காமாக்ஷி :

 காமாக்ஷி :


தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)-2

காமாக்ஷியின் நாலு கைகளில் ஒன்றில் ஒரு வில்லும்,

இன்னொன்றில் ஐந்து அம்புகளும் இருக்கும். 

அந்த வில் கரும்பினால் ஆனது.

அம்புகள் புஷ்பங்களால் ஆனவை.

சாதாரணமாக கெட்டியான இரும்பினால் வில் அமைந்திருக்கும்;

இங்கோ மதுரமான கரும்பு அம்பாளுக்கு வில்லாக இருக்கிறது.

கூரான அம்புகளுக்குப் பதில் மிகவும் மிருதுவான மலர்களைப் பாணங்களாக வைத்திருக்கிறாள்.

அந்தக் #கரும்புவில்_மனஸ்# என்ற தத்துவத்தைக் குறிப்பதாகும்.

மதுரமான மனம் படைத்த அம்பாள் நம் மனங்களையெல்லாம் இந்த வில்லைக் காட்டி வசப்படுத்திக் கொண்டு விடுகிறாள். 

அவளுடைய ஐந்து புஷ்ப பாணங்களும் நம் #ஐம்புலன்களை# ஆகர்ஷித்துச் செயலற்றுப் போகும்படி செய்வதற்காக ஏற்பட்டவை.

 ‘மனோ ரூபேக்ஷூ கோதண்டா – பஞ்ச தன்மாத்ர ஸாயகா’ என்று,

 இதையே “லலிதா ஸஹஸ்ர நாமம்” கூறுகிறது. 

நம்முடைய மனோவிருத்தியும், இந்திரிய விவகாரங்களும் அடங்குவதற்கே பராசக்தியானவள் காமாக்ஷியாகி கரும்பு வில்லும் மலர்ப் பாணமும் தாங்கி வந்திருக்கிறாள்.

மீதி இரண்டு கைகளில்

 பாசமும் அங்குசமும் வைத்திருக்கிறாள். 

பாசமானது நம் பாசங்களை, ஆசையை நீக்கி அவளோடு நம்மைக் கட்டிப்போடுகிற கயிறு. 

அங்குசம், நாம் துவேஷத்தில் கோபிக்கிறபோது, நம்மைக் குத்தி அடக்குவதற்காக, ஃபிஸிக்ஸில் பிரபஞ்ச இயக்கங்களின் அடிப்படைத் தத்துவங்களாகச் சொல்கிற கவர்ச்சி (attraction) , விலக்கல் (repulsion) என்பனதான், 

மநுஷ்ய வாழ்வில் முறையே ஆசையும் துவேஷமும் ஆகின்றன. இவற்றை அடக்கி நம்மை ஸம்ஸாரத்திலிருந்து மீட்கவே, அம்பாள் காமாக்ஷியாகி பாசாங்குசங்களைத் தரித்திருக்கிறாள்.

 ‘ராக ஸ்வரூப பாசாட்யா’, ‘க்ரோதாகாராங்குசோஜ்வலா’

 என்பதாக லலிதா ஸகஸ்ரநாமத்தில், பாசத்தை ஆசையாகவும்,

 (ராகம்) அங்குசத்தை துவேஷமாகவும் (க்ரோதம்)

 சொன்னபோது இவற்றை அவை அடக்கி அழிக்கின்றன என்று அர்த்தம் பண்ணிக் கொள்ள வேண்டும்.

இப்படியாக, நாலு கைகளில் கரும்பு வில், புஷ்ப பாணம், பாசம், அங்குசம், இவற்றை தரித்துக்கொண்டு, 

நிறமே இல்லாத பிரம்மத்திலிருந்து செக்கச் செவேல் என்ற பரம கருணையின் நிறத்தோடு, 

உதய சூரியன் மாதிரி, 

மாதுளம்பூ மாதிரி, 

குங்குமப்பூ மாதிரி, 

செம்பருத்தி மாதிரி,

காமேசுவரியான காமாக்ஷி அநுக்கிரக நிமித்தம் தோன்றி இருக்கிறாள்.

காமாக்ஷி தனது கண்ணால் நம்மை கட்டிப்போடுபவள். 

அதனால் அவள்

காம+ஆக்ஷி=காமாக்ஷி

Comments

Popular posts from this blog

ஶ்ரீசக்ர தாடங்கங்கள்

காயத்ரி மந்திரத்தில் என்ன சிறப்பு சக்தி இருக்கிறது...?

அம்பாளின் தாடங்க மஹிமைப் பற்றிய வர்ணணை.