ஆச்சாரியர் பகவத்பாதாள் பார்வையில் அம்பாள்
ஆசார்யாள் காட்டும் அம்பாள் :
தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)
பகுதி -1.
நம்முடைய ஆசாரியர்களான
ஸ்ரீ சங்கர பகவத் பாதர்கள் அம்பிகையை ஸ்தோத்திரம் செய்யும் அநேக கிரந்தங்களை அநுக்கிரஹம் பண்ணியிருக்கிறார்கள்.
ஸெளந்தர்ய லஹரியைத் தவிர,
‘ஆனந்த லஹரி’, ‘
தேவி புஜங்கம்’, ‘
த்ரிபுர ஸுந்தரி மானஸ பூஜா ஸ்தோத்திரம்’,
‘த்ரிபுர ஸுந்தரி வேத பாத ஸ்தவம்’ –
இந்த மாதிரி பெரிய ஸ்தோத்திரங்களும்
‘அன்ன பூர்ணாஷ்டகம்’, ‘அம்பாஷ்டகம்’ மாதிரி சின்னச் சின்ன ஸ்தோத்திரங்களும் தேவீபரமாகச் செய்திருக்கிறார்.
இவைகளை நாம் பாராயணம் பண்ணிக் கொண்டிருந்தாலே போதும். அம்பாளின் அநுக்கிரஹ வெள்ளத்தில் ஆனந்தமாக மிதந்து கொண்டிருக்கலாம்.
பரம அற்புதமான வாக்கிலே இவை அமைந்து இருக்கின்றன.
ஆனாலும், இவற்றைச் செய்த ஆசார்யாளோ துளிக்கூடக் கர்வப்படாமல், எல்லா சக்திகளுக்கும் ஆதாரமாக, சக்தி சமுத்திரமாக இருக்கப்பட்ட அம்பாளை நிரம்பவும் விநயத்தோடு துதிக்கிறார்கள்.
Comments
Post a Comment