தூக்கத்தின் நான்கு நிலைகள்
தூக்கத்தின் நான்கு நிலைகளை
விவரிக்கிறது லலிதா சஹஸ்ர நாமம்.
பஞ்ச ப்ரம்ம ஸ்வரூபம்
விஷ்வரூபா;
ஜாகரிணீ';
ஸ்வபந்தீ;
தைஜசாத்மிகா;
சுப்தா;
ப்ராக்ஞாத்மிகா;
துர்யா;
சர்வாவஸ்த விவர்ஜிதா;
விஷ்வ = அண்டம்
விஷ்வரூபா = பேரண்ட ரூபமானவள்
(ஜாகரித் - விழிப்புடன் நிலை
ஜாகரிணீ = விழிப்பு நிலையில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்பவள் - விழித்திருப்பவள்
நான்கு உணர்வு நிலைகளான
01.விழிப்பு,
02.கனவு,
03.உறக்க நிலைகள்
அதனை தாண்டிய
04.துர்யம்
என்று அறியப்படுகிறது.
இந்த நாமாவில் அவள்
விழிப்பு நிலையில் விரவி இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
ஸ்வபந் = சொப்பனம் - கனவு
ஸ்வபந்தீ - கனவு நிலையிலும் வியாபித்திருப்பவள்
தைஜஸ = ஒளிமயமான - பிரகாசமான- தேஜசுடன்
தைஜசாத்மிகா = கனவு நிலையில் இயங்கும் சூக்ஷும சரீரத்தின் தைஜசமாக தன்னை வெளிப்படுத்துபவள்
கனவு நிலையில் ஸ்தூல உடலின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டு, சூக்ஷ்ம வடிவில் மனதின் துணை கொண்டு ஆத்மா ஈடுபட்டிருக்கிறது. தேஜோ மயமாக இருப்பதும், மனவோட்டத்துக்கு கட்டுப்பட்டு உள்முகமாக செயல்படுவது சூக்ஷும உடலின் தன்மை. அன்னை, தைஜச ஆத்மாவாக கனவு நிலையிலும் ஈடுபட்டிருக்கிறாள்.
சுப்த = உறக்கம் - ஆழ் உறக்கம்
சுப்தா = ஆழ்ந்த உறக்க நிலையில் தன்னை இருத்திக்கொள்பவள்
ப்ராக்ஞா = ஞானம் = அறிவு
ப்ராக்ஞாத்மிகா =
ஆழ் உறக்க நிலையில் இயங்கும் காரண-சரீரத்தின் ஞானமாக மிளிர்பவள்
ஆழ் உறக்க நிலையில் காரண சரீரம் இயக்கத்தில் இருக்கிறது. காரண சரீரத்தின் இயல்பு ஞானமயமானது. அறிவுமயமானது. அந்த நிலையில் அம்பிகை ப்ரக்ஞா என்று அறியப்படுகிறாள். அவளே ப்ரக்ஞாத்மாவாக அறியப்படுகிறாள்.
துர்ய = துரியம் - நான்காவது - ஓப்பற்று விளங்குதல்
துர்யா = நிகரற்ற துரிய நிலையில் ஊடுருவியிருப்பவள்
சர்வ = எல்லாவற்றிலும்
அவஸ்தா = ப்ரக்ஞை / உணர்வு நிலைகள்.
விவர்ஜிதா = அதற்கு அப்பால் - அதனால் பாதிக்கப்படாத
சர்வாவஸ்த விவர்ஜிதா =
அனைத்து உணர்வு நிலைகளுக்கு அப்பாலும் விளங்குபவள்
பிரக்ஞை அல்லது உணர்வு நிலைகளைப் பற்றிய சிறு விளக்கம்:
மாண்டூக்ய உபநிஷத் நான்கு நிலைகளை குறிப்பிடுகிறது. ஜாக்ரத் எனும் விழிப்பு நிலை, ஸ்வப்னம் என்கின்ற கனவு நிலை, சுஷுப்தியில் ஆழ் உறக்க நிலை, நான்காவதாக துர்யம் எனும் மூன்றுக்கும் அப்பாற்பட்ட உயர்நிலை.
விழிப்பு நிலையில், நம்மையும் நம்மை சுற்றி இயங்கும் உலகை நமது ஸ்தூல உடலைக் கொண்டு வெளிமுகமாக அறிகிறோம்.
சொப்பன நிலையில், சூக்ஷ்ம சரீரம், தைஜச வடிவில் மனம் மற்றும் எண்ணவோட்டங்களால் இயங்குகிறது. இது உள்முகமான உணர்தல்.
மூன்றாம் நிலையான ஆழ் உறக்க நிலையில் காரண சரீரம் இயங்குகிறது. சூக்ஷ்ம சரீரம் மற்றும் ஸ்தூல வடிவங்கள் ஆழ் நித்திரையின் போது இயங்குவதில்லை. காரண சரீரம் ஞானம் / அறிவைக் கொண்டு இயங்குகிறது. இவ்வியக்கம் நமது அஞ்ஞானத்தால் மறைக்கப்பட்டிருக்கிறது. அதனால் சாதாரண மனிதனால் பிரக்ஞையை உணரமுடிவதில்லை.
நான்காம் நிலையான துர்யம், பரிபூர்ணத்துவம் வாய்ந்தது. சுத்த சைதன்யமானது. மூன்று நிலைகளை தாண்டி அதற்கும் மேலான ஒப்பற்ற நிலையில் வியாபித்திருப்பது. பரமானந்த நிலையில் துவைதம் என்ற இருமைகள் நீங்கி ஒருமையெனப்படும் அத்வைத நிலை என்று அறிப்பட வேண்டும்.
|ஸுப்தா ப்ராஜ்ஞாத்மிகா துர்யா
ஸர்வாவஸ்தா விவர்ஜிதா |
Comments
Post a Comment