திரோதானம் - மறைத்தல் - Disappearance

 திரோதானம் - மறைத்தல் - Disappearance.


திரோபவம் -



பஞ்சகிருத்தியங்களுள் ஒன்றாய்.


ஆன்மா தன் கன்மம் முடியும் வரையில் உலக அனுபவங்களில் உழன்று மயங்கும்படி உண்மையை மறைத்தலைச் செய்யும்.


சிவபெருமானது அருட்செயல்.


சில விஷயங்களுக்கான காரணம் நமக்கு புரியவில்லை என்பதற்கு அவைகளுக்கு தொடர்பு இல்லை என அர்த்தமில்லை.


அது அம்பாளின் திரோதானத்தின் செயல்.


கடந்த நான்கு வாரங்களுக்கு முன் அர்த்தமேரு டிரஸ்டில் தேவிகட்கமால ஸ்துதி புக் கிடைக்கப்பெற்றேன்.


புத்தகம் கிடைக்கப் பெற்ற மறுநாள் ஷ்யாமளா நவராத்திரி ஆரம்பம்.


ஷ்யாமளா நவராத்திரியில் கட்கமாலா பாராயணம்.


அடுத்த சில வாரங்களில் ஶ்ரீமஹாதிரிபுரசுந்தரி சந்நிதியில் வைத்து மஹாமேரு கிடைக்கப் பெற்றேன்.


தற்போது மஹாமேருக்கு தேவிகட்கமாலா ஸ்துதி பாராயணம்.


நேற்று தேவிகட்கமாலாவைப் பற்றி எழுதலாம் என்று சிந்திக்கும்போது அதைப்பற்றிய தகவல் கிடைக்கப் பெற்றேன்.


அதில் தேவிகட்கமாலா பாராயணம் செய்பவர்களை அரணாக இருந்து காப்பாள் என்ற பதிவு.


இதன் மூலம் நான் உணர்ந்தது தேவிகட்கமாலா ஸ்துதியை பாராயணம் செய்வதற்காக ஷ்யாமளா நவராத்திரியை தந்து அதில் தேவிகட்கமாலா பாராயணம் செய்ய வைத்தாள்.


அதை என்னை உணரவைத்து பிறகு மஹாமேரு ரூபமாக என இல்லம் வந்தடைந்தாள்.


அதுமுதல் என்னை தினசரி பாராயணம் செய்ய வைக்கிறாள்.


அவற்றின் பலன், 


(அன்னையே ! 


உன்னை நீயே…..உள்ளபடி காண்பித்து அருள்க ” என பிராத்தித்து தினமும் இதனை பாராயணம் செய்தல் மிகவும் நன்று.


ஸ்ரீ வித்யா உபாசகர்கள் நவாவர்ண பூஜையில் கிடைக்கும் பலனை ……. 


ஸ்ரீ தேவி கட்கமாலா ஸ்தோத்திரத்தின் மூலம் பெறலாம் என்பர்.


செய்ய வேண்டியதெல்லாம் இதனை தினசரி பாராயணம் செய்தலே.


பின்னர் அன்னையின் காட்சியும், குருவும் தாமே வந்து அடுத்த படிக்கு அழைத்துச் செல்வார்கள்.


இதனை பாராயணம் செய்யுமிடத்தில் 


ஏழ்மை , 

துன்பம் ,

நோய்கள் , 

மனக் குழப்பங்கள் , 

எல்லாவித துயரங்களும் 

அகன்று விடும். 

சகல தேவதைகளுடன் கூடி


அன்னை லலிதாம்பிகை அங்கு வாசம் செய்வாள். 


ஆனந்தம் பொங்கும் செயல்கள் நித்தியமாய் அங்கு நிகழும்.


சக்தி விளங்கும் அருள்வாக்கும் 

மகாசாந்தி விளங்கும் அருள் நோக்கும் பக்திபுரியும் அருள் வாழ்க்கையும் தருவாய் …)


அம்பாளுக்கு நவாவரணப் பூஜைச் செய்கிற பலன்.இந்த ஸ்துதியை பாராயணம் செய்தால் கிடைக்கும் என எனக்கு உணர்த்துகிறாள்.


எனக்கு முன்பு இதின் அர்த்தம் மற்றும் தொடர்பு புரியவில்லை .


இவற்றை தற்போது எனக்கு புரியவைத்தாள்.  


இவ்வாறாக ஓவ்வொரு விஷயத்திலும் என்னை கருவியாக வைத்து அதன் மூலம் என்னை உணர வைத்து அடுத்த நிலைக்கு இட்டுச்செல்கிறாள்.


உதாரணம் 


என் மூலம் லலிதா சகஹஸ்ரத்திற்கு தமிழ் வியாக்கியாணத்தை எழுதவைத்தாள்.


அடுத்த நிலை லலிதா சஹஸ்ர நாமம், சௌந்தயலஹரி மற்றும் அபிராமி அந்தாதிக்கு உள்ள தொடர்பை எழுத வைத்தாள். 


அது முடியும் தருவாயில் உள்ளது.


அவ்வப்போது தன்னைப்பற்றிய பெருமைகளை பதிவாக பதிவிட வைக்கிறாள்.


அடுத்தது என் சிந்தனையில் என்ன சிந்திக்க வைப்பாள் என்பது அவளுக்கு தான் வெளிச்சம்.


மொத்தத்தில் என்னை முழுவதுமாக ஆட்கொண்டால் என்பது நிதர்சனமான உண்மை.


என்னில் சகலமுமாக அவளே வியாபித்து இருக்கிறாள்.


அதற்கான என்னை ஒவ்வொரு நிலை உடன் இருந்து இட்டுச் செல்கிறாள்.


என்பதை நான் நன்கு உணருகிறேன்.


#ஓம்ஶ்ரீமாத்ரேநமஹ# .

Comments

Popular posts from this blog

ஶ்ரீசக்ர தாடங்கங்கள்

காயத்ரி மந்திரத்தில் என்ன சிறப்பு சக்தி இருக்கிறது...?

அம்பாளின் தாடங்க மஹிமைப் பற்றிய வர்ணணை.