மஹாபெரியவா
மஹாபெரியவா
திருவடிகளே சரணம்.
எனது நண்பர் அவரின் அனுபவ பதிவு.
மஹா பெரியவா எங்கள் அகத்துக்கு வருகை புரிந்த அற்புத அனுபவம்.
1960 ஆண்டு பெரியவா தஞ்சை ஜில்லாவில் பல இடங்களுக்குச் சென்று அனுக்ரஹம் செய்த சமயம்.
திப்பிராஜபுரம் என்ற வாத்திம்மா கிராமத்தில் ஓர் அகத்தில் பிக்ஷா வந்தனம்.
சிஷ்யர்கள் சூழ சென்று கொண்டிருந்தார். திடீரென அவர் பாதை மாறி வேறொரு வழியில் செல்ல ஆரம்பித்தார். உடன் இருந்தவர்கள்
" பெரியவா இது ஸ்வாமிமலை செல்லும் பாதை அல்ல என்று தடுத்தும் அவர் மேலே சென்று கொண்டிருந்தார்.
ஸர்வேஸ்வரனுக்கு வழி காட்ட முடியுமா? கொஞ்ச தூரத்தில் ஸ்வாமி மலை . அங்கு அக்ரஹாரத்தில் என் பெரியம்மா. அகம். அந்த இடம் வந்த உடன் ப்ரேக் போட்டார் போல் நின்று வீட்டின் உள்ளே செல்லும் முன்
"இது ஸ்வாமிநாதன் அகம் தானே " என் தன்னை ச்சுட்டிக் காண்பித்து தன் பூர்வாச்ரமப் பெயரைக் குறிப்பிட்டுக் கேட்டார்.
என் பெரியப்பா பெயரும் ஸ்வாமி நாதன் தான். வெகு வேகமாக உள்ளே சென்று ஸ்வாமி அலமாரி முன்பு தண்ட நமஸ்காரம் செய்தார்.
"இது கோவில் டா அம்பாள் கோவில் " என்று சொல்லி வெகு வேகமாக வெளியில் சென்று விட்டார். அகத்தில் இருந்தவர்கள் கவனிக்கும் முன்பு! இதில் என்ன விசேஷம் என்றால் அந்த டப்பாவில் ஷோடஸி மந்த்ரா ரூபமாக ப்ரதிஷ்டை ஶ்ரீ சாந்தானந்த ஸ்வாமிகளால் செய்யப்பட்டு என் பாட்டி பூஜித்து வந்து என் பெரியம்மா ளுக்கு அளிக்கப் பட்டது.
பாட்டிக்கு வாராஹி ரூபமாய் சிரஸில் திவ்ய ஒளியுடன் காட்சி கொடுத்து உபதேசம் ஆன மந்த்தரம்!
பெரியவா கிட்டே பாட்டி சொல்லி அவர்தாம் ஶ்ரீ சாந்தானந்த ஸ்வாமிகளிடம் உபதேசம் பெறுமாறு அனுக்ரஹம் செய்தார்.
இன்றும் பெரியம்மா அகத்தில் இருக்கிறாள் அம்பாள்!!
ஜய ஜய சங்கரா.
Comments
Post a Comment