குரு என்பவர் யார்?.
என்னை கவர்ந்த நண்பரின் பதிவு
குரு என்பவர் யார்?.
பரமாத்மா ஜீவாத்மா சத்து சித்து ஆனந்தம் என்பவை யாவை என்பதைப் பற்றி குருவின் விளக்கம்.
பரமாத்மா... ஒரு ஆத்மாவாக, ஒரு தேகத்துக்குள் பிரவேசிக்கும் போது...
அந்த ஜீவனுக்கான
'ஜீவ ஆத்மாவாக'...
'சத்து - சித்து - ஆனந்தம்' என்ற நிலையை அடைகிறது.
பரமாத்மா...
இவ்வாறாக, ஒரு ஜீவனுக்கான ஆத்மாவாகும் போது...
பரமாத்ம சொரூபத்தின்,
'சத்து' என்ற 'என்றுமிருக்கும் இருப்பு'... மாறாது நிலை கொள்கிறது.
பரமாத்ம சொரூபத்தின் 'ஆனந்தம்' என்ற 'எப்போதுமிருக்கும் ஆனந்தமும்'... மாறாது நிலை கொள்கிறது.
ஆனால், 'சித்து' என்ற 'ஜீவனின் நிலைப்பாடுதான்'...
அதன் 'கர்ம வினைகளுக்கு ஏற்ப, மனம் - புத்தி - அகங்காரம் என,
ஜீவனுக்கு - ஜீவன் மாறுபட்டுக் கொண்டே இருக்கிறது.
இந்த 'சித்தத்தை', பர்மாத்மாவின் கருணையினாலும், தங்களது பெரு முயற்சிகளாலும், 'தெளிவித்துக்' கொண்டவர்களே.
சித்தர்கள் - ரிஷிகள் - முனிவர்கள் - யோகிகள் - ஞானிகள் - மகன்னீயர்கள் மற்றும் மகான்கள்'.
ஆனால் இந்த ஜீவனோ... 'என்றும் இருக்கும்' தனது 'இருப்பையும்' மறந்து,
என்றும் அனுபவிக்கும் தனது 'ஆனந்தத்தையும்' மறந்து,
கர்ம வினைகளால் களங்கப்பட்ட 'சித்தத்துடன்'... தான் யார் ? என்ற அறியாமையால்... சிக்கித் தவித்து நிற்கிறது.
அவ்வாறு, சிக்கித் தவிக்கும் ஜீவனை மீட்பதற்குத்தான்...
கருணையாளனான இறைவன் நமக்கு ஒரு 'சத்குருவின்' துணையை அளித்து அருள்கிறான்.
ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளின் திருவடிகளே சரணம்... சரணம் !!
Comments
Post a Comment