#அபிராமிஅந்தாதிபாடல்81#

 #அபிராமிஅந்தாதிபாடல்81#



அணங்கே! 


அணங்குகள் 


நின் பரிவாரங்கள் 


ஆகையினால்,


வணங்கேன் ஒருவரை;


வாழ்த்துகிலேன் நெஞ்சில்;


 வஞ்சகரோடு இணங்கேன்; 


எனது உனது என்றிருப்பார் 


சிலர் யாவரொடும்


பிணங்கேன்; 


அறிவு ஒன்றிலேன்; 


#பொருள்


ஏ, அபிராமி! என்னிடத்தில் நீ வைத்த பெருங்கருணையினால் நான் கள்ள நெஞ்சம் உடையவரிடம் நெருங்க மாட்டேன். உலகத்தில் மற்ற சக்திகளெல்லாம் உன்னுடைய பரிவாரத் தேவதைகளேயாகும். ஆதலினால் நான் அவர்களை வணங்க மாட்டேன்; ஒருவரையும் போற்றவும் மாட்டேன்; நான் அறிவில்லாதவனாயினும், என்னுடையதெல்லாம் உன்னுடையது என்று உன்னை வணங்கும் சில ஞானிகளோடு மட்டுமே பிணங்காது சேர்ந்து உறவாடுவேன்!


#பொருளுரை#


என் கண் நீ வைத்த பேரளியே!   


இந்த உலகில் உள்ள அனைத்து சக்திகளும் அன்னையைப் பணிந்து நிற்கின்றன. 


அன்னையின் பரிவாரங்களாக இருக்கின்றன. 


ஆகையினால், தனித் தனியே வேறு வேறு சக்திகளையும் தெய்வங்களையும் தொழுவதிலோ, பணிந்து நிற்பதிலோ, பொருள் ஒன்றும் இல்லை. 


ஆகையினால், உன்னைத் தவிர வேறு யாரையும் நான் பணிந்து நிற்க மாட்டேன். 


உன்னைத் தவிர வேறு எந்த தெய்வத்தையும் நான் தொழுது நிற்க மாட்டேன்.


மனதில் வஞ்சம் உடையவரோடு நான் சேர்ந்து இருக்க மாட்டேன். அத்தகையவர்களின் கூட்டு, 


நல்ல எண்ணங்களை அடியோடு அழித்து விடும். ஆகையினால், தீயவர்களோடு, கூட்டு சேர மாட்டேன்.


"எனது என்று இருப்பவையெல்லாம், அன்னையே, உனது" என்ற தெளிவோடு இருக்கும் ஞானியரோடு மட்டுமே சேர்ந்திருப்பேன்.


இந்த அறிவு எல்லாம் தானே உண்டானதா? எனக்குள்ளேயே இருந்ததா என்ன? இல்லை. 


இல்லவே இல்லை. இந்தத் தெளிவு என்பது நீ தந்தது. 


என் மனதிலே நீ வைத்த பெரும் ஒளியாலே வந்தது. உன்னை வணங்கும் அறிவும், உன்னை வாழ்த்தி நிற்கும் திறமும், நீயாகப் பார்த்து எனக்குக் கொடுத்தவைதானே! 


என்று பாடுகிறார் பட்டர்.


இந்தப் பாடலிலே, 


எம்பெருமாட்டியே அனத்து தெய்வங்களுக்கும் தலைவியாய் விளங்குகிறாள் என்று சொல்லப்படுவதையே, 


பல நூல்களும் சுட்டுகின்றன. குறிப்பாய், லலிதா சஹஸ்ரனாமம் மிக அழககக் கூறுகின்றது:


"ப்ரம்ஹோபேந்த்ர மஹேன்ராதி தேவசம்ஸ்துத வைபவா" (83)


"மஹா ஸக்த்யை" (109)


"சர்வேஸ்வரி" (202)


" ஸர்வமயீ" (203)


"ஸர்வமந்த்ர ஸ்வரூபிணி" (204)


"ஸ்ருதி ஸீமந்த ஸிந்தூரி" (289)


"மஹா பைரவ பூஜிதா" (231)


"ஹரிப்ரம்ஹேந்த்ர சேவிதா" (291)


"சிவாராத்யா" (406)


"கால ராத்ரியாதி ஸக்த்யௌகவ்ருதா" (491)


"கமலாக்ஷ நிஷேவிதா" (555)


"கமலா கொடிசேவிதா" (590)


"ஸசாமர ரமாவாணி சவ்யதஷிண சேவிதா" (614)


"ஆதிஸக்தி" (615)


"ஸர்வாதாரா" (659)


இவ்வனைத்தும் அன்னையிடமிருந்து வந்தவை என்றால், 


அந்த அன்னையைத் தொழுதால், அனைத்து சக்திகளையுமே தொழுதாற்போல்தானே!


இதைத்தான், பட்டரும் மிக அழகாக இந்தப் பாடலிலே கூறுகிறார்.

Comments

Popular posts from this blog

லலிதா சகஸ்ரநாமம்

அம்பாளின் தாடங்க மஹிமைப் பற்றிய வர்ணணை.

ஶ்ரீசக்ர தாடங்கங்கள்