அபிராமிஅந்தாதிபாடல்92
மெல்லிய நுன் இடை மின் அனையாளை விரிசடையோன் #அபிராமிஅந்தாதிபாடல்92 புல்லிய மென் முலைப் பொன் அனையாளை, புகழ்ந்து மறை சொல்லியவண்ணம் தொழும் அடியாரைத் தொழுமவர்க்கு, பல்லியம் ஆர்த்தெழ, வெண் பகடூரும் பதம் தருமே #பொருள் அபிராமித் தேவி! நீ மின்னல் போலும் மெல்லிய இடையினை உடையவள்; விரிந்த சடைமுடி நாதர் சிவபிரானோடு இணைந்து நிற்கும் மென்மையான முலைகளையுடையவள்; பொன்னைப் போன்றவள். இவ்வாறாகிய உன்னை வேதப்படி தொழுகின்ற அடியார்க்கும் அடியவர்கள், பல்வகை இசைக்கருவிகள் இனிதாக முழங்கிவர, வெள்ளையானையாகிய ஐராவதத்தின் மேலே ஊர்ந்து செல்லும் இந்திரப் பதவி முதலான செல்வ போகங்களைப் பெறுவர். #பொருளுரை அன்னை அபிராமியைத் தொழுபவர்கள் எதைத்தான் அடைய மாட்டார்கள்? அந்த மெல்லிய இடை உடைய எம்பெருமாட்டியை, அந்த மின்னல் போலும் ஒளி பொருந்திய எம் தேவியை, அந்த விரிசடையோனாகிய சிவபெருமானை அணைத்து நிற்கும் எம் அபிராமித் தேவியை, தினம் தினம் தொழுது, அந்த வேதத்தில் கூறிய வண்ணம்...