தெய்வத்தின் குரல் (மூன்றாம் பாகம்) பகுதி -6
தெய்வத்தின் குரல் (மூன்றாம் பாகம்)
பகுதி -6
தெய்வ தத்துவம் ;
தெய்வங்கள்
இப்படி இருக்கிறது மீனாக்ஷியின் பெருமை.
மிகவும் உயர்ந்தவர்களாக இருக்கிற குமர குருபரர், நீலகண்ட தீக்ஷிதர் ஆகியவர்களுக்கு மட்டுமில்லாமல்,
'இந்த அம்பாளுக்கு என்ன சக்தி இருக்கிறது?'என்று கேலி பண்ணின ஒரு வெள்ளைக்கார கலெக்டருக்கு* கூடப் பரம கருணையோடு அநுக்ரஹம் பண்ணியிருக்கிறாள்.
அந்த துரை படுத்துக் கொண்டிருந்த பங்களாவின் மீது இடி விழ இருந்த போது,
தூக்கத்திலிருந்தவனை எழுப்பி வெளியேறும்படி எச்சரிக்கைப் பண்ணிக் காப்பாற்றியிருக்கிறாள் அம்பாள்.
ஸஹஸ்ர நாமத்திலும் ஸெளந்தர்ய லஹரியிலும் ரஹஸ்யமாகச் சொல்லியிருப்பதாலேயே அவளுக்கு விசேஷ மதிப்புக் கொடுத்ததாகிறது.
ரொம்பவும் ப்ரியமானவர்கள், ரொம்பவும் மரியாதைப்பட்டவர்கள் ஆகியோரின் பெயரைச் சொல்வதில்லையல்லவா?
இப்படித்தான் பாகவத்தில் கூட ராதையின் பெயரைச் சொல்லாமலே ஒரு இடத்தில் மட்டும் ஸ¨சனையாகக் கோடி காட்டியிருக்கிறது என்று சொல்வதுண்டு.
ராதாகிருஷ்ண பக்திக்காரர்கள் கிருஷ்ணனைவிட ராதை ஒரு படி உசத்தி என்பார்கள்.
கிருஷ்ணனே அவள் காலில் விழுந்து பிரணய கலஹத்தை (ஊடலை) த் தீர்த்திருப்பதை எடுத்துக் காட்டுவார்கள்.
Comments
Post a Comment