அபிராமிஅந்தாதிபாடல்90

வருந்தாவகை, என் மனத்தாமரையினில் வந்து புகுந்து,

#அபிராமிஅந்தாதிபாடல்90



இருந்தாள், 


பழைய இருப்பிடமாக; 


இனி எனக்குப்


பொருந்தாது ஒரு பொருள்


 இல்லை-விண் மேவும் 


புலவருக்கு


விருந்தாக வேலை 


மருந்தானதை 


நல்கும் மெல்லியலே!    


#பொருள்


ஏ, அபிராமி!


பகைவர்களது முப்புரத்தை எரிக்க மேருமலையை வில்லாகக் கொண்டவரும், 


திருமாலின் உந்தித் தாமரையில் தோன்றிய பிரம்மனின் சிரம் ஒன்றைக் கிள்ளியழித்தவருமான சிவபெருமானின் இடப்பாகத்தில் சிறந்து வீற்றிருப்பவளே! 


யாருமே துணையில்லாத நான், 


நீயே கதியென்று சரணடைந்தேன்.


ஆகையால் எளியோனாகிய என்னிடத்தில் 


உன் பக்தருக்குள்ள தரம் இல்லையென்று 


நீ தள்ளி விடுதல் தகாது. 


அது உன் அருளுக்கும் அறமன்று.


#பொருளுரை


என்னுடைய மனத் தாமரை, 


எம் அன்னை அபிராமியின் இருப்பிடம். 


அவள் இங்கேயே இருந்தவள்தான். 


நானும், அவளின் அடியிணையிலேயே இருந்த வந்தான். 


ஆனாலும், என் செய்வினையால் என் அன்னையை விட்டுப் பிரிந்துவந்து விட்டேன். 


ஆயினும், அபிராமி அன்னை,


இன்று,


தன்னுடைய அந்தப் பழைய இருப்பிடத்திற்கு வந்துவிட்டாள்.


இனி, எனக்குக் கிடைக்காதது என்று ஏதேனும் உண்டா என்ன? 


அவளே கிடைத்த பின்னர், 


வேறு எதுதான் கிடைக்காமல் இருக்க முடியும்!!


அவளும், எப்படிப் பட்டவள்? 


தனது அன்பர்களுக்கு, எதையும் தரக் கூடியவளாயிற்றே அவள்!


 தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து கடலைக் கடைந்த போது,


தேவர்களுக்காக, அமிர்ததையே வழங்கியவள் அல்லவா அவள்!


அசுரர்கள் போட்டியிட்ட போது, மோகினியாய் உருவெடுத்து வந்து,


தேவர்களுக்கு சேர வேண்டிய அமிர்தத்தை, 


அவர்களுக்கு வழங்கியவள் அன்னை அபிராமி அல்லவா!


அந்த அனை அபிராமி என் உள்ளத்தில் குடி கொண்டிருக்க, 


வேறு என்ன வேண்டும்! 


அனத்தையும் தர அவள் காத்திருக்க, எனக்கு வேறு என்ன வேண்டும்!


Comments

Popular posts from this blog

லலிதா சகஸ்ரநாமம்

அம்பாளின் தாடங்க மஹிமைப் பற்றிய வர்ணணை.

அம்பாள் இருக்க அஹம்பாவம் ஏன்? :