#அபிராமிஅந்தாதிபாடல்-11#
#அபிராமிஅந்தாதிபாடல்-11#
இல்வாழ்க்கை இன்பமாய் அமையும்
ஆனந்தமாய்,
என் அறிவாய்,
நிறைந்த அமுதமுமாய்,
வான் அந்தமான வடிவுடையாள்,
மறை நான்கினுக்கும் தான்
அந்தமான,
சரணாரவிந்தம் -
தவள நிறக்கானம்
தன் ஆடரங்காம்
எம்பிரான் முடிக் கண்ணியதே
அன்னை அபிராமி அனந்த
வடிவினள்.
எனது அறிவாகவும் திகழ்பவள்.
எங்கும் நிறைந்திருக்கும்
அமுதமானவள்.
நிலம்,
நீர்
நெருப்பு,
காற்று
மற்றும்
ஆகாயம்
எனும் ஐம்பெரும் பூதங்களால்
ஆன வடிவுடையவள்.
நான்கு மறையின் முடிவும் அவளே.
அவளே வேதமாதா
அப்படிப்பட்ட அன்னையின்
பாதகமலங்கள்,
அம்பாளின் மலர் பாதங்கள்.
திருவெண்காட்டில் நடனம் புரியும் நடராஜ பெருமானின் தலையின் மேல் உள்ளது,
தவள நிற கானம் -
வெள்ளை நிற காடு - திருவெண்காடு
சிதம்பரத்தில் நடனம் புரியும் முன்பு,
பெருமான்,
திருவெண்காட்டில் நடனம் புரிந்ததாக புராணம் கூறுகின்றது.
திருவெண்காடு,
ஆதி சிதம்பரம் என்றே அழைக்கப்படுகிறது.
அங்குள்ள நடராஜ திருமேனியும் பெருமை வாய்ந்தது.
சிவனின் இருப்பிடம் சுடுகாடு என்று கூறுவார்.
சுடுகாட்டில் சம்பல் நிறைய இருக்கும் அல்லவா?
சம்பல் வெள்ளை நிறம்.
திரு வெண்ணீர் என்று சாம்பலாகிய விபூதிக்கு மற்றொரு பெயர்.
அதனால் சாம்பல் நிரம்பிய காடு வெண் காடு என்று பெயர் பெற்றது போலும்.
இறப்பிற்கு பின் உடல் வெந்து போகும் காடு ஆதலால் வெங்காடு,
திரிந்து வெண்காடு என்று ஆகியிருக்கலாம்.
முடி சார்ந்த மன்னனும் முடிவில் பிடி சாம்பால் ஆவார்.
என்பதை உணர்ததுவே திருநீர் மற்றும் திருமண்ணாகும்.
Comments
Post a Comment