அபிராமிஅந்தாதி பாடல்79
#அபிராமிஅந்தாதி பாடல்79 விழிக்கே அருள் உண்டு, அபிராம வல்லிக்கு; வேதம் சொன்ன வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு எமக்கு, அவ்வழி கிடக்க, பழிக்கே சுழன்று, வெம் பாவங்களே செய்து, பாழ் நரகக் குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு, என்ன கூட்டு இனியே? #பொருள் அபிராமியின் விழிகளில் என்றும் அருளுண்டு. வேதமுறைப்படி அவளை வழிபட எனக்கு நெஞ்சமும் உண்டு. ஆகையால் பழியையும், பாவத்தையுமே விளைவித்து, பாழ் நரகக்குழியில் அழுந்தி வாடும் பேதையர்களோடு எனக்கு இனி என்ன தொடர்பு? (அபிராமி அன்னை சிறந்த துணையாவாள்). #பொருளுரை1 அருளைத் தவிர வேறொன்றில்லாத விழிகளையுடைய அபிராமியை வழிபடும் முறைகளை அறிந்தபின் அந்த வழியில் செல்லாமல், பாவச் செயல் புரிந்து நரகத்துக்கு வழி தேடுவோருடன் சேரும் வீண் பிறவி எதற்கு? (தேவையில்லை) 'பிறவாமை தரும் அபிராமியை அடையும் வழியறிந்த பின், பிறவிச் சுழலில் சிக்கும் வழிகள் எனக்குத் தேவையில்லை' என்று சுருக்கமாகப் பாடியிருக்கிறார் பட்டர். இந்தப் பாடலின் பின்னணி: 'உன்னை நம்பி நானே உள்ளமிழந்தேனே' என்று உருகி உருகிப் ப...