தெய்வத்தின் குரல் (மூன்றாம் பாகம்)
அம்பாள் தத்துவம்
கடைசிப் பகுதி -8
ஸெளந்தர்யலஹரி'யில் என்ன வருகிறது?
அதில் அம்பாளின் கண்களை அநேக ஸ்லோகங்களில் ஒன்றில் (56) முதலிரண்டு வரிகள்:
தவாபர்ணே கர்ணே ஜபநயன பைசுன்ய சகிதா :
நிலீயந்தே தோயே நியதம் அநிமேஷா : சபரிகா :
அபர்ணே - அபர்ணா என்ற பெயருடைய அம்பிகையே! தவ -
உன்;
கர்ணே - காதில் (காதிடம்) ;
ஜபநயன - பேசுவது போன்ற கண்கள்;
பைசுன்ய சகிதா : - (தங்களைப் பற்றிக்) கோள் சொல்கின்றன என்று பயமடைந்தவையான;
சபரிகா :- பெண் மீன்கள்;
அநிமேஷா :- கண் மூடாதவையாக;
தோயே - ஆற்றுக்குள்; நிலீயந்தே - முழுகி விடுகின்றன (என்பது) , நியதம் - நிச்சயம்.
மீன் ஏன் எப்போதும் ஆற்றின் மேல் மட்டத்தில் நீந்தாமல் உள்ளுக்குள்ளேயே நீந்திக் கொண்டிருக்கிறது?
இதற்கு இங்கே ஆசார்யாள் ஒரு காரணம் கல்பிக்கிறார்.
காதளவோடும் அம்பாளின் கண்களை மீன்கள் பார்த்தன.
லோகத்தில் ஒரு புல் பூண்டு புழு பூச்சிகூட விட்டுப் போகாமல் ஜகன்மாதா விழிகளை ஸகல திக்குகளிலும் திருப்பிக் கொண்டிருக்கிறாள்.
அப்போது ஒவ்வொரு சமயம் அவை கண் கோடிக்கு வரும்போது காதைத் தொட்டுவிடும் போலிருக்கிறது.
அப்போது அவை காதிடம் ரஹஸ்யம் பேசுகிற மாதிரி மீன்களுக்குத் தோன்றுகிறது என்ன ரஹஸ்யம்?
உருவத்தில் இந்த மீன்கள் அம்பாளுடைய அந்தக் கண் மாதிரித்தான் இருக்கின்றன.
ஸமஸ்த லோகாநுக்ரஹத்துக்காக
எந்த ஜீவனும் விட்டுப் போய் விடக் கூடாது என்று,
அந்தக் கண்கள் ஓயாமல் சஞ்சரிப்பதைப் பார்த்துக் 'காப்பி'அடிக்கிறது போலத்தான்
இந்த மீன்களும் ஓயாமல் ஒழியாமல் சஞ்சரித்துக் கொண்டே இருக்கின்றன.
இதனால்தான் மீன்களுக்கு பயம் வந்து விடுகிறது.
அம்பாளுடைய கண்கள் அவளுடைய காதிடம், "மீன்கள் என்னோடு போட்டி போடுகின்றன"என்று ரஹஸ்யமாகக் கோள் சொல்கின்றனவோ என்று பயம்!கண்களுடைய பெடிஷனைக் கேட்டு மஹா பராசக்தியானவள் இந்த அல்ப ஜந்துவான மீன்கள் மேல் ஆன் எடுக்க வந்து விட்டால்?
இந்த பயத்தில்தான் நீர் மட்டத்தின் மேல் பரப்பில் நீந்தாமல் அவை உள்ளுக்குள் மறைவாக முழுகிவிடுகின்றன!.
அம்பாளின் கண்களும் மீன் போல் கண் இமைக்காமல் இந்த லோகத்தை காக்கிறாள்.
அவள் கண்ணை மூடினால் லோகத்தில் ப்ரளயம் ஏற்படும்.
அதனால் அவள் கண் இமைப்பத்தில்லை.
அதனாலேயே மீனாக்ஷி என அழைக்கிறோம்.
#ஓம்ஶ்ரீமீனாக்ஷியைநமஹ# .
Comments
Post a Comment