தெய்வத்தின் குரல் (மூன்றாம் பாகம்).பகுதி -4

 தெய்வத்தின் குரல் (மூன்றாம் பாகம்)

பகுதி -4

தெய்வ தத்துவம் ; 

தெய்வங்கள்

தீக்ஷிதர் ஏதோ கொஞ்சம் தீர்க்கமாக யோசனை பண்ணி


னார். 

அப்புறம் "அப்பா அழாதே!

நீ பண்ணின சிலை தத்ரூபமாக இருக்க வேண்டுமென்றுதான் இம்மாதிரி சில்லு தெறித்துப் போகும்படி அம்பாள் பண்ணியி ருக்கிறாள். 

அதனால் அது இருக்கிறபடியே இருக்கட்டும். அப்படியே மண்டபத்தில் வைத்துவிடலாம்"என்று சொல்லி விட்டார்.

ராணிக்கு அந்த இடத்தில் மச்சம் இருந்திருக்கிறது. தீக்ஷிதருக்கு இது ஸ்புரித்ததால்தான், flash ஆனதால் தான் அப்படிச் சொன்னார்.

ஸாமுத்ரிகா லக்ஷணப்படி உத்தம ஸ்திரீகளுக்கு இம்மாதிரி மச்சம் இருக்கவேண்டும் என்பதன் படியே ராணிக்கும் இருப்பதைத் தெரிந்து கொண்டார்.

ஆசாரியும் அதேபோலச் சிலையை மண்டபத்தில் வைத்துவிட்டார். இப்போதும் ஏழு பத்தினிகளோடு இருக்கிற திருமலை நாயகர் சிலையில் பட்ட மஹிஷியின் சிற்பத்தில் இந்த பின்னம் இருக்கிறது.

வேலைகளை மேற்பார்வையிட நாயகர் வந்தார்.

ராணியின் சிலையைப் பார்த்துவிட்டு ஆசாரியிடம், 

"ஏன் இந்த மூளியைச் சரி பண்ணாமலே வைத்திருக்கிறீர்?" என்று கேட்டார்.

"அந்த இடத்தில் அம்மாதிரி இருப்பதுதான் சரியென்று ஐயா தீக்ஷிதர் சொன்னதால்தான் அப்படியே விட்டுவிட்டேன்"என்று ஆசாரி சொன்னார்.

நீலகண்ட தீக்ஷிதரை 'ஐயா தீக்ஷிதர்'என்றே ஸகலரும் சொல்வார்கள். 

தஞ்சாவூரில் நாயக் ராஜாக்களுக்குப் பிரதம மந்திரியாயிருந்த கோவிந்த தீக்ஷிதருக்கு 'ஐயன்'என்கிற பெயர் வழங்கினதுபோல், 

மதுரையில் மந்திரியாக இருந்த நீலகண்ட தீக்ஷிதருக்கு 'ஐயா'என்ற பெயர் இருந்தது.

ராணிக்கு இப்படி மச்சம் இருப்பது தீக்ஷிதருக்கு எப்படித் தெரிந்தது என்று நாயகருக்கு ஸந்தேஹம் வந்துவிட்டது. மஹா கோபமும் வந்துவிட்டது. 

உடனே அவரைக் கைது பண்ணி அழைத்துக்கொண்டு வரும்படி அவருடைய கிருஹத்துக்கு ஸேவகர்களை அனுப்பினார்.

அப்போது தீக்ஷிதர் கிருஹத்தில் மீனாக்ஷியைத் தான் பூஜை பண்ணிக்கொண்டிருந்தார். 

வேளை கெட்ட வேளையில் ஸேவகர்கள் வந்திருக்கிறார்கள் என்ற உடனேயே அவருக்கு அம்பாள் கிருபையால் என்ன காரணம் என்று புரிந்துவிட்டது.

தீபாராதனைக் கர்ப்பூரத்தை, அப்படியே கண்ணை வைத்துக்கொள்கிற மாதிரி தன் கண்களில் அழுத்திக் கொண்டு விட்டார்.

ஈஸ்வரா நுக்ரஹத்தில் அப்பர் ஸ்வாமிகளுக்குச் சுண்ணாம்புக் காளவாயே 'மாசில் வீணையும் மாலை மதியமு'மாக இருந்தாற்போல,

மீனாக்ஷியின் கருணா கடாக்ஷத்தால் தீக்ஷிதருக்குக் கண்ணைச் சுட்டெரித்துக் கொண்டதும் ஜில்லென்றுதான் இருந்தது!

அப்படியே வாசலுக்கு வந்து, 

"ராஜா எனக்கு என்ன தண்டனை தர வேண்டுமென்று நினைத்தாரோ அதை அவருக்குச் சிரமம் இல்லாமல் நானே பண்ணிக் கொண்டு விட்டேன் என்று சொல்லுங்கள்"என்று ஸேவகர்களிடம் சொன்னார்.

அவர்கள் அப்படியே போய்ச் சொன்னவுடன் நாயகர், 

"இத்தனை பெரிய மஹானைத் தப்பாக நினைத்து அபசாரம் பண்ணி விட்டாமே!"என்று ரொம்பவும் பச்சாத்தாபம் கொண்டார்.

மாணிக்கவாசகரைத் தண்டித்ததற்காக இதே மதுரையில் அரிமர்த்தன பாண்டிய ராஜா எத்தனை துக்கப்பட்டாரோ அத்தனை துக்கப்பட்டார் திருமலை நாயகர்.

உடனே தீக்ஷிதரின் வீட்டுக்கு ஓடோடி வந்தார்.

தாம் பண்ணின அபசாரத்துக்கு மன்னிப்பு வேண்டினார்.

உத்தம குணமுள்ள தீக்ஷிதர்,  ஸந்தேஹப்பட்டது நியாயம்தானே?எவருக்கும் ஏற்படக் கூடிய ஸம்சயம் தானே இது?"என்று பெரும் போக்காகச் சொல்லி மன்னித்து விட்டார்.

"என்னை நீங்கள் மன்னித்தது பெரிதில்லை. 

ஆனால் நீங்கள் இப்படிக் குருடராக இருக்குமளவும் என் மனஸ் எப்படி ஸமாதானப்படும்?அது என்னை உறுத்திக் கொண்டேதான் இருக்கும். எப்படியாவது நீங்கள் மறுபடியும் கண்பார்வை பெற்றால்தான் எனக்கு நிம்மதியாகும்"என்று நாயகர் ரொம்ப மன்றாடினார்.

#ஓம்ஶ்ரீமீனாக்ஷியேநமஹ#.

Comments

Popular posts from this blog

ஶ்ரீசக்ர தாடங்கங்கள்

காயத்ரி மந்திரத்தில் என்ன சிறப்பு சக்தி இருக்கிறது...?

அம்பாளின் தாடங்க மஹிமைப் பற்றிய வர்ணணை.