Posts

அபிராமிஅந்தாதி பாடல்79

Image
#அபிராமிஅந்தாதி பாடல்79 விழிக்கே அருள் உண்டு, அபிராம வல்லிக்கு; வேதம் சொன்ன வழிக்கே வழிபட  நெஞ்சு உண்டு எமக்கு,  அவ்வழி கிடக்க, பழிக்கே சுழன்று,  வெம் பாவங்களே செய்து,  பாழ் நரகக் குழிக்கே அழுந்தும்  கயவர் தம்மோடு,  என்ன கூட்டு இனியே?      #பொருள் அபிராமியின் விழிகளில் என்றும் அருளுண்டு.  வேதமுறைப்படி அவளை வழிபட எனக்கு நெஞ்சமும் உண்டு. ஆகையால் பழியையும், பாவத்தையுமே விளைவித்து,  பாழ் நரகக்குழியில் அழுந்தி வாடும் பேதையர்களோடு எனக்கு இனி என்ன தொடர்பு?  (அபிராமி அன்னை சிறந்த துணையாவாள்). #பொருளுரை1 அருளைத் தவிர வேறொன்றில்லாத விழிகளையுடைய அபிராமியை வழிபடும் முறைகளை அறிந்தபின் அந்த வழியில் செல்லாமல்,  பாவச் செயல் புரிந்து நரகத்துக்கு வழி தேடுவோருடன் சேரும் வீண் பிறவி எதற்கு? (தேவையில்லை) 'பிறவாமை தரும் அபிராமியை அடையும் வழியறிந்த பின்,  பிறவிச் சுழலில் சிக்கும் வழிகள் எனக்குத் தேவையில்லை' என்று சுருக்கமாகப் பாடியிருக்கிறார் பட்டர். இந்தப் பாடலின் பின்னணி:  'உன்னை நம்பி நானே உள்ளமிழந்தேனே'  என்று உருகி உருகிப் ப...

#அபிராமிஅந்தாதிபாடல்78

Image
செப்பும் கனக கலசமும் போலும் திருமுலைமேல் #அபிராமிஅந்தாதிபாடல்78 செப்பும் கனக கலசமும்  போலும்  திருமுலைமேல் அப்பும் களப அபிராம வல்லி,  அணி தரளக்கொப்பும்,  வயிரக் குழையும்,  விழியின் கொழுங்கடையும், துப்பும்,  நிலவும் எழுதிவைத்தேன்,  என் துணை விழிக்கே       #பொருள் என் தாயே! அபிராமி!  உன்னையே என் இரு கண்களில் எழுதி வைத்தேன்.  அந்த உருவம் எப்படிப் பட்டதெனின், மாணிக்கப் பூண் அணிந்த பொற்கலசம் போன்ற திருமுலை; அம்முலைமேல் பூசிய மணம் வீசும் சிறந்த சந்தனக் கலவை;  அங்கே புரளும் அணிகலன்கள்; சிறந்த முத்துக் கொப்பு;  வைரத்தோடு; செழுமையான கருணைமிகும் கடைக்கண்கள்; குளிர்ச்சியை உமிழ்கின்ற நிலவைப் போன்ற திருமுகம் இவைகளெல்லாம் கொண்ட வடிவையே என் மனத்தில் இருத்தினேன். #பொருளுரை         அபிராமி நமக்கு எல்லாம் தாயானவள்.  அபிராமி பட்டரும் அந்தத் தாய்க்குக் குழந்தை அல்லவா!  சிறு குழந்தையின் பார்வை அன்னையின் ஸ்தனங்களின்மீது படிகிறது. குழந்தைகளின் பசியாற்றுபவை அவைதாமே! செப்பு போன்ற ஸ்தனபாரங்களால் அபி...

அபிராமி அந்தாதிபாடல்77

Image
அபிராமி அந்தாதிபாடல்77 பயிரவி,பஞ்சமி,பாசாங்குசை,பஞாசபாணி பயிரவி,  பஞ்சமி,  பாசாங்குசை, பஞ்ச பாணி,  வஞ்சர் உயிர் அவி உண்ணும் உயர் சண்டி,  காளி,  ஒளிரும் கலா வயிரவி,  மண்டலி,  மாலினி,  சூலி,  வராகி-- என்றே செயிர் அவி  நான்மறை சேர்  திருநாமங்கள்  செப்புவரே. #பொருள்:- ஏ, அபிராமி! உன்னை,  பைரவர் வணங்கக்கூடிய பைரவி; பஞ்சமி;  பாசத்தையும், அங்குசத்தையும் உடைய பாசாங்குசை;  ஐவகை மலர் அம்புகளையுடைய பஞ்சபாணி;  வஞ்சகரின் உயிரை மாய்த்து, அவர்கள் இரத்தத்தைக் குடிக்கின்ற மேலான சண்டி;  மகா காளி;  ஒளிவீசும் கலை பொருந்திய வயிரவி,  சூரிய, சந்திர மண்டலத்திலுள் ளோர்க்கு மண்டலி;  சூலத்தையுடைய சூலி;  உலகளந்த வராகி என்றெல்லாம் அடியார் பல்வேறு நாமங்களைச் சொல்லி வணங்குவர்.  குற்றமற்ற வேதங்களிலும், நின் திரு நாமங்கள் இவ்வாறு கூறப்படுகின்றன.  அதையே அடியார்கள் மீண்டும் மீண்டும் சொல்லி வாழ்த்தி  வணங்கி வழிபடுகின்றனர். #பொருளுரை:- பைரவன் சிவனின் துணைவியானதால் பைரவி,  பிரம்மா விஷ்ணு சிவன் முருகன...

அபிராமிஅந்தாதிபாடல்76

Image
குறித்தேன் மனத்தில் நின் கோலம் எல்லாம்; நின் குறிப்பு அறிந்து #அபிராமிஅந்தாதிபாடல்76 மறித்தேன் மறலி  வருகின்ற நேர்வழி;  வண்டு கிண்டி வெறித்தேன்  அவிழ் கொன்றை  வேணிப் பிரான்  ஒரு கூற்றை, மெய்யில் பறித்தே,  குடிபுகுதும்  பஞ்ச பாண பயிரவியே             #பொருள்# ஏ  அபிராமி!  பஞ்ச பாணங்களையுடையவளே!  உன்னுடைய திருக்கோலத்தையே மனத்தில் நினைத்து தியானிக்கின்றேன். உன்னுடைய திருவருளைக் கொண்டு, மருட்டுகின்ற யமன் வரும் வழியைக் கண்டு கொண்டேன்.  கண்டதும் அல்லாமல்,  அவன் வருவதற்கு முன்,  அவன் வழியை அடைத்தும் விட்டேன் (எல்லாம் நின் திருவருளே).  வண்டு மொய்க்கும் தேனொடு கூடிய கொன்றை மாலையை அணிந்த சிவபெருமானின் இடப்பாகத்தை வெற்றி கொண்டு,  தானொரு பாதியாக அமர்ந்தவளே! #பொருளுரை# அம்மையே! அபிராமி!  உன் கோலம் முழுதும்,  அழகு முழுவதும், வடிவம் முழுவதும் நான் என் மனதில் வாங்கிக் கொண்டு விட்டேன்.  உன்னை அறிந்து கொண்டதனால், அந்த காலன் வரும் வழியை அறிந்து கொண்டு,  அதனை அடைத்து விட்டே...

அபிராமி அந்தாதி பாடல் 75

Image
 அபிராமி அந்தாதி பாடல் 75 தங்குவர்,  கற்பகத் தாருவின் நீழலில்;  தாயர் இன்றி மங்குவர்,  மண்ணில் வழுவாப் பிறவியை; மால் வரையும், பொங்குவர் ஆழியும்,  ஈரெழ் புவனமும்,  பூத்த உந்திக் கொங்கு இவர்  பூங்குழலாள் திருமேனி  குறித்தே #பொருள்                பெரிய மலைகளையும், நுரைக் கடலையும், பதினான்கு உலகத்தையும் பெற்றெடுத்த ஏ அபிராமி! மணம் வீசும் பூவையணிந்த குழலுடையவளே! உன்னுடைய திருமேனியை இடையுறாது சிந்தையிலே தியானிப்பவர் சகலத்தையும் தருகின்ற கற்பக மரத்தின் நிழலையும் பெற்று இன்புறுவர். இடைவிடாது தோன்றும் மானிடப் பிறவியும் இல்லாமல் போவர். அத்தகைய பல பிறவிகளில் பெற்றெடுக்கும் மானிடத் தாயாரும் இல்லாமல் போவர் (என்றும் நிலையாகிய தாய் நீயே). #பொருளுரை அபிராமியை, ஈரேழ் புவனங்களையும், மலைகளையும், கடலையும் என இந்த உலகங்களையெல்லாம் படைத்த அந்த அபிராமியை இடை விடாது தியானிப்பவர்களுக்கு என்ன கிடைக்கும்? என்ன கிடைக்காது? சொல்லுகிறார் பட்டர். அவர்கள், கற்பக மரங்களின் நிழலிலே இருப்பார்கள். அதே சமயம், அவர்களுக்கு, இந்த மண்ணிலே, ...

அபிராமி அந்தாதி பாடல் 74.

Image
#அபிராமி அந்தாதி பாடல் 74. நயனங்கள் மூன்றுடை நாதனும், வேதமும்,  நாரணனும், அயனும் பரவும்  அபிராம வல்லி அடி இணையைப் பயன் என்று கொண்டவர்,  பாவையர் ஆடவும் பாடவும்,  பொன் சயனம் பொருந்து  தமனியக் காவினில் தங்குவரே        #பொருள்  முக்கண்களையுடைய சிவன்,  திருமால்,  பிரும்மா முதலானோரும் வணங்கக்கூடிய தேவி அபிராமியாகும்.  அவளுடைய பாதங்களிலே சரண் என்றடைந்த அடியார்கள் இந்திர போகத்தையும் விரும்ப மாட்டார்கள். அரம்பை முதலான தேவ மகளிர் பாடி, ஆட, பொன் ஆசனமே கிட்டினும், அன்னையின் பாதச் சேவையையே பெரிதென நினைவார்கள். #பொருளுரை                      அந்த அபிராமவல்லியை யாரெல்லாம் துதிக்கிறார்கள்?  நயனங்கள் மூன்றுடை நாதனாம் சிவ பெருமான் வணங்கி மகிழ்கிறார். அந்த வேதம் வணங்கி வழிபடுகிறது. அகில உலகங்கலையும் காத்து ரக்ஷிக்கும் அந்த நாரயணனும் வழிபடுகிறார். உலகங்களையெல்லாம் படைத்து அருள் செய்யும் அந்த அயனும் - பிரம்மாவும் வழிபடுகிறார். இப்படிப்பட்ட அபிராமிவல்லியின் அடியிணயைப் பரவுவதே பயனாகக...

அபிராமிஅந்தாதிபாடல்73

Image
 தாமம் கடம்பு, படை பஞ்ச பாணம், தனுக் கரும்பு, #அபிராமிஅந்தாதிபாடல்73 தாமம் கடம்பு, படை பஞ்ச பாணம்,  தனுக் கரும்பு, யாமம் வயிரவர்  எத்தும் பொழுது;  எமக்கு என்று வைத்த சேமம் திருவடி,  செங்கைகள் நான்கு,  ஒளி செம்மை, அம்மை நாமம் திரிபுடை,  ஒன்றோடு இரண்டு நயனங்களே                           #பொருள்:- ஏ, அபிராமி!  உன்னுடைய மாலை,  கடம்ப மாலை,  படைகளோ பஞ்ச பாணங்கள் (ஐவகை மலர் அம்புகள்);  வில்லோ கரும்பு;  உன்னுடைய நெற்றிக் கண்களோ அருட் கண்கள்;  நான்கு கரங்களோ செந்நிறமாகும். உன்னை வயிரவர்கள் வணங்கும் நேரமோ நள்ளிரவாகும்.  திரிபுரை என்ற பெயரும் உண்டும்.  நீ எனக்கு மேலாக வைத்திருக்கும் செல்வம் நின்னுடைய திருவடித் தாமரைகளேயாகும். #பொருளுரை அவள் கடப்ப மாலை அணிந்து கொண்டிருக்கிறாள்.  பஞ்ச பாணங்களைக் கைக் கொண்டு இருக்கிறாள்.  கரும்பாலான வில்லைக் கொண்டிருக்கிறாள்.  அவளைத் துதிக்கும் பொழுது என்பது நள்ளிரவு -  அப்போதுதான் பைரவர்கள் அம்பிகை...