Posts

ஆசார்யாள் காட்டும் அம்பாள் : பகுதி 3

Image
ஆச்சாரியர் பகவத்பாதாள் பார்வையில் அம்பாள். ஆசார்யாள் காட்டும் அம்பாள் :  தெய்வத்தின் குரல் (முதல் பகுதி) பகுதி 3 த்ருசா த்ராகீயஸ்யா’ என்ற சுலோகத்தில். இப்படியே அம்பாளுடைய சரண கமலங்களைத் துதிக்கிறபோது  “வேதங்கள் தங்கள் சிரசுக்கு ஆபரணமாக எந்த உன் பாதங்களைத் தாங்குகின்றனவோ,  அந்தப் பாதங்களை என் சிரஸிலும்கூட வைப்பாய் அம்மா” என்கிறார். இப்படிக் கேட்பது நியாயமில்லையே என்றால், நியாயம் – அநியாயம் என்பவை காரிய – அகாரியங்களை எடை போடுகிறபோதுதான்.  தயை என்பதோ இப்படி குணங்களை எடைபோட்டுப் பார்ப்பதில்லை.  நீயோ தயையே வடிவமானவள். எனவே, அந்த தயையால் என் தலைமீதும்கூட உன் திருவடிகளை வைப்பாய்” என்கிறார் (தயயா தேஹி சரணௌ) வேதத்தின் சிரஸில் அம்பாளின் பாதம் இருக்கிறது என்பதில் ஒர் உள்ளர்த்தம் உண்டு.  உபநிஷத்துக்களுக்கே சுருதி சிரஸ், வேதங்களின் முடி என்கிற பெயர் இருக்கிறது.  முன்பே நான் ஞானாம்பி கையையைப் பற்றிச் சொல்கிற போது  கேநோபநிஷத்தில் அவளுடைய ஆவிர்பாவத்தைப் பற்றி வருகிறது என்று சொல்லி இருக்கிறேன்.  தேவர்கள் அகம்பாவம் அடைந்தபோது,  அதைப் போக்கி அவர்களுக்கு ஞா...

#அபிராமிஅந்தாதிபாடல்-11#

Image
 #அபிராமிஅந்தாதிபாடல்-11# இல்வாழ்க்கை இன்பமாய் அமையும் ஆனந்தமாய்,  என் அறிவாய்,  நிறைந்த அமுதமுமாய், வான் அந்தமான வடிவுடையாள், மறை நான்கினுக்கும் தான் அந்தமான,  சரணாரவிந்தம் -  தவள நிறக்கானம்  தன் ஆடரங்காம்  எம்பிரான் முடிக் கண்ணியதே  அன்னை அபிராமி அனந்த வடிவினள்.  எனது அறிவாகவும் திகழ்பவள். எங்கும் நிறைந்திருக்கும் அமுதமானவள்.  நிலம்,  நீர் நெருப்பு, காற்று  மற்றும்  ஆகாயம்  எனும் ஐம்பெரும் பூதங்களால் ஆன வடிவுடையவள். நான்கு மறையின் முடிவும் அவளே. அவளே வேதமாதா அப்படிப்பட்ட அன்னையின்  பாதகமலங்கள்,  அம்பாளின் மலர் பாதங்கள். திருவெண்காட்டில் நடனம் புரியும் நடராஜ பெருமானின் தலையின் மேல்  உள்ளது, தவள நிற கானம் -  வெள்ளை நிற காடு  - திருவெண்காடு சிதம்பரத்தில் நடனம் புரியும் முன்பு, பெருமான்,  திருவெண்காட்டில் நடனம் புரிந்ததாக புராணம் கூறுகின்றது. திருவெண்காடு,  ஆதி சிதம்பரம் என்றே அழைக்கப்படுகிறது. அங்குள்ள நடராஜ திருமேனியும் பெருமை வாய்ந்தது. சிவனின் இருப்பிடம் சுடுகாடு என்று கூறுவார்....

ஆச்சாரியர் பகவத்பாதாள் பார்வையில் அம்பாள்

Image
 ஆசார்யாள் காட்டும் அம்பாள் : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி) பகுதி -1. நம்முடைய ஆசாரியர்களான  ஸ்ரீ சங்கர பகவத் பாதர்கள் அம்பிகையை ஸ்தோத்திரம் செய்யும் அநேக கிரந்தங்களை அநுக்கிரஹம் பண்ணியிருக்கிறார்கள்.  ஸெளந்தர்ய லஹரியைத் தவிர,  ‘ஆனந்த லஹரி’, ‘ தேவி புஜங்கம்’, ‘ த்ரிபுர ஸுந்தரி மானஸ பூஜா ஸ்தோத்திரம்’,  ‘த்ரிபுர ஸுந்தரி வேத பாத ஸ்தவம்’ –  இந்த மாதிரி பெரிய ஸ்தோத்திரங்களும்  ‘அன்ன பூர்ணாஷ்டகம்’, ‘அம்பாஷ்டகம்’ மாதிரி சின்னச் சின்ன ஸ்தோத்திரங்களும் தேவீபரமாகச் செய்திருக்கிறார்.  இவைகளை நாம் பாராயணம் பண்ணிக் கொண்டிருந்தாலே போதும். அம்பாளின் அநுக்கிரஹ வெள்ளத்தில் ஆனந்தமாக மிதந்து கொண்டிருக்கலாம்.  பரம அற்புதமான வாக்கிலே இவை அமைந்து இருக்கின்றன.  ஆனாலும், இவற்றைச் செய்த ஆசார்யாளோ துளிக்கூடக் கர்வப்படாமல், எல்லா சக்திகளுக்கும் ஆதாரமாக, சக்தி சமுத்திரமாக இருக்கப்பட்ட அம்பாளை நிரம்பவும் விநயத்தோடு துதிக்கிறார்கள்.
Image
 தெய்வத்தின் குரல் (மூன்றாம் பாகம்) அம்பாள் தத்துவம் கடைசிப் பகுதி -8 ஸெளந்தர்யலஹரி'யில் என்ன வருகிறது? அதில் அம்பாளின் கண்களை அநேக ஸ்லோகங்களில் ஒன்றில் (56) முதலிரண்டு வரிகள்: தவாபர்ணே கர்ணே ஜபநயன பைசுன்ய சகிதா : நிலீயந்தே தோயே நியதம் அநிமேஷா : சபரிகா : அபர்ணே - அபர்ணா என்ற பெயருடைய அம்பிகையே! தவ -  உன்;  கர்ணே - காதில் (காதிடம்) ;  ஜபநயன - பேசுவது போன்ற கண்கள்;  பைசுன்ய சகிதா : - (தங்களைப் பற்றிக்) கோள் சொல்கின்றன என்று பயமடைந்தவையான;  சபரிகா :- பெண் மீன்கள்;  அநிமேஷா :- கண் மூடாதவையாக;  தோயே - ஆற்றுக்குள்; நிலீயந்தே - முழுகி விடுகின்றன (என்பது) , நியதம் - நிச்சயம். மீன் ஏன் எப்போதும் ஆற்றின் மேல் மட்டத்தில் நீந்தாமல் உள்ளுக்குள்ளேயே நீந்திக் கொண்டிருக்கிறது? இதற்கு இங்கே ஆசார்யாள் ஒரு காரணம் கல்பிக்கிறார்.  காதளவோடும் அம்பாளின் கண்களை மீன்கள் பார்த்தன. லோகத்தில் ஒரு புல் பூண்டு புழு பூச்சிகூட விட்டுப் போகாமல் ஜகன்மாதா விழிகளை ஸகல திக்குகளிலும் திருப்பிக் கொண்டிருக்கிறாள்.  அப்போது ஒவ்வொரு சமயம் அவை கண் கோடிக்கு வரும்போது காதைத் தொட்டு...

தெய்வத்தின் குரல் (மூன்றாம் பாகம்) பகுதி -6

Image
 தெய்வத்தின் குரல் (மூன்றாம் பாகம்) பகுதி -6 தெய்வ தத்துவம் ;  தெய்வங்கள் இப்படி இருக்கிறது மீனாக்ஷியின் பெருமை.  மிகவும் உயர்ந்தவர்களாக இருக்கிற குமர குருபரர், நீலகண்ட தீக்ஷிதர் ஆகியவர்களுக்கு மட்டுமில்லாமல்,  'இந்த அம்பாளுக்கு என்ன சக்தி இருக்கிறது?'என்று கேலி பண்ணின ஒரு வெள்ளைக்கார கலெக்டருக்கு* கூடப் பரம கருணையோடு அநுக்ரஹம் பண்ணியிருக்கிறாள். அந்த துரை படுத்துக் கொண்டிருந்த பங்களாவின் மீது இடி விழ இருந்த போது, தூக்கத்திலிருந்தவனை எழுப்பி வெளியேறும்படி எச்சரிக்கைப் பண்ணிக் காப்பாற்றியிருக்கிறாள் அம்பாள். ஸஹஸ்ர நாமத்திலும் ஸெளந்தர்ய லஹரியிலும் ரஹஸ்யமாகச் சொல்லியிருப்பதாலேயே அவளுக்கு விசேஷ மதிப்புக் கொடுத்ததாகிறது. ரொம்பவும் ப்ரியமானவர்கள், ரொம்பவும் மரியாதைப்பட்டவர்கள் ஆகியோரின் பெயரைச் சொல்வதில்லையல்லவா? இப்படித்தான் பாகவத்தில் கூட ராதையின் பெயரைச் சொல்லாமலே ஒரு இடத்தில் மட்டும் ஸ¨சனையாகக் கோடி காட்டியிருக்கிறது என்று சொல்வதுண்டு.  ராதாகிருஷ்ண பக்திக்காரர்கள் கிருஷ்ணனைவிட ராதை ஒரு படி உசத்தி என்பார்கள். கிருஷ்ணனே அவள் காலில் விழுந்து பிரணய கலஹத்தை (ஊடலை) த் த...

அம்பாள் தத்துவம் என்பது,

Image
அம்பாள் தத்துவம் என்பது, பல விஷயங்களை ஒன்றினைந்தது,அவை இந்து மதத்தில் தேவி அல்லது அம்பிகை என்று அழைக்கப்படும். இறைவனுடைய சக்தி, தத்துவம், மற்றும் குணங்களை விளக்கும் ஒரு தத்துவக் கோட்பாடு ஆகும்.  இது,அம்பாளைப் பற்றிய ஆன்மீகப் பார்வையை அளித்து, அவளின் குணங்கள், சக்திகள் மற்றும் வழிபாட்டு முறைகளை விளக்குகிறது.  அம்பாள் தத்துவம், தேவியின் பிரபஞ்ச சக்தியையும், அவளின் அனைத்துப் பரிமாணங்களையும் விளக்குகிறது. அம்பாள் தத்துவம், அம்பாளைப் பற்றிய பல அரிய உண்மைகளையும், ரகசியங்களையும் வெளிப்படுத் துகிறது.  அம்பாளைப் பற்றிய தத்துவத்தை விளக்கும் சில முக்கிய விஷயங்கள்: 01.பிரபஞ்ச சக்தி: அம்பாள், பிரபஞ்சத்தின் சக்தியாகக் கருதப்படுகிறாள். அவள் பிரபஞ்சம் முழுவதையும் ஆளுகிறாள், உருவாக்குகிறாள், பாதுகாப்பவள் மற்றும் அழிப்பவள். 02.சக்தி உருவம்: அம்பாள், இறைவனுடைய சக்தியின் வெளிப்பாடாகக் கருதப்படுகிறாள். அவளின் வெவ்வேறு உருவங்கள், அவளுடைய பல்வேறு சக்திகளையும், குணங்களையும் வெளிப்படுத்துகின்றன. 03.வழிபாட்டு முறைகள்: அம்பாளைப் போற்றி, வணங்குவதற்கு பல வழிபாட்டு முறைகள் உள்ளன.  அவற்றில், ஸ்ரீ ...

தெய்வத்தின் குரல் (மூன்றாம் பாகம்).பகுதி -4

Image
 தெய்வத்தின் குரல் (மூன்றாம் பாகம்) பகுதி -4 தெய்வ தத்துவம் ;  தெய்வங்கள் தீக்ஷிதர் ஏதோ கொஞ்சம் தீர்க்கமாக யோசனை பண்ணி னார்.  அப்புறம் "அப்பா அழாதே! நீ பண்ணின சிலை தத்ரூபமாக இருக்க வேண்டுமென்றுதான் இம்மாதிரி சில்லு தெறித்துப் போகும்படி அம்பாள் பண்ணியி ருக்கிறாள்.  அதனால் அது இருக்கிறபடியே இருக்கட்டும். அப்படியே மண்டபத்தில் வைத்துவிடலாம்"என்று சொல்லி விட்டார். ராணிக்கு அந்த இடத்தில் மச்சம் இருந்திருக்கிறது. தீக்ஷிதருக்கு இது ஸ்புரித்ததால்தான், flash ஆனதால் தான் அப்படிச் சொன்னார். ஸாமுத்ரிகா லக்ஷணப்படி உத்தம ஸ்திரீகளுக்கு இம்மாதிரி மச்சம் இருக்கவேண்டும் என்பதன் படியே ராணிக்கும் இருப்பதைத் தெரிந்து கொண்டார். ஆசாரியும் அதேபோலச் சிலையை மண்டபத்தில் வைத்துவிட்டார். இப்போதும் ஏழு பத்தினிகளோடு இருக்கிற திருமலை நாயகர் சிலையில் பட்ட மஹிஷியின் சிற்பத்தில் இந்த பின்னம் இருக்கிறது. வேலைகளை மேற்பார்வையிட நாயகர் வந்தார். ராணியின் சிலையைப் பார்த்துவிட்டு ஆசாரியிடம்,  "ஏன் இந்த மூளியைச் சரி பண்ணாமலே வைத்திருக்கிறீர்?" என்று கேட்டார். "அந்த இடத்தில் அம்மாதிரி இருப்பதுதான் சரியென்...