#அபிராமிஅந்தாதிபாடல்85
பார்க்கும் திசைதொரும் பாசாங்குசமும், பனிச் சிறை வண்டு
#அபிராமிஅந்தாதிபாடல்85
ஆர்க்கும் புதுமலர் ஐந்தும்,
கரும்பும்,
என் அல்லல்
எல்லாம் தீர்க்கும்
திரிபுரையாள்
திரு மேனியும்,
சிற்றிடையும்,
வார்க் குங்கும
முலையும், முலைமேல்
முத்து மாலையுமே
#பொருள்
ஏ, அபிராமி!
நான் எத்திசையை நோக்கினும் உன்னுடைய படைகளாகிய பாசமும், அங்குசமும்,
வண்டுகள் மறைந்திருக்கும்
மலர் அம்பு ஐந்தும்,
கரும்பு வில்லும்,
என்னுடைய துன்பங்களெல்லாம் தீர்க்கக் கூடிய திரிபுரையாகிய
நின் திருமேனி அழகும்,
சிற்றிடையும்,
கச்சையணிந்த
குங்குமம் தோய்ந்த மார்பகங்களும்,
அவற்றின் மேலே அசையும் முத்துமாலையும்
என்கண்முன் காட்சியாய் நிற்கின்றன.
(எங்கும் பரந்தவள்).
#பொருளுரை
பட்டருக்கு,
எங்கு நோக்கினும், அபிராமியே தெரிகிறாள்.
அவளது மேனிப் ப்ரகாசமே தெரிகின்றது.
பார்க்கும் திசைதொறும் அவளது கைகளில் இருக்கும் பாசாங்குசமும், மலர் அம்புகளும் தெரிகின்றன.
அந்த மலர் அம்புகள் இப்போது,
எந்த வேலையும் இன்றி, வெறும் மலர்களாக இருக்கின்றன.
அந்த மலர்கள் மீது வண்டுகள் மொய்த்துக்கொண்டு இருக்கின்றன. கரும்பு வில் தனுசும் காட்சி அளிக்கிறது.
இவை அத்தனையும் கொண்டு, அபிராமி அன்னையின் திருமேனி காட்சி அளிக்கின்றது.
அந்தத் திருமேனி,
நம் அல்லல் எல்லாம் தீர்க்கவந்த ஓர் வடிவு.
அந்தத் திரிபுரையாளின் திரு மேனியும், சிறுத்த இடையும், அந்த இடை மேல் காட்சி அளிக்கும் குங்குமம் தோய்ந்த பெருத்த தனபாரங்களும்,
அவற்றின் மேலே இருக்கும் முத்துமாலையும் தெரிகின்றன.
இந்தக் காட்சி, பட்டருக்கு,
எங்கும் காணக் கிடைக்கின்றது. மனத்திலே தியானம் செய்து செய்து, பழகி,
இப்போது,
எங்கு நோக்கினும், அன்னையின் காட்சியாகவே தோன்றுகின்றது. அந்தக் காட்சி நம் ஊழ்வினைப் பயனை எல்லாம் தீர்க்கின்றது.

Comments
Post a Comment