில் கேட்ட பட்டரின், தலையிலே தனது  பத்மபாதங்களை வைத்து அந்த அபிராமி அன்னை அற்புதம்  அல்லவா நிகழ்த்தி விட்டாள்! நான் உன் குழந்தை,  தனது குழந்தையை எந்தத் தாயாவது தண்டிப்பாளா? என்று முந்திய பாடலிலே கேட்ட பட்டருக்கு தனது பாத கமலங்களையே அல்லவா அளித்து விட்டாள் அந்தத் தாய்!  அந்த அருளை நினத்து நினைத்து உருகிப் பாடுகிறார் பட்டர். அம்மா! நீ என் தலையிலே உனது பாதங்களைப் பதித்து விட்டாய். இந்தப் பாத கமலங்களது தரிசனமாவது கிடைக்காதா என ஏங்குவோர் பலருண்டு. "அம்மா! பாலை விட இனிய சொல் அல்லவா உனது சொல்!...

#அபிராமிஅந்தாதிபாடல்59

Image
 #அபிராமிஅந்தாதிபாடல்59 பலன்: குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்கள் வளரும் தஞ்சம் பிறிது  இல்லை ஈது  அல்லது,  என்று உன் தவனெறிக்கே நெஞ்சம் பயில நினைகின்றிலேன்;  ஒற்றை நீள்சிலையும் அஞ்சம்பும் இக்கலராகி நின்றாய்:  அறியார் எனினும் பஞ்சு அஞ்சு  மெல் அடியார்,  அடியார் பெற்ற  பாலரையே  அபிராமி அன்னையின் தாளன்றி வேறொரு தஞ்சம் இல்லை என்று தெரிந்தும்கூட,  அந்த சரணங்களிலே மனம் பயில மறுக்கின்றதே -  இந்த மனதை நான் என்ன செய்வது அம்மா? என்று கேட்டு  இந்தப் பாடலைத் தொடங்குகிறார் அபிராமி பட்டர். அந்த அபிராமியானவள் கைகளிலே கரும்பு வில் வைத்துக் கொண்டு இருக்கிறாள்.  ஐந்து மலர்களால் ஆனபாணரங்களையும் கொண்டிருக்கிறாள்.  காமத்தாலும்,  கோபத்தாலும்,  க்ரோதத்தாலும்  அலைபாயும்  மனதை அடக்க,  அவளது திருவடிகளை நினைப்பது அன்றி வேறொரு உபாயம் எதுவும் இல்லை.  ஆனாலும், இந்த மனது அந்த தவ சரணங்களை நினைக்காமல் மற்ற எல்லாவற்றையும் நினைக்கின்றது. அந்த அபிராமியின் மேல் உள்ள தவம் உறுதியானதாக இருந்தால்,  மனமும்,...

#அபிராமிஅந்தாதிபாடல்58

Image
 #அபிராமிஅந்தாதிபாடல்58 அருணாம்புயத்தும்  என் சித்தாம்புயத்தும் அமர்ந்திருக்கும் தருணாம்  புயமுலைத்தையல்  நல்லாள் தகை சேர்  நயனக் கருணாம்புயமும் வதனாம்புயமும்  கராம்புயமும் சரணாம்புயமும்  அல்லால்  கண்டிலேன்  ஒரு தஞ்சமுமே அம்பாளை ஒரு தாமரை மலராக வர்ணிக்கிறார். அன்னை அபிராமியைத் தாமரை மலரிலேயே வைத்துப் பின்னர், தாமரை மலராகவே பார்த்து,  அழகு பார்க்கிறார், பட்டர். அன்னை செந்தாமரை மலரிலே வீற்றிருக்கிறாள்.  அந்த செந்தாமரை மலர்,  சூரியனை ஒத்து இருக்கிறது.  அதைப் பார்க்கும்போது,  சூரியனே ஒரு செந்தாமரை மலராக வந்தது போல இருக்கிறது.  அந்த அருணனால்,  சூரியனால் செயப்பட்ட தாமரை மலரின் மீது வீற்றிருக்கும் அந்த அன்னை,  எனது மனத் தாமரையிலும் அமர்ந்து இருக்கிறாள். அந்த அன்னையின் இரு ஸ்தனங்களும் கூட,  குவிந்த இரு தாமரை மலர்கள் போலக் காட்சி தருகின்றன. அந்த மாதர்களில் சிறந்த பெண்மணியான என் அன்னையின் கண்களும் கருணை பொழிந்து கொண்டு,அழகிய இரு தாமரை மலரக்ளையே ஒத்து இருக்கின்றன.  அவளது முகமும்,  அரவிந்த மலரின...

அபிராமிஅந்தாதிபாடல்57

Image
 #அபிராமிஅந்தாதிபாடல்57 ஐயன் அளந்த படி  இரு நாழி கொண்டு  அண்டம் எல்லாம் உய்ய அறம் செயும்  உன்னையும் போற்றி  ஒருவர் தம் பால் செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு  சென்று பொய்யும் மெய்யும் இயம்ப வைத்தாய்  இதுவோ உந்தன் மெய்யருளே. ஏ, அபிராமி!  எந்தத் தமிழ்ப் பாமாலையால் உன்னைப் பாடினேனோ,  அதே தமிழ்ப் பாமாலையால், மனிதர்களைப் பற்றிப் பாடவும், அவர்களிடம் பொய்யும் மெய்யும் பேசவும் வைத்துவிட்டாயே அன்று அங்கலாய்த்துக் கொள்ளுகிறார். இங்கும், நிறைய உள்ளர்த்தம் பொதிந்து காணப்படுகின்றது. அமாவாசை அன்று, 'இன்று பௌர்ணமி' என்று சொன்னது பொய் வாக்குதானே.  ஆனாலும், அந்தப் பொய் வாக்கும், அன்னையின் கடைக்கண் பட்டுவிட்டால், மெய் வாக்காகிவிடாதா என்ன?  இந்தப் பொருள் படும்படி, 'பொய்யும், மெய்யும் இயம்ப வைத்தாய்' என்று பாடலிலே வந்தது. உன்னைப் பாடிய வாயினால், சாதாரண மனிதர்களிடம் பேச வைத்து விட்டாயே,  அவர்களைப் பற்றிய இருப்பதையும், சில இல்லாததையும் ப்ற்றியெல்லாம் பாடும்படி,  அப்படிப் பாடுவதனால் அவர்கள் கொடுக்கும் பொருளைக்கொண்டு வாழும்படி வைத...

மஹேஷ்வரமஹாகல்பமஹாதாண்டவசக்ஷிணியில்

Image
 #மஹேஷ்வரமஹாகல்பமஹாதாண்டவசக்ஷிணியில் # நேற்று பட்டரின் 56வது பாடலின் சற்று விரிவான பதிவு  ஶ்ரீலலிதா சஹஸ்ர நாமம் மற்றும் சௌந்தயலஹரி ஸ்லோகம் 26லிருந்து மஹா-பிரளய-சக்ஷிணி  மகா-महा-प्रलय-सक्षिणी (571) மஹா-பிரளயம் என்பது நாமம் 232  #மஹேஷ்வர-மஹாகல்ப-மஹா-தாண்டவ-சக்ஷிணியில்# விவாதிக்கப்பட்ட முழுமையான கலைப்பு ஆகும்.  அழிவு வெளிப்படும்போது, ​​ முழு பிரபஞ்சமும் சிவனில் கரைந்துவிடும். இது படைப்பின் தலைகீழ் செயல்பாட்டில் சரியாக நிகழ்கிறது. படைப்பின் போது ஆகாஷம் பிரம்மனில் இருந்து பிறந்தார்,  காற்று ஆகாஷத்தில் இருந்து பிறந்தது,  முதலியன.  அழிவின் போது, ​​காற்று ஆகாஷித்திலும்  ஆகாஷம் சிவத்திலும் கரைந்துவிடும். இந்த செயல்முறை பரிணாம வளர்ச்சிக்கு மாறாக ஊடுருவல் என்று அழைக்கப்படுகிறது, இது படைப்பின் போது நடக்கும் ஒரு செயல்முறையாகும். இந்த நாமம், அவள் மட்டுமே அந்த மகா பிரளயத்திற்கு சாட்சி என்று கூறுகிறது.  இவ்வளவு பெரிய பிரளயம் சிவனின் கட்டளைப்படி வெளிப்படுகிறது.  அவர் அழிவின் போது தனது புகழ்பெற்ற அண்ட நடனத்தைத் தொடங்குகிறார்.  #பேரண்டம்(#மேக்ரோக...

அம்பாளின் பாதாரவிந்த்தில் சரணாகதி?

Image
எவ்வாறு அம்பாளின் பாதாரவிந்த்தில் சரணாகதி? எனது நண்பர் திரு.இராஜராஜம் அவரது கூற்று தான் எனது சிந்தனையில் உதிக்கின்றது. அவர் கூறியது பகவான் நமது வாழ்க்கையை சிறு சிறு வட்டங்களாகி ஒரு வட்டத்தில் நம்மை விட்டு சில பல சிக்கல்களைக் கொடுத்து அதிலிருந்து மீள்கிறோமா என பார்பார். அதிலிருந்து மீண்டு வந்தாள். நம்மை அடுத்த வட்டத்தில் எடுத்துச் செல்வார் தற்போது எனது அனுபவத்திலிருந்து புலப்படுகிறது. அவ்வாறாகவே என்னை ஒவ்வொரு வட்டத்தில் இட்டு அடுத்த வட்டத்துக்கு எடுத்துச்செல்கிறாள். அவ்வாறான அடுத்த வட்டம் இந்த பதிவு. இந்த காலகட்டம் சுமார் 2021 எனது மாமியாரின் மரணம்.  அவர்கள் கிட்டத்தட்ட 50வருட காலம் சௌந்தயலஹரி லோகம் பாரயணம் செய்தவர்கள் அவர்கள் கூட எனது மனைவி மற்றும் இரு சகோதரிகளும் பாராயணம் செய்து வந்தனர். எனது மாமியார் மரணம் செவ்வாய் கிழமை அன்று  இராகு காலத்தில் அதாவது 3 to 4.30மணிவாக்கில் எனது மனைவியை விட்டு அம்பாளுக்கு விளக்கு ஏற்றச் சொல்லி மற்றும் எனது மனைவி கையால் குங்குமத்தை வாங்கி இட்டுக் கொண்ட பிறகு அவர்களது மரணம் சம்பாவித்து. அதன் பிறகு அவர்கள் பூஜை செய்த அனைத்து அம்பாகளையும் இன்று நான...

#அபிராமிஅந்தாதிபாடல்55

Image
 #அபிராமிஅந்தாதிபாடல்55 மின்னாயிரம் ஒரு மெய் வடிவு  ஆகி விளங்குகின்றது அன்னாள் அகம் மகிழ்  ஆனந்தவல்லி  அருமறைக்கு முன்னாய் நடு  எங்குமாய் முடிவாய  முதல்வி தன்னை உன்னாது ஒழியினும்  உன்னினும் வேண்டுவது  ஒன்றில்லையே அபிராமி தாயே!  நீ ஆயிரம் மின்னல்கள் சேர்ந்தாற் போன்ற வடிவுடையவள்!  தன்னுடைய அடியவர்களுக்கு அகமகிழ்ச்சி தரக்கூடிய ஆனந்த வல்லி!  அருமையான வேதத்திற்கு தொடக்கமாகவும் நடுவாகவும், முடிவாகவும் விளங்கும் முதற் பொருளானவள்!  உன்னை மானிடர் நினையாது விட்டாலும்,  நினைத்திருந்தாலும், அதனால் உனக்கு ஆகக்கூடிய பொருள் ஒன்றும் இல்லையே! மின்னாயிரம் ஒரு மெய் வடிவு ஆகி விளங்குகின்றது அன்னாள் -  ஆயிரம் மின்னல்கள் ஒரே நேரத்தில் உண்மை வடிவாகி விளங்குவதைப் போல் ஒளியுடையத் திருமேனி கொண்டவளை அகம் மகிழ் ஆனந்தவல்லி -  என்றும் உள்ளத்தில் மகிழ்ச்சியே கொண்டிருக்கும் ஆனந்த வடிவானவளை அருமறைக்கு முன்னாய் நடு எங்குமாய் முடிவாய முதல்வி தன்னை -  எல்லா வேதங்களுக்கும் தொடக்கமாகவும் நடுவாகவும் முடிவாகவும் மற்ற எந்த நிலையாகவும் நிற்கின்ற முத...