அபிராமிஅந்தாதிபாடல்88

பரம் என்று உனை அடைந்தேன்,

தமியேனும்; உன் பத்தருக்குள்


#அபிராமிஅந்தாதிபாடல்88



பரம் என்று


உனை அடைந்தேன்,


தமியேனும்; 


உன் பத்தருக்குள்


'தரம் அன்று 


இவன்' என்று 


தள்ளத் தகாது-தரியலர்தம்


புரம் அன்று 


எரியப் பொருப்புவில்


வாங்கிய போதில் 


அயன் சிரம் ஒன்று 


செற்ற கையான் 


இடப் பாகம் சிரந்தவளே!            


#பொருள்#


ஏ, அபிராமி! 


பகைவர்களது முப்புரத்தை எரிக்க மேருமலையை வில்லாகக் கொண்டவரும், 


திருமாலின் உந்தித் தாமரையில் தோன்றிய பிரம்மனின் சிரம் ஒன்றைக் கிள்ளியழித்தவருமான சிவபெருமானின் இடப்பாகத்தில் சிறந்து வீற்றிருப்பவளே! 


யாருமே துணையில்லாத நான்,


நீயே கதியென்று சரணடைந்தேன். ஆகையால் 


எளியோனாகிய என்னிடத்தில் 


உன் பக்தருக்குள்ள தரம் இல்லையென்று நீ தள்ளி விடுதல் தகாது. 


அது உன் அருளுக்கும் அறமன்று.


#பொருளுரை#


இவ்வளவு முறையிட்டும், 


அன்னை !


இன்னும் நம்மை முழுதாக எடுத்துக் கொள்ளவில்லையே என்ற ஐயம் அபிராமி பட்டரின் மனதிலே எழுகின்றது. 


"உன்னையே எல்லாம்" என்று 


நான் சரணடைந்து விட்டேன் அம்மா!


அப்படியிருந்தும் நீ என்னை முழுதாக தடுத்தாட் கொள்ளவில்லை. 


அப்படி என்றால், 


உனது பக்தருக்குள், 


நான் நல்ல பக்தன் இல்லையோ? 


உனது அடியார்களுக்குள், 


நான் தரமானவன் இல்லையோ?


இவன் தரம் குறைந்தவன்' 


என்று 


நீ என்னைத் தள்ளி விட்டு விட்டாயோ?


அப்படி நீ என்னைத் தள்ளத் தகாது.


அம்மா! 


அன்று முப்புரம் எரிக்க, 


மேரு மலையையே வில்லாகக் கொண்டவரும், 


சினம் கொண்டு முன்பொருனாள் பிரமனின் சிரமொன்றைக் கொய்தவருமான 


சிவபெருமானின் இடப் பக்கம் வீற்றிருக்கும் என் தாயே!


பிள்ளைகள் பல பெற்ற தாய், 


தனது பிள்ளைகளிலேயே, இயலாமல் இருக்கும் 


பிள்ளையிடம்தான் மிகவும் பாசம் வைப்பாள். 


அதே போல, 


உனது பக்தர்களுக்குள் தரமில்லாத ஒருவனாக நான் இருந்தாலும், 


அதன் காரணமாகவே


 நீ என்னைக் காத்து அருள வேண்டும் என்று சொல்லுகிறார்.


நமது பக்தி என்பது பட்டரை போல அசைக்க முடியாத பக்தியாக இருக்கவேண்டும் என்பதை இந்த பாடலின் மூலம் நாம் உணரலாம்.


Comments

Popular posts from this blog

லலிதா சகஸ்ரநாமம்

அம்பாளின் தாடங்க மஹிமைப் பற்றிய வர்ணணை.

அம்பாள் இருக்க அஹம்பாவம் ஏன்? :