இஷ்ட ப்ராப்தி Getting of all desires

பகுதி 95 இஷ்ட ப்ராப்தி Getting of all desires லலிதா சஹஸ்ர நாமத்திற்கு ஒப்புநோக்கதக்க சௌந்தயலஹரி ஸ்லோகம் மற்றும் அபிராமி அந்தாதி பாடல். #லலிதாசஹஸ்ரநாமம்#. #ஶ்ரீமஹாராஜ்ஞீ# பிரபஞ்சத்தைப் பராமரிக்கும் பேரரசியாகிய அவள் - அவளுடைய பாதுகாப்புப் பங்கைக் குறிக்கிறாள் #ஶ்ரீமஹாகாமேசமஹிஷீ# காமேஸ்வரனின் பட்டத்துராணி மஹாதிரிபுரசுந்தரி #சௌந்தயலஹரி# அமேரந்தினுக்கு அனுமதி மறுக்கும் அணிமை. புராராத்தேயரந்தஹ புரமாசி ததாஸ்த்வச்சரணயோஹோ சபர்யாமர்யாதா தாரலகரணநாமசுலாபாம்! தத்தா ஹ்யேத்தே நீதாஹ ஷதமகாமுகாஹ சித்திமதுலாம் தவ த்வாரோபாந்தஸ்திதிபிரானிமாத்யாபிராமராஹா! அம்மா! நீ திரிபுராந்தகனான பரமசிவனின் பட்டமகிஷியாக இருப்பதால் உனது பாதபூஜையானது அடங்காத சித்தமுடையவர்கள் செய்யக் கிடைக்கூடியதில்லை. இதனால் தான் இந்திராதி தேவர்கள் கூட உன்னுடைய க்ருஹத்தில் வாசற்படியருகில் காவல் புரியும் அணிமாதி சித்திகளால் உள்ளே செல்ல இயலாது தடை செய்யப்பட்டு வாயிற்படியிலேயே நின்று நிகரல்லாத சக்தியை பெறுகின்றனர். அம்பிகையின் இல்லமான சிந்தாமணி கிருஹத்தின் ஒம்பது வாசலில் அணிமாசித்திகள் எப்போதும் இருந்து காவல் காப்பதாக ஐதீ...