ஆசார்யாள் காட்டும் அம்பாள் : பகுதி 3
ஆச்சாரியர் பகவத்பாதாள் பார்வையில் அம்பாள்.
ஆசார்யாள் காட்டும் அம்பாள் :
தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)
பகுதி 3
த்ருசா த்ராகீயஸ்யா’ என்ற சுலோகத்தில்.
இப்படியே அம்பாளுடைய சரண கமலங்களைத் துதிக்கிறபோது
“வேதங்கள் தங்கள் சிரசுக்கு ஆபரணமாக எந்த உன் பாதங்களைத் தாங்குகின்றனவோ,
அந்தப் பாதங்களை என் சிரஸிலும்கூட வைப்பாய் அம்மா” என்கிறார்.
இப்படிக் கேட்பது நியாயமில்லையே என்றால்,
நியாயம் – அநியாயம் என்பவை காரிய – அகாரியங்களை எடை போடுகிறபோதுதான்.
தயை என்பதோ இப்படி குணங்களை எடைபோட்டுப் பார்ப்பதில்லை.
நீயோ தயையே வடிவமானவள்.
எனவே, அந்த தயையால் என் தலைமீதும்கூட உன் திருவடிகளை வைப்பாய்” என்கிறார்
(தயயா தேஹி சரணௌ)
வேதத்தின் சிரஸில் அம்பாளின் பாதம் இருக்கிறது என்பதில் ஒர் உள்ளர்த்தம் உண்டு.
உபநிஷத்துக்களுக்கே சுருதி சிரஸ், வேதங்களின் முடி என்கிற பெயர் இருக்கிறது.
முன்பே நான் ஞானாம்பி கையையைப் பற்றிச் சொல்கிற போது
கேநோபநிஷத்தில் அவளுடைய ஆவிர்பாவத்தைப் பற்றி வருகிறது என்று சொல்லி இருக்கிறேன்.
தேவர்கள் அகம்பாவம் அடைந்தபோது,
அதைப் போக்கி அவர்களுக்கு ஞானம் தருவதாக அம்பிகை தோன்றியதைக் கேநோபநிஷத் சொல்கிறது.
இங்கே ஆசார்யாள் அதை மனஸில் கொண்டே சொல்வதாகத் தெரிகிறது.
அகம்பாவ நிவிருத்தி தானே ஞானத்துக்கு வழி என்று அந்த உபநிஷத்திலிருந்து தெரிகிறது.
அதற்கு ஏற்றாற்போல் இங்கேயும் அகம்பாவமே இல்லாமல்
ரொம்பவும் அடங்கி ‘மமாபி’ “எனக்கும்கூட திருவடி ஸ்பரிசத்தை அநுக்கிரகிப்பாயம்மா” என்கிறார்.
ஒவ்வொரு காரியத்துக்கும் நேராக, முக்கியமான ஒரு பலன் இருப்பதோடு, வேறு சில பலன்களும் ஏற்படுகின்றன.
இந்தப் பலன்களை உத்தேசிக்கா விட்டாலும்கூட, அவை பாட்டுக்கு உண்டாகி விடுகின்றன.
கேநோபநிஷத்தில் அம்பாளைப் பற்றிச் சொல்லியிருப்பதில் இப்படியே ஞானோபதேசம் என்கிற நேர் உத்தேசத்தோடு,
வேறு ஒரு பிரயோஜனமும் நமக்குக் கிடைக்கிறது.
இது ஆத்ம ஞானத்துக்கோ அம்பாள் தத்துவத்துக்கோ சம்பந்தமில்லாதது என்றாலும்கூட,
இதிலும் ஒரு முக்கியத்துவம் நவீன காலத்தவர்களுக்கு இருப்பதால் இவ்விஷயத்தைச் சொல்கிறேன்.
#ஓம்ஶ்ரீகாருண்யதேவியேநமஹ#
Comments
Post a Comment