அபிராமி அந்தாதி பாடல் 82

 #அபிராமிஅந்தாதிபாடல்82


அளியார் கமலத்தில் ஆரணங்கே!


அகிலாண்டமும்


நின் ஒளியாக நின்ற 


ஒளிர் திருமேனியை


 உள்ளுந்தொரும்,


களியாகி,


அந்தக்கரணங்கள் விம்மி,


 கரைபுரண்டு


வெளியாய்விடின், 


எங்கனே மறப்பேன், 


நின் விரகினையே?      


#பொருள்


ஏ, அபிராமி! 


வண்டுகள் ஆர்க்கும் தாமரையில் வாழ்பவளே!


பேரழகானவளே! உலகமெல்லாம் ஒளியாக நின்ற, 


ஒளிவீசும் உன்னுடைய திருமேனியை நான் நினைக்கும்தோறும் களிப்படை கின்றேன். 


அக்களிப்பின் மிகுதியால் அந்தக் காரணங்கள் விம்மிக் கரைபுரண்டு, பரவெளியாகவுள்ள ஆகாயத்தில் ஒன்றி விடுகின்றன. 


இவ்வளவு பேரருள் காட்டியருளிய உன் தவநெறியை நான் எவ்வாறு மறப்பேன்?


 (மறவேன் ஒருபோதும்).


#பொருளுரை


அந்த அம்பிகை ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலரின் மீது வீற்றிருக்கிறாள். 


வண்டுகள் முரலும் அந்த சோலையிலே புன்முறுவல் பூத்து அவள் அமர்ந்திருக்கிறாள். அழகெல்லாம் ஓருருவாகத் திகழும் ஆரணங்காக அவள் அங்கே இருக்கிறாள்.


இப்படி அம்பிகையை உருத்தோற்றமாய்ப் பார்த்த பட்டர், பின்னர் அன்னையை ஒளித் தோற்றமாய்க் காண்கிறார். 


இந்த உலகெல்லாம் பரவி நிற்கும் ஒளியாய் அந்த அன்னை காட்சி அளிக்கிறாள். 


அன்னையின் திருமேனி, ஒளி வடிவமாய்த் தோற்றுகிறது. அந்த ஒளி வடிவத்தைக் கண்டவுடன், அந்தக் காட்சி கிடைத்தவுடன், 


அந்தக் காட்சியை நினக்கும் பொழுதெல்லாம், தியானம் செய்யும் போதெல்லாம், 


ஒரு களிப்பு தோன்றுகிறது. மனமும் உடலும் விம்மி, கரையற்றுப் போய், இல்லாமல் போய்விடுகின்றன. அப்படிப்பட்ட ஆனந்தம், சொல்லில் அடங்காதது.


சொல்லவொண்ணாதது. 


உடலோ, மனமோ, அனுபவிக்கும் ஆனந்தம் இல்லை அது. உடலால் அனுபவிக்கும் ஆனந்தம், ஒரு நிலை.


நல்ல தூக்கத்திலே, உடல் என்ற உணர்வு இல்லாமல் போகும்போது, நித்திரையில், 


மனம் அனுபவிக்கும் ஆனந்தம், உடல் பெறும் ஆனந்ததிதினை விட பலபடி மேல். ஆனால், மனமே இல்லாமல் போகும்போது, மனம் என்ற ஒன்று கழண்டுபோய், 


இந்த ஆத்மா அனுபவிக்கும் ஆனந்தம் மிகப் பெரியது.


உடல் அற்றுப் போன நித்திரை நிலையினையே, அந்த நித்திரையின் சுகத்தையே நம்மால், சரியாக விளக்கிவிட முடிவதில்லை.


அப்படி இருக்க, உடல் அற்று, மனமும் அற்றுப் போன நிலையை வர்ணிப்பது என்பது, விளக்குவது என்பது முடியாத விஷயமாகத்தான் இருக்கிறது.


இதனைத்தான், "கண்டவர் விண்டதில்லை" என்று சொல்வார்கள்!


இந்த நிலைதான், 


அனுபூதி நிலை. இது எல்லோருக்கும் வாய்த்துவிடுவது இல்லை. 


மிகப் பெறும் தவத்தால் மட்டுமே சித்திப்பது இது. அப்படி இருக்க, சாதாரணமான எனக்கும் இதை 


நீ கொடுத்துவிட்டாயே! உன் அருளை நான் எவ்வாறு மறக்க முடியும்? என்று கேட்கிறார் பட்டர்.


Comments

Popular posts from this blog

லலிதா சகஸ்ரநாமம்

அம்பாளின் தாடங்க மஹிமைப் பற்றிய வர்ணணை.

அம்பாள் இருக்க அஹம்பாவம் ஏன்? :