#அபிராமி அந்தாதி பாடல்86ர

 #அபிராமி அந்தாதி பாடல்86


#

மால் அயன் தேட,


மறை தேட, 


வானவர் தேட 


நின்ற காலையும்,


சூடகக் கையையும், 


கொண்டு-கதித்த கப்பு


வேலை வெங்காலன்


என்மேல் விடும்பொது, 


வெளி நில் கண்டாய்


பாலையும் தேனையும் பாகையும்


 போலும் பனிமொழியே!            


#பொருள்#


அபிராமி! 


பாலையும், தேனையும், பாகையும் ஒத்த இனிய மொழியுடையவளே!


இயமன் கோபித்துப் பல கிளைகளைக் கொண்ட சூலத்தை என்மீது செலுத்தும்போது,


திருமாலும், 


பிரம்மனும், 


வேதங்களும், 


வானவர்களும் 


தேடியும் காணாத திருப்பாதங்களையும்


சங்கையணிந்த திருக்கரங்களையும் கொண்டு


 நீ என் முன்னே காட்சி தந்தருள வேண்டும்.


#பொருளுரை#


அம்மா! 


உனது திருப் பாதங்கள்,


அந்த நான்முகனும், 


திருமாலும் தேடியும்கூடக் கிட்டாதவை. 


அந்த மறைகளும் தேடியும்கூடக் காணமுடியாதவை. 


அப்படிப்பட்ட உனது திருப் பாதங்களையும், 


வளையல் சூடிய திருக் கைகளையும் கொண்டு வந்து எனக்குக் காட்சி அளிக்க வேண்டும். எப்போது தெரியுமா?


எனது நேரம் முடிந்து, 


இந்த உடலை விட்டு, 


எனது ஆவி பிரியும் நேரம் வந்துற்றபோது, 


அந்தக் காலன் என்பவன், 


என் மீது, சற்றும் கருணை இன்றி, பல கிளைகளுடைய வேலை என் மீது விடுவான். 


என் ஆவியை இந்த உடலிலிருந்து பிரித்து எடுத்துச் செல்ல வருவான்.


அப்போது, 


அஞ்சல் என்று அபயம் அளித்து, 


என் முன்னே வர வேண்டும். 


உனது திருப் பாதக் கமலங்களை எனக்குத் தந்தருள வேண்டும்.


பாலையும், தேனையும், பாகையும் போன்று இனிய மொழிகள் பேசும் என் அன்னையே! 


உனது இனிய மொழிகள் அந்தத் தருணத்தில் எனது மரண பயத்தைப் போக்க வேண்டும். 


எந்தத் திருப் பாதங்கள்


 இதே திருக் கடவூரிலே மார்க்கண்டேய மஹரிஷிக்காக அந்தக் காலனை எட்டி உதைந்தனவோ, 


அதே திருப்பாதங்கள், எனக்கு மரணம் என்று வரும் போதும்,


 எனக்கு அபயம் அளித்துக் காக்க வேண்டும். மரண பயம் போக்கி அருள வேண்டும்.


#ம்ருத்யுமதனி# என்று லலிதா சஹஸ்ரனாமத்தால் போற்றப்படும்


 அம்மா! 


நீ என்னைக் காத்து அருள வேண்டும் என்ரு சொல்லுகிறார் பட்டர்.


மரணத்தின் வாசலில் நின்று கொண்டு பேசும் பட்டரின் ஆதங்கமும், 


மரண பயமும், 


மரணம் வரும் தருணத்திலாவது அந்த அன்னையின் திருக் காட்சியைக் காண வேண்டும் என்ற அவசரமும் 


இந்தப் பாடலிலே மிக அழகாகத் தெரிகின்றன.


Comments