மஹாபெரியவாளும் திருகோயிலும்
மஹாபெரியவாளுக்கும் ஓவ்வொரு கோயிலுக்கும் நிறைய சம்பந்தங்கள் உள்ளது.
அவ்வாறான நிகழ்வு கடந்த வாரம் நடந்தது. எனது வாடிக்கையாளர் ஒருவருக்கு ஆர்டர் கைபேசி வாயிலாக வரும்,வந்த ஆர்டரை எனது ஊழியர் மூலமாக அவருக்கு கொடுப்பது வழக்கம்.
ஆனால் இந்த முறை அவரை தொடர்ப்புக் கொள்ளும்போது,,
என்னை அவரது இல்லத்தில் வந்து கொடுக்குமாறு ஒரு விண்ணப்பம்.
எனவே அவரது வீட்டை நோக்கி இரண்டு நாட்கள் முன்பு சென்று வந்தேன். அவர் என்ன நினைத்தாரோ என தெரியவில்லை. கிட்டத்தட்ட 45நிமிடங்கள் நிறைய விஷயங்களை பேசினார்.
அதில் அவர்ச் சொன்ன விஷயம்,நான் மஹாபெரியவா பக்தர், மஹாபெரியவாவிடம் நல்ல பழக்கம் உண்டு.
ஒரு நாள் ஹாலில் உட்கார்ந்து எதைய யோசித்துக் கொண்டு இருந்தேன். என்னை யாரே ஒருவர் கூப்பிடுவது போல் ஒரு உணர்வு.
என்னை யோசித்துக் கொண்டு இருக்கிறாய். யோசிப்பதற்கு பதிலாக எதாவது எழுதலாமே என்று ஒரு கேள்வி அவரிடமிருந்து.
எதைப்பற்றி எழுதுவது என்று என்னிடமிருந்து கேள்வி. அதற்கு அவரிடமிருந்து நான் சென்று வந்த கோவில்களைப் பற்றிய எழுது என்ற பதில்.
அவ்வாறு எழுத ஆரம்பித்தது எழுத பழக்கம். இது நடப்பதற்கு கிட்டத்தட்ட ஒருவாரத்திற்கு முன்பு தான் கங்கை கொண்ட சோழப்புரம் கோயில் பூஜை நடப்பதற்கு காரணம் மஹாபெரியவா மற்றும் அவ்வாறே தான் திரு.பிரதமர் கோயில் முப்பெரு விழாவிற்கு வந்தற்கான காரணம் காஞ்சி மடம் தான் காரணம் என்ற பதிவை படித்தேன்.
அந்த பதிவை தனி பதிவாக திங்களன்று காணலாம்.
எனவே நாம் ஒன்றை படிப்பதற்கும் ,அந்த நிகழ்வு மனதில் இருக்கும் போது அது சம்பந்தபட்ட மற்றும் ஒருவரை சந்திப்பது என்பது அந்த தெய்வத்தின் நிகழ்வே வேறொன்றுமில்லை என்பது திண்ணம் ஆகிறது.
எல்லாம் அவன் செயல் நம்மை வைத்து எதையோ ஒன்றை நடக்க வைப்பதற்கான இந்த நிகழ்வு நடக்கிறது என்பதை உணர முடிகிறது.
மஹாபெரியவா சரணம்.
எனது நண்பர் உமாசங்கர் அவரின் அனுபவத்தைப் பற்றிய பதிவு கீழே லிங்க்கில் உள்ளது.
https://mahaperiyavapuranam.org/experience-with-mahaperiyava-mahendravadi-sri-umashankar/
Comments
Post a Comment