ஆளும் திறமை Ability to rule

 பகுதி 92


ஆளும் திறமை 


Ability to rule 



லலிதா சஹஸ்ர நாமத்திற்கு ஒப்புநோக்கதக்க சௌந்தயலஹரி ஸ்லோகம் மற்றும் அபிராமி அந்தாதி.


#பஞ்சப்ரேதாஸநாஸீநா#


இது ஒரு விசித்திர நாமமாக தோன்றும்.  


அதாவது  அம்பாள் ஸ்ரீ லலிதை ஐந்து பிரேதங்களை ஆசனமாக கொண்டு அவற்றின் மேல் அமர்ந்திருப்பவள்.


இங்கு பிரேதம் என்று சொல்லப் படுகிறவர்கள்


ப்ரம்மா, விஷ்ணு, ருத்ரன், ஈசன்,  சதாசிவன்.   


ஜீவ சக்தியை பிரித்து விட்டால் பிறகு  எல்லாமே பிரேதங்கள் தானே. 


அவளன்றி ஓர் அணுவும் அசையாதே . 


ஹயக்ரீவர் அழகாக தான் சொல்கிறார்.


பஞ்சப்ரமஸ்வரூபிநீ


#பஞ்சப்ரஹ்மஸ்வரூபிணீ#


பரப்ரம்மத்துக்கு  ஐந்து  காரியங்கள். 


சிருஷ்டி, 

ஸ்திதி, 

லயம், 

திரோதானம்  

அனுக்ரஹம். 


இதில் எதுவுமே  அம்பாளின் சக்தி இல்லையென்றால் நிறைவு பெறாது.


தாயில்லாமல் நாம் இல்லை.  


தாய் மொழி, 

தாய் நாடு. 


எல்லாவற்றிலும் அவளே  அடி நாதம். பஞ்சபூதங்களால் ஆன  இந்த பிரபஞ்சத்தை இயற்கை அன்னை  MOTHER  NATURE   என்கிறோமே. 


ஜீவ பரிணாமத்தின் உச்சி  மனிதன் என்பது  யாவருமறிந்த வெளிப்பாடு. 


அவனை  ஆட்டுவிக்க  அதி 

அற்புத நுண்ணிய அபூர்வம் 

அவனுள் அம்பாள் வைத்த  


''மனம்''.  


தனிமனிதனின்  


பிறப்பு, 

வளர்ப்பு, 

இறப்பு, 

மொத்தத்தில் மறைவு, 

மீண்டும் புனருத்தாரணம் 


இவையே மேலே சொன்ன ஐந்தொழில்கள் .  


சகலமும்  ஈஸ்வரனில்  அடக்கம்,


ஈஸ்வரனே ஈஸ்வரியில்  அடக்கம். 


எல்லாமே  ஒன்றான பின் எது எதோடு சேர்ந்தால்  என்ன?  


எப்படி சொன்னாலும் ஒன்று தான்.


#பஞ்சப்ரேதமஞாசாதிசாயீநீ#


ஐந்து சடலங்களால் ஆன கட்டிலில் தூங்குபவர்


பஞ்சப்ரமஹ்மாஸநஸ்திதா


கதாஸ்தே மஞ்சத்வம் த்ருஹிணஹரிருத்ரேயஶ்வரப்ருதஹா ஷிவாஹா ஸ்வச்சச்சயாகாதிதகபதப்ரச்சதபதஹ


த்வதீயானாம் பாஸாம் ப்ரதிபலனராகாருநதாயா

ஷரீரீ ஷ்ருங்காரோ ரஸ இவ துருதக்ஷாம்!"


தேவியின் இருக்கை

ஆளுந்திறமை


கதாஸ்தே மஞ்சத்வம் த்ருஹிண ஹரி ருத்ரேஶ்வர ப்ருத:

ஶிவ: ஸ்வச்ச ச்சாயா கடித கபட ப்ரச்சதபட:

த்வதீயாநாம் பாஸாம் ப்ரதிபலன ராகாருணதயா

சரீரீ ச்ருங்காரோ ரஸ இவ த்ருசாம் தோக்தி குதுகம்                


தாயே


லோகதிகார புருஷர்களான ப்ரஹ்மா,விஷ்ணு, ருத்ரன் ஈசானன் ஆகியவர்கள் உனது சிம்மாசனத்தின் கால்களாக இருக்கிறார்கள்.


அந்த சிம்மாசனத்தில் மேல் விரிப்பாக வெண்மையான ஒளியுடைய ஸதாசிவன் இருந்தாலும்.


உன்னுடைய சிருஙாகாரமான சிகப்பான ஒளியின் காரணமாக அவரும் சிவப்பாகத் தோற்றமளித்து உனது கண்களுக்கு ஆனந்த்தைக் கொடுகிறார்.


பிரம்மா முதலிய நால்வரும் லோகத்தின் அதிகார புருஷர்களாக இருந்தாலும்.


அம்பிகையின் சமீபத்தில் இருந்து சேவை செய்ய வேண்டுமென்கின்ற ஆசையில் அவளது கட்டில் கால்களாகளாவது இருக்க விரும்பி அவ்வாறு இருப்பத்தாக சொல்லப் பட்டிருக்கிறது.


சதாசிவனுடைய மடியில் அன்னை வீற்றிக்கிறதையே ப்ஞ்சபாரேதாசனா கோலமாக சொல்கையில் மேல் விரிப்பாக சதாசிவன் இருபாபதாக கூறப்படுகிறது.


சிவாகரே மஞ்சே 


பரசிவ ப்ரயங்க நிலயாம்


என்பதெல்லாம் இந்த ஸ்லோகத்தில் சொல்லப்பட்ட கோலத்தை அடிப்படையாகக் கொண்டதே.


ப்ரஹ்மா, விஷ்ணு, ருத்திரன் ஆகிய அதிகார புருஷர்கள் உன்னுடைய வேதஸ்வரூபமாகிய கட்டிலின் நான்கு கால்களாக இருக்கும் தன்மையை அடைந்திருக்கிறார்கள். ஸதசிவன் வெண்மையான காந்தியோடு கூடிய மேல்விரிப்பு என்ற வேஷத்துடன் இருக்கிறார். உன்னுடைய காந்தியின் பிரதிபலனத்தால் அவர் சிவப்பாகத் தோன்றுவதால் சிருங்கார ரஸமே சரீரம் படைத்து வந்ததுபோல் உன்னுடைய கண்களுக்கு ஆனந்தத்தை அளிப்பவர் ஆகிறார்.


 சில பாடங்களில் இது 94 ஆவது சுலோகமாகவும், அடுத்துவரும் ‘அராலா கேசேஷு’ என்பது 92 ஆவதாகவும் வருகிறது.


Oct

28

Abirami Anthathi : Stanza 73: தாமம் கடம்பு, படை பஞ்ச பாணம், தனுக் கரும்பு,

தாமம் கடம்பு, படை பஞ்ச பாணம், தனுக் கரும்பு,

யாமம் வயிரவர் எத்தும் பொழுது; எமக்கு என்று வைத்த

சேமம் திருவடி, செங்கைகள் நான்கு, ஒளி செம்மை, அம்மை

நாமம் திரிபுடை, ஒன்றோடு இரண்டு நயனங்களே                           73


அவள் கடப்ப மாலை அணிந்து கொண்டிருக்கிறாள். பஞ்ச பாணங்களைக் கைக் கொண்டு இருக்கிறாள். கரும்பாலான வில்லைக் கொண்டிருக்கிறாள். அவளைத் துதிக்கும் பொழுது என்பது நள்ளிரவு - அப்போதுதான் பைரவர்கள் அம்பிகையை பூஜிப்பார்கள். நமக்கு என்று என்ன சொத்து வைத்திருக்கிறாள் அம்பிகை? நமக்கு என்றே, அவளது திருவடித் தாமரைகள் காத்துக் கொண்டு இருக்கின்றன.


அவளது நான்கு கைகளும் செம்மையான நிறத்தில் காட்சி தருகின்றன. அவளது உருவமே ஒளியாலானது போல் இருக்கின்றது.


அவளது நாமமோ, 'திரிபுரை' என்பது. அதற்கு ஏற்ப, அவளது மூன்று நயனங்களும் காட்சி அளிக்கின்றன.


அம்பிகையை வர்ணிக்கிறார் பட்டர் இங்கே. அவளது வர்ணனைக்கு நடுவிலே, அவள் நமக்காக வைத்திருக்கும் சேவடிகள் பற்றியும் சொல்கிறார். அவளை சிறப்பாக பூஜிக்கும் பைரவர்கலை பற்றியும், அந்த நள்ளிரவு பற்றியும் சொல்கிறார். அது நள்ளிரவாய் இருந்தால் என்ன என்று தோன்றுகிறது பட்டருக்கு. ஏன்? ஏன் எனில், அம்மையோ, ஒளியே வடிவானவள். நள்ளிரவிலே, அவளை நினைத்தால், அந்த பொழுதே பகல் போல் ஆகிவிடாதா என்ன!


அதன் பின்னர், அவளது மூன்று கண்களும் நினைவுக்கு வருகின்றன. அன்னையின் நாமம் கூட, 'திரிபுரை' என்பது தானே!


இப்படி, அன்னையைப் பற்றி, அங்க வர்ணனையில் தொடங்கி, பைரவர்கள் ஏத்தும் பொழுது பற்றிச் சொல்லி, அவளது முக்கண்கள் பற்றிச் சொல்லி, அவளது சேவடித் தாமரைகள் பற்றியும் சொல்லி முடிக்கிறார் பட்டர்.

கோவிலின் map இங்குள்ளது.


https://g.co/kgs/nVw9pBR

Comments

Popular posts from this blog

ஶ்ரீசக்ர தாடங்கங்கள்

காயத்ரி மந்திரத்தில் என்ன சிறப்பு சக்தி இருக்கிறது...?

அம்பாளின் தாடங்க மஹிமைப் பற்றிய வர்ணணை.