அம்பாள் மன்மதனுக்கு ஔக்ஷதம் ஆனாள்.


எதற்காக அம்பாள் மன்மதனுக்கு ஔக்ஷதம் ஆனாள்.


இதைதான் லலிதா சஹஸ்ர நாமம்


#ஹரநேத்ராக்னிஸந்தக்தகாமஸஞ்ஜீவநெளஷதி#


ஈசன் காலாக்கினி ருத்ரனாகத் தன் நெற்றிக்கண்ணால் மன்மதனை எரித்தபோது,


அம்பிகையானவள் தன் குளிர்ந்த நோக்கால் ,


சஞ்சீவனி மருந்து போலச் செயல்பட்டு மன்மதனைப் பிழைக்க வைத்தாள். 


அத்தகைய சஞ்சீவனி போலவே ருத்ரன் உலகங்களை எரிக்கும்போது,


எரிந்த உலகிற்குக் குளிர்ச்சியைத் தன் பார்வையால் கொடுத்து மன்மதனைப் பிழைக்க வைத்தது போல் அனைவரையும், உலகங்கள் அனைத்தையும் பிழைக்க வைக்கிறாள். 


இதன் உள் சூக்ஷமம் தனது கணவன் சிவப்பெருமான் கொடுத்த சாபத்தை மாற்ற இயலாது.


ஆனால் தனது பக்தையான ரதி தேவியின் பக்தியைப் பொருட்டு அவன் உயிர்பித்து எழுப்பி மன்மதன் ரதிதேவியின் கண்ணுக்கு மட்டும் தெரியும் மாறி அவனுக்கு சாப விமோசனம் கொடுத்தால். 


அதனால் மன்மதனின் கரும்ப வில்லையும் மலர் அம்புகளையும் அம்பாளிடம் வந்தது.


மன்மதன் என்பவன் ஆசையை துண்டுபவன்,அவன் காமத்துக்கு உரியவன்


அந்த காமம்/ஆசை நம்முள் எழும்போது ஆசையை அறுப்பவள் அம்பாள்.


அதனால் அவள் கையில் பாசமும் மற்றும் அங்குசமும்


மறாறெரு கையில் கரும்பு அம்புமா மற்றும் மலர் அம்பும் அவளது நான்கு கைகளிலும் தாங்கி நிற்கிறாள்


ஒன்று ஆசையை தூண்டக்கூடியது மற்றொன்று அந்த பாசத்தை அறுக்க கூடியது.


ஈஸ்வரனுடைய ஸ்வரூபத்தோடு அம்பிகையின் ஸ்வரூபமும் கலந்திருக்கின்றதாவது பூவிலே எப்படி மணம் சேர்ந்திருக்கிறதோ அவ்வாறு இருக்கிறதாம்.


பூவிலிருந்து சுகந்தத்தை எவ்வாறு பிரிக்க இயலாதோ, 


அக்னியில் இருந்து பிரகாசத்தை எவ்வாறு பிரிக்க இயலாதோ


அப்படியே


ஈஸ்வரனையும் அம்பிகையையும் பிரிக்க இயலாது. 


இந்த அபூர்வ தம்பதிகளின் ஆனந்தமயமான பிரகாசமே அனைத்து ஜீவாத்மாக்களுக்கும் ஜீவாதாரமாய் விளங்குகிறது.


இதையே லலிதா சஹஸ்ரநாமத்தில்


 வ்யோமகேசீ, 


விமானஸ்தா” 


என்று கூறுகின்றனர். 


இதை ஆகாச தத்துவம் எனவும் கூறுவர். 


அர்த்தநாரீச்வரரைக் குறிப்பதாயும் கூறுவார்கள்.

Comments

Popular posts from this blog

ஶ்ரீசக்ர தாடங்கங்கள்

காயத்ரி மந்திரத்தில் என்ன சிறப்பு சக்தி இருக்கிறது...?

அம்பாளின் தாடங்க மஹிமைப் பற்றிய வர்ணணை.