தாடங்க யுகளீபூத தபனோடுப மண்டலா!

 சில விஷயங்கள் எதற்கு எது முன்னோடி என்ற ஒரு கேள்வி எழும்


தாடங்க யுகளீபூத தபனோடுப மண்டலா!



என்ற சஹஸ்ர நாமம் முன் தோன்றியதா அல்லது சங்கர பகவத்பாதாள் அகிலாண்டேஸ்வரி தங்க காதணிகள் பிரதிஷ்டை செய்தாரா என்ற கேள்வி.


இதற்கு லலிதா சஹஸ்ர நாமமே முன் தோன்றியதாக இருக்கும்.


காரணம் பகவத்பாதாள் லலிதா சஹஸ்ர நாமத்திற்கு உரை எழுத நினைத்து தனது சிஷ்யரிடம் கொடு வருமாறு வினாவிய போது உள்ளே அம்பாள் கன்னி பொண்ணாக இருந்த விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் ஏடு எடுத்துக்கொடுகிறாள்.


இது ஒரு தடவை இல்லை இரு தடவை இவ்வாறாக நடந்தது. சங்கரருக்கு கோபம் வந்து சிஷ்யரை கடிந்துக்கொள்ள நினைக்கும் போது அம்பாள் லலிதா சஹஸ்ர நாமத்திற்கு உரை எழுத ஒரு மஹான் பிறப்பான்.


நீ எனது அண்ணணின் விஷ்ய சஹஸ்ரநாமத்திற்கு உரை எழுது கூறுகிறனாள் என்று நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம்.


அவ்வாறாக வாக்தேவிகள் உருவாக்கிய லலிதா சஹஸ்ர நாமத்திற்கு வலுசேர்க்கும் விதமாக அம்பாள் சங்கரரிடம் ஆடிய திருவிளையாடலே இந்த அகிவாடேஸ்வரிக்கு ஶ்ரீசக்ரம் மற்றும் சிவசக்ரத்தினாள் ஆன காதணிகள் என தோன்றுகிறது.


ஶ்ரீசக்கரத்தின் அருமை அனைவரும் அறிந்ததே.


எப்பொழுத்தெல்லாம் அம்பாள் உக்ரமாக இருந்தாலோ அதை தணிக்க ஶ்ரீசக்ரத்தை பிரதிஷ்டை செய்வார் சங்கர பகவத்பாதாள்.


அவ்வாறே காஞ்சிபுரம் மற்றும் திருவெற்றியூரர் கோவில்களில் ஶ்ரீசக்ர பிரதிஷ்டை என்பதை அறிவோம்.


லலிதா சஹஸ்ர நாமம்


#தாடங்கயுகளீபூததபனோடுபமண்டலா#


அகிலாண்டேஸ்வரியின் தாடங்கம்!


அவராக பிரிதிஷ்டை செய்யப்பட்டதே

அகிலாண்டேஸ்வரியின் காதில் தாடங்கம்.


அகிலாண்டேஸ்வரி தேவி, கடந்த காலத்தில் ரௌத்ர ஸ்வரூபிணி (கோபம் மிகுந்தவள்) என்று கருதப்பட்டாள். 


எனவே அனைவரும் அவளை வெளியில் இருந்து வழிபடுவார்கள். அவளுடைய கருவறைக்குள் (சன்னிதி) யாரும் செல்லத் துணிவதில்லை.


ஆதி சங்கரர் இதனால் மகிழ்ச்சியடையவில்லை. 


ஸ்ரீ மாதாவின் சன்னிதிக்குள் செல்ல மக்கள் பயந்ததைக் கண்டு அவர் மிகவும் வருத்தப்பட்டார். 


எனவே அவர் ஒரு "ஸ்ரீ சக்கரம்" மற்றும் "சிவ சக்கரம்" வடிவமைத்து, தனது கோபத்தை சக்கரங்களுக்குள் சக்தியாகப் பறக்க விடவும், 


அதை உயிரினங்களின் நலனுக்காகப் பயன்படுத்தவும் அன்னையிடம் கெஞ்சினார்.


கருணையுள்ள தாய் சங்கரரின் வார்த்தைகளுக்கு செவிசாய்த்து, தனது கோபங்களையெல்லாம் விட்டுவிட்டு சாந்த ஸ்வரூபிணி (அமைதி மற்றும் அருளைப் பொழிவது) ஆனாள்.


அகிலாண்டேஸ்வரி சக்கரங்களை தன் காதுகளில் தாடங்கமாக அணிந்துள்ளார்.


மேலும் ஆதி சங்கரர், அகிலாண்டேஸ்வரி சன்னிதிக்கு எதிரே விநாயகப் பெருமானின் சன்னிதியைக் கட்டினார். 


தன் மகனை அவள் முன்னால் பார்த்தவுடன், அவள் தனது பழைய கோபத்தை மறந்து, 


என்றென்றும் கருணையால் நிரப்பப்படுவாள் என்று அவர் உறுதியாக நம்பினார்.


விநாயகர் "பிரசன்ன விநாயகர்" அல்லது அனைவரின் முகத்திலும் புன்னகையைத் தரும் விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.


அகிலாண்டேஸ்வரியை தரிசனம் செய்யும் போது, ​​தாடங்கம் இல்லாமல் அவள் முகத்தை கற்பனை செய்தால், ரௌத்ர ஸ்வரூபத்தைக் காணலாம் என்று மக்கள் கூறுவார்கள்.


தாடங்கத்துடன் அவள் முகத்தைப் பார்த்தால், சாந்த ஸ்வரூபத்தைக் காணலாம்.


திருஆனைகா - திருவானைக்கா


சிவன் நாவல் மரத்தடியில் அன்னைக்குக் காட்சி தந்ததால் அவர் ஜம்புலிங்கேஸ்வரர் ஆனார்.

அன்னையின் உக்கிரத்தைத் தணிப்பதற்காக முன்புறம் விநாயகரையும் பின்புறம் முருகனையும் பிரதிஷ்டை செய்துள்ளனர்.


அன்னை அகிலாண்டேஸ்வரி கோவில் கொண்டு உறையும் திருவானைக்கா பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான அப்புத் தலம்.


அப்பு என்ற சொல்லுக்கு வடமொழியில் நீர் என்று பொருள். ஜம்புலிங்கேஸ்வரரின் லிங்கம் இருக்குமிடம் தரைமட்டத்திற்குக் கீழே இருப்பதால் அங்கு எப்போதும் நீர்க் கசிவு இருந்துகொண்டே இருக்கும்.


திருவானைக்காவல் என்றும் திருவானைக்கோவில் என்றும் அடியவர்கள் இத்திருத்தலத்தை அழைக்கிறார்கள்.


ஆனைக்கா என்றால் யானைகள் வசித்த கானகம் என்று பொருள். அக்காலத்தில் இப்பகுதியில் யானைகள் அதிகம் இருந்திருக்க வேண்டும். இத்தலத்தை கஜாரண்யம் (யானைக்காடு) என்கின்றன புராணங்கள்.


*ஒருமுறை பரமேஸ்வரன் கண்மூடி யோக நிஷ்டையில் இருந்தபோது பார்வதி அவர் நிஷ்டையைக் கலைக்க முற்பட்டாள். விழிதிறந்தார் சிவபெருமான்.


`தேவி! நான் விண்ணுலகில் தவம் செய்கிறேன். நீ மண்ணுலகம் சென்று தவம் புரிவாயாக. நான் பூமிக்கு வந்து உனக்கு உபதேசம் செய்கிறேன். உன் தவத்தால் மண்ணுலகில் உள்ளோர் பயனடையட்டும்!' எனக் கட்டளையிட்டார் அவர்.


உத்தரவை ஏற்ற அன்னை ஓர் ஆடி மாதத்தில் பூமிக்கு வந்தாள். திருவானைக்காவல் காவிரி ஆற்றில் நீர் எடுத்து ஒரு நாவல் மரத்தடியில் அமர்ந்து அந்த நீரிலேயே லிங்கம் அமைத்து வழிபடலானாள்.


தியானமும் தவமுமாய் பார்வதியின் பக்தி தொடரத் தொடர சிவன் மனம் கனிந்தார். பார்வதிக்குக் காட்சி தந்து ஞான உபதேசம் செய்தருளினார்.


அகிலத்தைக் காக்க அன்னை தவம் இயற்றியதால் அகிலாண்டேஸ்வரி எனப் பெயர் பெற்றாள். ஜம்பு என்றால் நாவல் பழம். சிவன் நாவல் மரத்தடியில் அன்னைக்குக் காட்சி தந்ததால் அவர் ஜம்புலிங்கேஸ்வரர் ஆனார்.


அகிலாண்டேஸ்வரியும் சிவபெருமானும் காவிரிக்கும் கொள்ளிடத்துக்கும் இடையில் உள்ள தீவில் அமைந்துள்ள திருவானைக்காவலிலேயே கோவில் கொண்டு பக்தர்களுக்கு அருள்புரியத் தொடங்கினார்கள்.


இப்போதும் கூட திருவானைக்காவில் உச்சிக்கால பூஜையின்போது அர்ச்சகர் சேலை தரித்து தன்னைப் பார்வதியாக பாவனை செய்துகொண்டு சிவ வழிபாடு நிகழ்த்துகிறார்.


தொடக்கத்தில் அன்னை உக்கிர சொரூபமாக இருந்தாள். ஆதிசங்கரர் இரண்டு ஸ்ரீசக்கரங்கள் அமைத்து அவற்றில் அன்னையின் சக்தியை ஆவாகனம் செய்தார். அதன்பின் அன்னை உக்கிரம் தணிந்து சாந்த சொரூபியானாள்.


சங்கரர் ஸ்தாபித்த சக்கரங்கள் அன்னையின் செவிகளில் தாடங்கம் என்ற அணிகலனாக மாறி ஒளிவீசத் தொடங்கின.


*புராண காலத்தில் இப்போதுள்ள திருவானைக்கா, வெண்நாவல் மரங்கள் நிறைந்தவனமாக இருந்தது. ஒரு வெண்நாவல் மரத்தடியில் ஓர் அழகிய சிவலிங்கமும் இருந்தது.


சிவ கணங்களில் இருவர் சாபத்தின் காரணமாக யானையாகவும் சிலந்தியாகவும் இங்கு பிறந்தனர். சிலந்தி சிவலிங்கத்தின் மேல் வலை பின்னி லிங்கத்தின் மீது சருகுகள் விழாது காத்தது.


நாள்தோறும் காவிரியிலிருந்து துதிக்கை மூலம் நீர் எடுத்துவந்து லிங்கத்தை நீராட்டுவது யானையின் வழக்கம். சிலந்தி வலையை அது ஒவ்வொரு நாளும் அழித்துவிட்டுச் செல்லும்.


இதனால் யானைமேல் கடும் சீற்றம் கொண்ட சிலந்தி யானையின் துதிக்கையில் புகுந்தது. யானையும் சிலந்தியும் நிகழ்த்திய போராட்டத்தில் இரண்டுமே மடிந்தன.


அந்தச் சிலந்தியே மறுபிறவியில் கோச்செங்கட் சோழன் என்ற மன்னனாகப் பிறந்தது. பூர்வஜன்ம வாசனையால் யானை ஏற முடியாத விதத்தில் குறுகலான படிகளைக் கொண்ட கோவில்களைக் கட்டினான் அவன்.


அப்படிக் கட்டப்பட்ட கோவில்கள் மாடக் கோவில்கள் எனப்பட்டன. கோச்செங்கட் சோழன் கட்டிய முதல் மாடக்கோவில் திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி ஆலயம்.

Comments

Popular posts from this blog

ஶ்ரீசக்ர தாடங்கங்கள்

காயத்ரி மந்திரத்தில் என்ன சிறப்பு சக்தி இருக்கிறது...?

அம்பாளின் தாடங்க மஹிமைப் பற்றிய வர்ணணை.