தஞ்சாவூர் மாநகர் உருவான விதம் மற்றும் அதன் நீர்மேலாண்மைப் பற்றிய பதிவு.

 தஞ்சாவூர் மாநகர் உருவான விதம் மற்றும் அதன் நீர்மேலாண்மைப் பற்றிய பதிவு.


தஞ்சாவூர்: 

ஆஹா என்ன அழகு எத்தனை அழகு... 


கண்ணையும், மனதையும் தழுவி நெஞ்சை நிறைக்கும் தஞ்சையில் உள்ள அனைத்தும் அழகோ அழகுதான்.


நம் முன்னோர்கள் சிறந்த அறிவு ஜீவிகள். 


முக்கியமாக #நீர்மேலாண்மையில் சிறந்தவர்கள். 


அதனால்தான் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் பொருட்டு தஞ்சையில் குளங்கள் வெட்டினர்.


சோழமன்னர்களின் ஆட்சிக் காலத்தில் தஞ்சை நகரை சுற்றிலும் நான்குபுறமும் தொடர்ச்சியாக தண்ணீர் பயணிக்கக்கூடிய அகழிகள் அமைக்கப்பட்டன. 


அன்றே தண்ணீரின் அவசியத்தையும், மேன்மையையும் உணர்ந்து பரந்து, விரிந்து சென்றது.


இப்படி பல கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த அகழியில் காவிரி நீரும் மழைநீரும் சேமிக்கப்பட்டன.


இதுமட்டுமல்ல பெரிய கோவில் அருகே சிவகங்கை குளம், அய்யன் குளம், சாமந்தன் குளம் உருவாக்க ப் பட்டது. 


பெரியக்கோவிலில் விழுக்கின்ற மழை நீரானது வீணாகமல் அருகில் உள்ள சிவகங்கை குளத்திற்கு 

சென்றடையும். 


சிவகங்கை குளம் நிரப்பினால் அதிகபடியான நீர் ஊரின் மத்தியில் உள்ள ஐயன் குளத்தில் சேரும் படியான நீர்மேலாண்மை அமைப்பை ஏற்படுத்து இருக்கின்றனர் நம் முன்னோர்கள்.


அவ்வாறை தஞ்சைக்கு மீண்டும் புத்துயிர் ஊட்டினார் பாண்டிய மன்னன் வல்லபனுக்கு சேனாதிபதியாய் இருந்த சாமந்தன் என்பவர். 


தஞ்சை நகரில் சாமந்த நாராயண விண்ணகரம் என்ற பெருமாள் கோயிலை நிறுவினார்.


அந்த கோயிலுக்காக சாமந்த நாராயணக்குளம்  என்ற குளம் ஒன்றை வெட்டினார். 

பின்னர், அங்கு ஒரு புதுக் குடியிருப்பையும் தோற்றுவித்தார் சாமந்தன்.


அப்படி அவர் தோற்றுவித்த குடியிருப்பு மெல்ல மெல்ல வளர்ந்து நாயக்கர்கள், மராட்டிய மன்னர்கள், ஆங்கிலேயர்கள் என பயணித்து இன்று தஞ்சை மாநகராய் பிரமாண்டமாய் மாறியுள்ளது.


தஞ்சையில் புதுக்குடியிருப்பு 

வரக்காரணாமாய் இருந்த இக்கோயில் கீழவாசல் பகுதியில் கீழை நரசிம்மர் என்ற பெயரில் இன்றும் உள்ளது.


தஞ்சைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பெரிய கோயிலை மட்டும் பார்த்து விட்டு திரும்பாமல் வரலாற்றை தேடி பயணிக்க வேண்டும்.


தஞ்சாவூர் மாநகருக்கு தண்ணீர் பிரச்சனையை போக்கும் பல்வேறு குளங்களில் சாமந்தன் குளமும் ஒன்றாகும்


மற்றும்


எழில் மிகு குளங்களாக இருந்த அய்யன்குளமும் ஆகும்


தஞ்சையில் நீர் மேலாண்மையில் முக்கியமாக விளங்கிய இது போன்ற குளங்களா என்று அனைவரும் வியக்கும் அளவில் இருந்தவை ஆகும்.


இதில் அய்யன்குளத்துக்கு, மன்னர் காலத்தில் பயன்படுத்திய நீர் வழிப்பாதையை கண்டறிந்து,  

அவை சீரமைக்கப்பட்டது. 


குளத்தை சுற்றிலும் நடைபாதை,


அலங்கார மின் விளக்குகள், 


சுவரில் ஓவியங்கள் 


என பணிகள் முடிக்கப்பட்டு திறக்கப்பட்டு ,மாலைநேரத்தில் பொதுமக்கள் இதில் நடந்து தங்களை ரிலாக்ஸ் ஆக்கி கொள்கின்றனர்.


மாலை நேரத்தில் சுற்றுலாவாக வருபவர்களுக்கு இந்த குளங்கள் சிறப்பான ஒரு மகிழ்வை தரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.


குளம் தானே என்று நினைப்பதை தவிர்த்து நம் முன்னோர்களின் தொலைநோக்கு பார்வை எப்படி இருந்தது என்பதை பார்க்க வேண்டும்.


தஞ்சையின் தென்மேற்கு பகுதியில் பெய்யும் மழைநீரை செவப்பன் ஏரிக்கு வாரிகள் மூலம் கொண்டு வந்து, 


நீரை சேமித்து சேற்றை அடியில் தங்கவிட்டு தெளிந்த நீரை மட்டும் குழாய்களின் வழியே சிவகங்கை குளத்திற்கு அனுப்பி அங்குள்ள கிணறுகளில் வண்டல் மண்ணை படியவிட்டு தெளிந்த நீரை சுடுமண் குழாய் வழியாக மேலவீதியில் உள்ள அய்யன் குளத்திற்கு கொண்டு சென்று, 


தொடர்ந்து சென்று சாமந்தன் குளத்திற்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்டது.


இத்தகைய பெருமை வாய்ந்த சாமந்தான் குளத்தின்  


மேல்புறத்தில்  படிக்கட்டுகளும், குளத்தை சுற்றிலும் 


அலங்கார மின்விளக்குகள்,


நடுவில் நீராழி மண்டபம், 


அதில் பக்தர்கள் சென்று வழிபடும் வகையில் பாலங்கள் அமைக்கப்பட்டன.


காவேரி நதி நீா் பாய்ந்து வளம் சோ்த்தாலும், விவசாயம் முதன்மைத் தொழிலாக இருப்பதால் 


தஞ்சாவூா் மாவட்டம் தமிழகத்தின் நெற்களஞ்சியம் என அழைக்கப் படுகிறது. 


இம்மாவட்டத்தில் உள்ள 


கோயில்கள், 


கலைகள், 


கட்டிடக்கலைகள் உலகப்புகழ் பெற்றவை. 


சோழா்கள், 


பாண்டியா்கள், 


நாயக்கா்கள், 


மராட்டியா்கள் ஆட்சியின் கீழும் இந்தியா சுதந்திரம் அடையும் வரை பிரிட்டிஷாரின் ஆட்சியன் கீழும் இருந்தது. 


கல்லணை,


தஞ்சை பெரிய கோயில்,


சரபோஜி மஹால் அரண்மனை,


 சரஸ்வதி மஹால் நூல்நிலையம்,


 பீரங்கி மேடை 


மற்றும் 


பல புராதண சின்னங்கள் மேற்கண்ட ஆட்சியாளா்களின் ஆளுகைக்கு உட்பட்டு தஞ்சை மாவட்டம் இருந்ததை எடுத்துக்காட்டும் வரலாற்று நினைவுச் சின்னங்கள் ஆகும்.

Comments

Popular posts from this blog

ஶ்ரீசக்ர தாடங்கங்கள்

காயத்ரி மந்திரத்தில் என்ன சிறப்பு சக்தி இருக்கிறது...?

அம்பாளின் தாடங்க மஹிமைப் பற்றிய வர்ணணை.