மனோர சித்தி Fulfillment of desires

 பகுதி 93


ஸ்லோகம் 42 முதல் 92 வரை தலை முதல் பாதம் வரை வர்ணித்ததை.


அடுத்ததாக அவளது ஆசனத்தை வர்ணித்ததை


இந்த ஸ்லோகத்தில் முழுவதுமாக வர்ணிக்கிறார் பகவத்பாதாள்.


அம்பாளை முழுவதுமாக பார்த்து இரசிக்குமாறு இந்த ஸ்லோகத்தை அமைத்துள்ளார்.


மனோர சித்தி


Fulfillment of desires 


Happiness contentment,sound health and prosperity.


லலிதா சஹஸ்ர நாமத்திற்கு ஒப்புநோக்கதக்க சௌந்தயலஹரி ஸ்லோகம் மற்றும் அபிராமி அந்தாதி.


#லலிதாசஹஸ்ரநாமம்#


அவளின் இடை


#அருணாருணகௌஸும்பவஸ்த்ரபாஸ்வத்கடீதடீ#


இடைப்பகுதியில் அவள் கட்டியிருக்கின்ற வஸ்திரத்தினால் அது பிரகாசமாக இருக்கின்றது.

ஏனெனில், கௌஸும்ப வஸ்திரத்தை அதாவது செம்மையான வஸ்திரத்தை அணிந்திருக்கிறாள். 


செம்மையான வஸ்திரத்தை அணிந்து ஒளிரக்கூடிய இடைப்பகுதியை உடையவள்.


#ஆரக்தவர்ணா#


அவளின் நிறம்


அவள் இளம்சிவப்பு நிறத்தாள்.


இதன் பொருள் "சிவப்பு நிறம்" ஆகும்.


#ஸ்பாவமதுரா#


அவளின் குணம்


ஸ்வபாவ மதுரா என்பது லலிதா சஹஸ்ரநாமத்தில் வரும் ஒரு சொல்.


இதன் பொருள், இனிமையானவள், வசீகரமானவள், இயற்கையில் மகிழ்ச்சியானவள் என்பதாகும். 


இந்த குணங்களால் எல்லோரும் அவளிடம் ஈர்க்கப்படுகிறார்கள். 


#தரஹாஸோஜ்வலந்முகீ#


அவளின் முகத்தின் அழகு


இது தமிழில் ஒரு அழகான வாசகம்.


இதன் பொருள் "முகம் பூத்து பூக்கும்" என்பதாகும்.


#மந்தஸ்மிதப்ரபாபூரமஜ்ஜத்காமேசமாநஸா#


அவளின் சிரிப்பு


தனது புன்சிரிப்பின் ப்ரவாஹத்தில் காமேசுவரருடைய மனதை மூழ்கச் செய்தவள். 


ஸ்மித - 


புன்சிரிப்பு - பற்கள் வெளித் தெரியாமல் மெல்லச் சிரிப்பது. '


மந்தஸ்மித ' - 


இன்னும் விசேஷமான மென்மையானது. அம்பிகையின் புன்சிரிப்பிற்கு ' மூககவி ' - ' மந்தஸ்மிக சதகம் ' என்ற நூறு பாடல்கள் கொண்ட நூலை செய்திருக்கிறார்.


#லஷ்யரோமலதாதாரதாஸாமுந்நேயமத்யமா#


அம்பாளின் இடையைக் குறிக்கிறது.


ஒடிக்கின்ற கொடியிடையவள் அம்பாள்.


ஸ்தனபார தலன்மத்ய பட்டபந்த வலித்ரயா = 


கனத்த மார்பகத்தை தாங்குவதால் வயிற்றுப்பகுதியில் மும்மடிப்பும் மார்பகத்தின் பாரத்தால் ஒடியும் மெல்லிய இடைக்கு ஒட்டியானமும் கொண்டு திகழ்பவள்.


"லோல" என்ற சொல்லுக்கு ஆடுதல் என்று பொருள்.


 "லோலக" என்றால் பதக்கம் என்று கொள்ளலாம்.'லோலக' என்று பொருள் கொண்டு ரத்தினங்க ளாலான பதக்கமும் முத்து ஹாரமும் அசைந்தாடுகிறது என்றும் பொருள் கொள்ளலாம்.


#காமேஸ்வரப்ரேமரதாந#


அவளின் கழுத்து


காமேஷ பத்த மாங்கல்ய சூத்ர ஷோபிதா கந்தாரா - 


காமேஸ்வரரால் கட்டப்பட்ட புனித நூலை கழுத்தில் அணிந்து பிரகாசிப்பவள்.


#மணிப்ரதிபணஸ்தந#


இடையில் உள்ள மூன்று ரோமங்கள்


காமேஷ்வர ப்ரெம ரத்னமணி ப்ரதிபண ஸ்தனி = 


காமேஷ்வரனான ஈஸ்வரனின் ஈடற்ற பிரமைக்கு தன் பெண்மையின் அடையாளமான ஸ்தனங்களைப் பரிசளிப்பவள்


நாப்யாலவால = தொப்புள்கொடியிலிருந்து


ரோமாலி = முடி


லதா = கொடி


பல = கனிகள்


குச த்வயீ = இரு மார்பகங்கள்


#நீலசிகுரா#


அவளின் முடியின் அழகு


நீலசிகுரா -  நீல நிறமான கூந்தலை உடையவள் )


நீல நிறம் என்பது கரு நீலத்தைக் குறிக்கிறது. ஆழ்கடலும், தெளிந்தவானமும் கரு நீல வண்ணமுடையவை. 


உலகில் வெவ்வேறு பகுதியில் உள்ள மனிதர்கள் வெவ்வேறு நிறங்களைக் கொண்ட கூந்தல் உடையவர்களாக இருக்கிறார்கள். 


மஞ்சள், சிவப்பு, கருமை ஆகிய மூன்றும் முக்கியமான நிறங்களாக உள்ளன. 


ஆனால் அனைத்துமே முடிவில் வெளுப்பாகி விடுகின்றன. அன்னையின் கூந்தலோ மற்ற நிறங்களை விடவும் உயர்ந்த அகண்ட ஆகாசத்தின் நிறமான கரு நீலத்தில் உள்ளது.


கருநீலம் வேய்ந்த ககனவெளி வண்ணம்

அருளன்னை கொண்ட அளகம் – பரிதி

பரவுமொளிப் போலாம் பரையின் பகர்க்கு

முரணழகே நீல முடி!


அளகம் – பெண்களின் கூந்தல்; 


பரிதி – சூரியன்; 


பகர் – பிரகாசம்; 


முரண் – மாறுபாடு


#கருணாரஸஸாகரா#


அவளின் குணம்


கருணாரஸ ஸாகரா --   சுருக்கமாக சொல்வோமே  கருணைக் கடல். அது ஸ்ரீ லலிதாம்பிகை தான்.  தயை, கருணை, காருண்யம், அன்பு,  பாசம், நேசம் அனைத்தும் நம் மீது வைப்பவள்  நம் தாய் ஸ்ரீ அம்பாள் ஒருவள். அம்மாள் தான்  அம்பாள்


#ஸர்வாருணா#


அம்பாள் அழகிய கண்களுடன் இருந்தாளாம். 


அந்த அழகிய கண்களாலேயே தன்னை வழிபடுபவர்களுக்கு அருளுபவளாம், 


அதனாலேயே அவள் 'காமாக்ஷி'. ஒட்டியாண பீடமாகிய காஞ்சியில் வாசம் செய்யும் தேவியைக் குறிக்கும் நாமம்.


இது. 'க' என்றால் சரஸ்வதியையும், 'ம' என்பது லக்ஷ்மியையும் குறிக்கும் அக்ஷரங்கள் என்பர்.


லக்ஷ்மி-சரஸ்வதியை கண்களாகக் கொண்டவள் என்றும் கூறலாம். லக்ஷ்மியையும், சரஸ்வதியையும் கண்களாகக் கொண்டு தனது பக்தர்களுக்கு அருளுபவளைக் காமாக்ஷி என்று கூறலாம் என்கிறார் லக்ஷ்மீதரர். 


காமாக்ஷி எப்படி இருந்தாளென்றால்,


அவள் தன்னுடைய வஸ்த்ரம், ஆபரணம், புஷ்பம் எல்லாம் சிவந்த நிறத்துடன், உதிக்கின்ற சூரியனது நிறத்தைப் போன்று இருந்தாளாம்.


இவ்வாறு சிவந்த நிறத்தை உடையவள் என்பதைச் சொல்லுவதே '#ஸர்வாருணா#


#சௌந்தயலஹரி#


ஆராலா கேஷேஷு ப்ரக்ருதிசரலா மந்தஹாசிதே

ஸ்ரீஷாபா சித்தே த்ருஷதுபலஷோபா குசடதே |


ப்ருஷாம் தன்வீ மத்யே ப்ருதுருரசிஜாரோஹவிஷயே

ஜகத்த்ராதுஶ்சாம்போர்ஜயதி கருணா காசிதருணா ||


 

தட்டச்சு செய்து Enter ஐ அழுத்தவும்

வழிசெலுத்தலை மாற்று

மோசடி

முகப்புப் பக்கம் கட்டுரைகள் சௌந்தர்யா லஹரி சௌந்தர்ய லஹரி- செய்யுள் 93


← முந்தைய கட்டுரை

அடுத்த கட்டுரை →

சௌந்தர்ய லஹரி- செய்யுள் 93

வியாழன், ஜூன் 20, 2013


ஆராலா கேஷேஷு பிரகிருதிசரலா

மந்தஹசிதே சிரீஷாபா சித்தே தரிஷதுபலஷோபா குத.

ভৃஷம் தன்வி மத்யே பৃதுருரசிஜாரோஹவிஷயே

ஜகத்ராதுঃ ஷம்போர்ஜயதி ॥


ஆராலா கேஷேஷு ப்ரக்ருதிசரலா மந்தஹாசிதே

ஸ்ரீஷாபா சித்தே த்ருஷதுபலஷோபா குசடதே |

ப்ருஷாம் தன்வீ மத்யே ப்ருதுருரசிஜாரோஹவிஷயே

ஜகத்த்ராதுஶ்சாம்போர்ஜயதி கருணா காசிதருணா ||


ஆராலா கேஷேஷு - சுருள் முடி;


பிரக்ருதி சரளா - இயற்கையாகவே அழகான; 


மண்ட ஹசிதே - புன்னகையுடன்;


 சிரிஷாபா சிதே - காய்ச்சல் மரத்தின் பூக்கள் போன்ற மனம்; 


த்ரிஷத் உபல ஷோபா குச ததே - அரைக்கும் கல்லைப் போல கடினமான மார்பகங்கள் (பிச்சை கல்);


 பிருஷம் தன்வி மத்யே - மிகவும் மெல்லிய இடுப்பு; 


பிருதுர்ஹ் உரசிஜா ஆரோஹ விஷயே - அகன்ற மற்றும் விரிவான மார்பகங்கள் மற்றும் பின்புறம்; 


ஜகத் த்ராதும் - பிரபஞ்சத்தை நிலைநிறுத்த; 


ஷம்போஹ் ஜயதி கருணா - சிவனின் உயர்ந்த கருணை;


 காசித் அருணா - விவரிக்க முடியாத சிவப்பு.


அம்பிகே


பரசிவனுடைய மனத்துக்கும் வாக்கும் கூட எட்டாத பரம கருணை இந்த உலகை ரக்ஷிப்பதற்காக அருணா என்று அழைக்கப்படுகிற பராசக்தியாக வெற்றியுடன் விளங்குகிறாய்.


கருணா சக்தியானது


உனது #கூந்தலில்# சுருளாகவும்

#புன்சிரிப்பில்# இயற்கையான இனிமையாகவும்

#மனதில்# வாகைப்பூவைப்போல மிருதுத்தன்மையானதாகவும்

#நில்களில்# கல்லினுள் இருக்கும் ரத்தினத்தைப் போன்ற கடுமையாகவும்

#இடையில்# மிகுந்த மெலினமாகவும்

#மார்பும்# நிதம்பமும் பருமனாகவும்.


#காருண்யவிக்ரஹா#என்னும் த்ரிசதியில் வரும் நாமத்தை நினைவுபடுத்துவதாக இந்த ஸ்லோகம் இருக்கிறது.


கருணாரஸத்தை அருணா வர்ணமாகச் சொல்லுவது வழக்கம் என்றும்


அந்த கருணையானது மூர்த்தியாக வந்திருப்பது போல சொல்ல பட்டுகிறது என்கிறார் தேதியூரார்.


#அபிராமிஅந்தாதி#


இடங்கொண்டு விம்மி, இணைகொண்டு இறுகி, 

இளகி, 

முத்து வடங்கொண்ட கொங்கை-மலைகொண்ட 

இறைவர் வலிய நெஞ்சை

நடங்கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி, 

நல் அரவின்

வடம் கொண்ட 

அல்குல் பணிமொழி--

வேதப் பரிபுரையே! : 


அபிராமி அம்மையின் தனங்களின் பெருமையைப் பாடுகிறார் பட்டர்.


அம்மையின் நகில்கள்,

 மிகப் பெரியன. 

விம்மிப் பெருத்தன. 


ஒன்றோடு ஒன்று இறுகி மலை போன்று காட்சி அளிப்பன. 


அவற்றின் மேல்,

முத்து மாலை விளங்குகிறது. 

அந்த கொங்கை மலையானது, 

எத்ற்கும் அசையாத எம் இறையவர், சிவனாரின் மனதையும் கொள்ளை கொண்டன. 


அப்படிப்பட்ட நாயகியான 

எம் இறைவியின் மடியானது, 

நல் அரவின் படம் போன்று விளங்குகிறது. 


இத்தகைய சிறப்பு பெற்ற எம் நாயகியின் இனிமையான மொழியே வேதம் எனவும் விளங்குகிறது.


அபிராமி அன்னயினைப் பற்றிய இந்தப் பாடல், 


அவளது தாய்மை உள்ளத்தை எடுத்துக் காட்டுகின்றது.


தனது பெரும் நகில்களால், அவள், இந்த உலகில் உள்ள அனைவருக்கும் அமுது செய்விக்கிறாள். 


அதே நகில்களினால், தந்தையாய் இருக்கும் இறைவனது நெஞ்சையும் கொள்ளை கொண்டு, 


அவரையும் தனக்கு அருகேயே இருக்குமாறு செய்து விடுகிறாள். தனது மடியிலே, 


இந்த உலகில் உள்ள அனைத்து குழைந்தைகளையும் இருத்திக் கொள்கிறாள். 


காத்துப் பராமரிக்கிறாள்.


அவளது இன்னருள் இந்த உலகனைத்தையும் காத்து ரட்சிக்கின்றது என்பதை மிக அழகாக விளக்குகிறார் பட்டர் இந்தப் பாடலிலே.


#ஓம்ஶ்ரீஅபிராமிதாயே#.

Comments

Popular posts from this blog

ஶ்ரீசக்ர தாடங்கங்கள்

காயத்ரி மந்திரத்தில் என்ன சிறப்பு சக்தி இருக்கிறது...?

அம்பாளின் தாடங்க மஹிமைப் பற்றிய வர்ணணை.