Posts

நவதுர்க்கை (தேவநாகரி)

Image
 நவதுர்க்கை (தேவநாகரி) :नवदुर्गा) என்பது துர்க்கா தேவியின் ஒன்பது வடிவங்களைக் குறிக்கும். சமஸ்கிருதத்தில் '#நவ#என்றால் ஒன்பது என பொருள்படும். #வேதங்கள்# #துர்க்கைக்கு ஒன்பது வடிவங்கள் இருப்பதாகக் கூறுகின்றன.  அவை சைலபுத்ரி, பிரமசாரிணி,  சந்திரகாண்டா, கூஷ்மாண்டா,  ஸ்கந்தமாதா,  காத்யாயினி,  காளராத்திரி,  மகாகௌரி,  சித்திதாத்திரி என அன்னை  ஒன்பது வடிவம் கொண்டிருக்கிறாள்.  இந்த ஒன்பது வடிவங்களுக்கும் வட இந்தியாவில் நவராத்திரி நாட்களில் பூஜை செய்வர்.  இந்த ஒன்பது நாட்களும் அன்னையை முறையாக பூஜை செய்தால் அவள் அனைத்து நலன்களும் அள்ளித் தருவாள் என்பது ஐதீகம். 01.#சைலபுத்ரி (Shailaputri),  என்பதற்கு மலைகளின் மகள் என்பது பொருளாகும்.  இவர், இந்து தெய்வமான துர்காவின் வெளிப்பாடாக அறியப்படுகிறார். இந்த வடிவம், #நவராத்திரியின்முதல் நாளில் வணங்கப்படும் நவதுர்காவின் வடிவங்களில் ஒன்றாக உள்ளது இவர், #சதிபவானிபார்வதி அல்லது #ஹேமாவதி என்றும் அழைக்கப் படுகிறார்.  தாய் சைலபுத்ரி என்பது அன்னை இயற்கையின் முழுமையான வடிவம் ஆகும் 02.பிரம்மச்சாரின...

மூன்று கூடங்களுக்கும் மூன்று சக்திகளும்

Image
 நேற்றைய பதிவில் பஞ்ச தசிமந்திரம் மற்றும் மூன்று கூடங்களைக் கண்டோம். மூன்று கூடங்களுக்கும் மூன்று சக்திகளும் உள்ள தொடர்பு என்ன என்ற பதிவைக் காணாலாம். மூன்று கூடங்களுக்கும் மூன்று சக்திகளும் என்பது  இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி ஆகிய மூன்று சக்திகளையும் குறிக்கிறது.  இச்சை என்பது விருப்பம் அல்லது லட்சியம், ஞானம் என்பது அறிவு, கிரியா என்பது செயலில் ஈடுபடும் திறன், இந்த மூன்று சக்திகளும் மனிதர்களுக்கு இன்றியமையாதவை.  மூன்று சக்திகள் விளக்கம் இச்சா சக்தி ( इच्छा शक्ति ):  இது நமது விருப்பங்கள், லட்சியங்கள், மற்றும் குறிக்கோள்களை உள்ளடக்கியது. நாம் எதையாவது விரும்பும் போது அல்லது அடைய வேண்டும் என்று நினைக்கும் போது இந்த சக்தி செயல்படுகிறது. ஞான சக்தி ( ज्ञान शक्ति ):  இது அறிவையும், உணர்வையும் குறிக்கிறது. சரியான புரிதலுக்கும், விவேகத்திற்கும் இது அவசியம். கிரியா சக்தி ( क्रिया शक्ति ):  இது செயலில் ஈடுபடும் திறனைக் குறிக்கிறது. திட்டமிட்ட இலக்கை அடைய தேவையான செயல்களைச் செய்வதற்கும், உருவாக்குவதற்கும் இந்த சக்தி துணை புரிகிறது. இந்த மூன்று சக்திகளும...

#அபிராமிஅந்தாதிபாடல்-50

Image
 #அபிராமிஅந்தாதிபாடல்-50 சகலும் அவளே! அவள் என்றாள் எவள் அவளே ஆதிபராசக்தி அவளின் பலசொரூபங்களை பட்டர் இங்கு விவரிக்கிறார். அவை நாயகி  நான்முகி நாராயணி  கை நளின  பஞ்சசாயகி  சாம்பவி  சங்கரி  சாமளை சாதி நச்சு வாயாகி மாலினி  வாராகி  சூலினி  மாதங்கி  என்று ஆயகியாதி உடையாள்  சரணம் அரண் நமக்கே பொருள் நாயகி - உலகனைத்துக்கும் தலைவி அவளே அன்னை ஆதிபராசக்தி நான்முகி -  நான்முகனான பிரம்மதேவரின் சக்தி அவளே சரஸ்வதி நாராயணி -  நாராயணனின் சக்தி லெக்ஷ்மியும் அவளே கை நளின பஞ்ச சாயகி - தாமரை போன்ற திருக்கரங்களில் ஐந்து மலரம்புகளைத் தாங்கியவள் அவளே லலிதா சாம்பவி -  சம்புவான சிவபெருமானின் சக்தி  அவளே மலைமகள் சங்கரி - சங்கரனின் மனைவி இன்பம் அருள்பவள் சாமளை -  பச்சை வண்ணமுடையவள் அவளே மாதாங்கி மற்றும் மீனாக்ஷி சாதி நச்சு வாய் அகி -  கொடிய நச்சினை வாயில் உடைய பாம்பை அணிந்தவள் அவளே காளி மாலினி -  பலவிதமான மாலைகளை அணிந்தவள்  வாராகி -  உலகங்கள் காக்கும் வராக ரூபிணி வராஹத்தின் பெண் சொரூபம் சூலினி -  திரிசூலம் ...

நவராத்திரி மேன்மை

Image
 நவராத்திரி-4 மஹாபெரியவா தனது பக்தைக்கு நவராத்திரி மேன்மை யைச் சொல்லி அருளிய கதை. நவராத்ரி பரிசு ” ஒன்னோட ஆத்துக்காரர் போனதுக்கு அப்றம் நீ……நவராத்ரி கொலுவையும் மறந்துட்டே!.அதோட, என்னையும் மறந்துட்டே! ரமணியை ஒடனே எங்கிட்ட அனுப்பு…” கனவு கலைந்து திடுக்கிட்டு நெஞ்சு படபடக்க எழுந்து உட்கார்ந்தவள் பக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்த ரமணியை எழுப்பினாள். “ரமணி….கண்ணா ..பெரியவா வந்தாடா ஸொப்பனத்ல ! நாம் நவராத்ரி கொலு ஏன் வைக்கிறதில்லேன்னு கேக்கறா.ஒன்னை பெரியவா ஒடனே வரச் சொல்றா டா!..” ‘பெரியவா இப்போ எங்கியோ வடக்கேலேன்னா இருக்கார். அங்க போக, வர செலவுக்கு நீ எங்கம்மா போவே? ஏதோ கனவு வந்திருக்கு உனக்கு .” ” நான் இதை வெறும் கனவா நினைக்கலேடா ரமணி. பெரியவா கூப்டிருக்கா? கட்டளை. கவலைப்படாத! அவரே வழி காட்டுவார்டா ….” விடிந்ததும், மாடி போர்ஷனில் குடியிருக்கும் ஸர்மா வந்தார். மிகவும் நல்ல மனுஷ்யர். அவரும் அவர் மனைவியும் இவர்களிடம் மிகவும் ஆதரவோடும், அனுஸரணையோடும் இருப்பவர்கள். “அம்மா….நானும், எங்காத்துக்காரியும் நாளன்னிக்கி நார்த் இண்டியா டூர் போறோம். திரும்பி வர எப்டியும் ரெண்டு மாஸம் ஆகலாம். ஒன்னோட ரெண்ட...

அபிராமிஅந்தாதிபாடல்-49

Image
 #அபிராமிஅந்தாதிபாடல்-49 குரம்பை அடுத்து  குடிபுக்க ஆவி  வெங்கூற்றுக்கு இட்ட வரம்பை அடுத்து  அப்போது  வளைக்கை அமைத்து அரம்பை அடுத்த  அரிவையர் சூழ  வந்து அஞ்சல் என்பாய் நரம்பை அடுத்து  இசை வடிவாய்  நின்ற நாயகியே பகவான் நாமத்தை எப்போது சொல்ல ஆரம்பிக்க வேண்டும் என்பதற்கு பட்டரின் அருமையான விளக்கம். நரம்புக் கருவிகளைக் கொண்ட, இசையே வடிவாக உள்ள அபிராமியே!  அடியேனாகிய என்னுடைய உடலையும், அதிலே இணைந்த உயிரையும் கொடுமையான எமன் வந்து பறிக்க,  நானும் மரணத்திற்கு அஞ்சி வருந்துவேன்.  அப்பொழுது அரம்பையரும், தேவமகளிரும் சூழ என்னிடத்து வந்து அஞ்சேல் என்பாய்!  எனக்கு அருள் புரிவாய்! குரம்பை அடுத்து குடிபுக்க ஆவி - உடலை அடிப்படையாகக் கொண்டு அதனில் குடிவந்த உயிர் வெங்கூற்றுக்கு இட்ட வரம்பை அடுத்து மறுகும் அப்போது - வெம்மையுடைய கூற்றுவன் (யமன்) வரும் கால அளவினை அடையும் போது வளைக்கை அமைத்து -  வளையல்கள் அணிந்த உன் திருக்கரங்களை அசைத்து அரம்பை அடுத்த அரிவையர் சூழ வந்து -  அரம்பையைப் போன்ற பெண்கள் சூழ வந்து அஞ்சல் என்பாய் -  அஞ்சா...

நவராத்திரி-1

Image
 நாளை முதல் அடுத்த பத்து நாட்களுக்கு ஊரங்கும் விழா கோலம் பூண்டு காணப்படும். அதுவும் மைலாப்பூர்/மாம்பலம்/நங்கநல்லூர் போன்ற இடங்களில் கேட்கவா  வேண்டாம். ஒரே கன்னியா பெண்கள் மற்றும் சுங்கமலிகளின் எண்ணிக்கை அதிகம் காணப்படும் இடங்கள் இவை. கடந்த பல தினங்களாக மேமாம்பலம் ஆரியாகௌடா வீதியில் எங்கும் நவராத்திரி கொலுபொம்மைமயம். அந்த நவராத்திரியின் தாத்பர்யம் என்ன என்பதை தற்போது பதிவாக காணலாம். நவராத்திரி ஸ்பெஷல்:  கொலுவை ஏன் .. பெரியவாளின்  (காஞ்சி மகா பெரியவா)  பார்வையில் கொலு என்பது நவராத்திரியின் முக்கிய அம்சமாகும்.  அவர் கொலுவை வைப்பதையும், அதில் பல தெய்வங்கள்,  மகா பெரியவாளின் அவதாரங்கள் மற்றும் சாஸ்திரங்கள் பற்றிய பொம்மைகளை வைப்பதையும் வலியுறுத்தினார்.  கொலு வைப்பது என்பது நவராத்திரி பண்டிகையின் ஒரு பகுதியாகும். இது வீடுகளைக் கோலாகலமாக்கி, தர்மத்தைப் போற்றும் விதமாக அமைகிறது.  கொலுவின் சிறப்பு: மகா பெரியவாளின் அருளாட்சி: கொலு வைப்பதன் மூலம் தேவி ஆதிபராசக்தி அருளாட்சி செய்கிறாள் என்று நம்பப்படுகிறது.  இந்த வழிபாட்டு முறையை பலரும் பின்பற்றுகின்ற...

#அபிராமிஅந்தாதிபாடல்-48.

Image
 #அபிராமிஅந்தாதிபாடல்-48. சுடரும் கலைமதி துன்றும்  சடைமுடிக் குன்றில் ஒன்றி படரும் பரிமளப்  பச்சைக்கொடியைப் பதித்து நெஞ்சில இடரும் தவிர்த்து  இமைப்போது  இருப்பார் பின்னும்  எய்துவரோ குடரும் கொழுவும்  குருதியும் தோயும்  குரம்பையிலே பலன்: உடல் மீதுள்ள பற்று விலகும் பொருள்: சுடரும் கலைமதி - ஒளிவீசுகின்ற பிறை சந்திரனை, சடைமுடிக் குன்றில் - தன் குன்றினை ஒத்த சடைமுடியில் அணிந்தவரான சிவபெருமானின் நெஞ்சில் நிறைந்த, பரிமள பச்சைக்கொடி - வாசமிகுந்த பச்சைக்கொடியே,உன்னை தன் நெஞ்சில் வைத்து, எப்போதும் வழிபடும் அடியார்கள், துன்பத்தை தவிர்த்து, மீண்டும் குருதி, தோல், குடல் நிறைந்த இப்பிறவியை பெறாமல் என்றும் மகிழ்வாய் இருப்பார்கள். சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் -  சுடர் வீசும் நிலாத்துண்டு தங்கி வாழும் சடைமுடியை உடைய சிறு குன்று போன்ற சிவபெருமானின் மேல் ஒன்றிப் படரும் பரிமளப் பச்சைக்கொடியைப் -  ஒன்றிப் படர்கின்ற மணம்வீசும் பச்சைக் கொடியைப் போன்ற அம்மையை பதித்து நெஞ்சில் -  மனத்தில் நிலையாகக் கொண்டு இடரும் தவிர்த்து -  இன்ப துன்பங்க...