தஞ்சாவூர் மேலவீதி கோயிலாகள்
கடந்த இரு தினங்களாக தஞ்சை பங்காரு காமாக்ஷியைப் பற்றிய பதிவுகளை கண்டோம்.
தஞ்சை பங்காரு காமாக்ஷியை தவிர மற்றும் கோவில்களை எவ்வாறு நம் முப்பாட்டன் அமைத்துள்ளான் என்பதை இந்த பதிவில் காணலாம்.
காரணம் கோவில் இல்லாத ஊரில் குடி இருக்கவேண்டாம் என்பது பழமொழி.
அதற்கேற்ப தஞ்சாவூரின் மாநகரின் அமைப்பு அவ்வாறு இருக்கும்.
அதன் அழகை இராஜக்கள் காலத்தில் நாம் வாழ்ந்து இருந்தால் என்பதை கற்பனைச் செய்து இந்த பதிவை வாசித்தால் நமது மணகண்ணில் மிக அழகாக தோன்றும்.
ஊரின் அமைப்பே மிக அலதியான அழகு.
ஊரின் கட்டமைப்பு என்பது நாலு ராஜ வீதிகளுக்கு நடுவே ஊரின் அமைப்பை.
அவை பல சந்துக்களைக் கொண்டு ஒரு தெருவையும் மற்றொரு தெருவையும் இணைப்புதற்கு வசதியாக அமைத்து இருப்பார்கள்.
ஒவ்வொரு சந்து வெளிபுறமும் கழிவுநீர் வெளியேறுவதற்கு வசதியாக சிறு சாக்கடை அமைப்பு.
இந்த ஒவ்வொரு சந்திகள் வழியாக நான்கு வீதிகளை அடையலாம்.
ஓவ்வொரு சின்ன சின்ன சாக்கடைகளும் வெளிபுரத்தில்
உள்ள பெரிய சாக்கடைகளையுடன் இணைப்பு இருக்கும்.
வெளிபுர சாக்கடை அடுத்து நான்கு வீதிகள்.
அவை கம்பீரமாக ஊரின் அழகை வெளிச்சம் போட்டு காட்டுகின்ற மாதிரி நாலு பெரிய இராஜவீதிகள்.
அவை
மேலவீதி
வடக்குவீதி
கீழவீதி
அடுத்தது
தெற்கு வீதி
இதை அடுத்து அமைத்துள்ள அழகிய கோவில்கள்.
பிரகதீஸ்வரர் கோவில் அல்லது ராஜராஜேஸ்வரம் அல்லது பெருவுடையார் கோவில்
அவை
தஞ்சாவூரின் மேல வீதியில் பல கோயில்கள் உள்ளன,
அவற்றில் அபிமான சில:
அபிராமி அம்பிகை உடனுறை அமர்தகடேஸ்வரர் கோயில்,
விசுவநாதர் கோயில்,
ஆனந்தவல்லியம்மன் கோயில்,
காசி விசுவநாதர் கோயில்,
கொங்கணேஸ்வரர் கோயில்,
சங்கரநாராயணர் கோயில்,
சித்தாநந்தீசுவரர் கோயில்
பங்காரு காமாக்ஷி அம்மன் கோயில்
நவநீத கிருஷ்ணன் கோயில்
மற்றும்
மூலை அனுமார் கோயில் ஆகியவை அடங்கும்.
மேல வீதியில் உள்ள முக்கிய கோயில்கள்:
அபிராமி அம்பிகை உடனுறை அமர்தகடேஸ்வரர் கோயில்:
இந்த சிவன் கோவில் மேல வீதியில் அமைந்துள்ள ஒரு பழமையான கோயிலாகும்.
விசுவநாதர் கோயில்:
மற்றொரு முக்கியமான கோயில், இதுவும் மேல வீதியில் உள்ளது.
ஆனந்தவல்லியம்மன் கோயில்:
இங்கு அம்மன் சன்னதி பிரசித்தி பெற்றதாகும்.
காசி விசுவநாதர் கோயில்:
சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோயிலும் மேல வீதியில் உள்ளது.
கேசவதுதீசுவரர் கோயில்:
இதுவும் மேல வீதியில் உள்ள ஒரு சிவன் கோயிலாகும்.
கொங்கணேஸ்வரர் கோயில்:
இதுவும் மேல வீதியில் அமைந்திருக்கும் ஒரு சிவன் கோவிலாகும்.
சங்கரநாராயணர் கோயில்:
சங்கரனும் நாராயணரும் ஒரே சன்னதியில் அருள்பாலிக்கும் சிறப்பு பெற்ற கோயில்.
சித்தாநந்தீசுவரர் கோயில்:
இதுவும் மேல வீதி கோயில் பட்டியலில் உள்ள ஒரு சிவன் கோயிலாகும்.
மூலை அனுமார் கோயில்:
இந்த அனுமார் கோயில்
மேல வீதியின் ஒரு முக்கிய பகுதியாகும்.
இதை தவிர
நாலு கால் மண்டப ஆஞ்ஜனேயர் கோவில்
வெங்கடேச பெருமாள் கோயில்
கொடிமரத்து மூலை கோடியம்மன் கோயில்
வெள்ளைபிள்ளையார் கோவில்
இதை தவிர பல சான்றோர்களை உருவாக்கிய பள்ளிக்கூடங்கள்
அவை
வீரராகவ பள்ளிக்கூடம்
கல்யாணசுந்தரம் பள்ளிக்கூடம்
கொங்கணேஸ்வர நடுநிலைப்பள்ளி
ராணிவேக்கால் சந்து ஆரம்ப பள்ளி.
இவ்வாறு பல கட்டமைப்புகளை தன்னக்கதே கொண்ட ஒரு அழகிய பழைய ஊர் .
தஞ்சாவூர் என பெயர் பெற்ற அழகிய மாவட்டத்தின் தலைநகரமாகிய தஞ்சாவூர் எனும் ஊர்.
தஞ்சன் எனும் அரக்கனை அம்பிகை அழித்ததால் இதற்கு தஞ்சாவூர் என பெயர் வந்தது என மூதாதையர் வாக்கு.
இதை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்த மன்னர்கள்
இராஜராஜசோழன் அவரது வம்சாவழிகள்
சனபோஜிமன்னனர் அவரது வம்சாவழிகள்
இவர்கள் ஆண்ட காலம் ஒரு பொற்காலம் எனலாம்.
இவரது காலத்தில் காலத்தால் அழியாத ,பல பெருமை வாய்ந்த மற்றும் வரலாற்று சான்றுமிக்க பலவற்றை உருவாக்கியுள்ளனர் என்பதே இந்த ஊருக்கு பெருமை.
இவர்களது நீர்மேலாண்மை தனிபதிவாக காணலாம்.
Comments
Post a Comment