பாதாரவிந்தம் கர்மா கோயில்

 கடந்த சில தினங்களாக மன்னர்கள் ஏன் கோயிலை கட்டினார்கள்,அதன் அவசியம் என்ன,

கர்மா பற்றிய பதிவுகள் மற்றும் அம்பாளின் பாதார விந்தங்களில் சரணாகதி அதாவது அபிராமி அந்தாதிப் பற்றிய விளக்கங்கள் போன்ற பதிவை இட்டு வருகிறேன்.


இவை மூன்றுக்கும் என்ன


தொடர்பு எனும் வினா எழும்.


அவற்றிற்க்கான தொடர்பு நாம் செய்த கர்மா தான்,


நாம் எங்கு,எப்போது பிறக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கிறது கர்மா தான் என்கிறது ஹிந்து சனாதனதர்மம்.


இதை தான் சைவசித்தாந்தமும் ஆணவம்/கன்மம்/மாயை என்கிறது.


அவ்வாறு மனிதனாக பிறக்கிறோம் என்றால், அது நமது கெட்ட கர்மாவை கழித்து நல்ல கர்மாவை அடைவதற்கான மார்க்கத்தை வழிவக்குகிறது ஹிந்து சனாதனதர்மம் .


அந்த கெட்டகர்மா கழித்து, நல்ல கர்மா அடைவதற்கான ஒரு மார்க்கம் அதுவே கோயிலில் பிரார்த்தனை தான்.


அந்த மனதை ஒருநிலைப்படுத்தி இறைவனை அடைவதற்கான ஒரு புண்ணிய பூமி கோயில் ஆகும்.


கோயில் என்பது ஆன்மா இரண்டர+ இலயிக்கும் இடம். 


ஆதலால் அது #ஆலயம்# ஆனது.


அல்லது 


#கோ# என்றால் #ஆன்மா# அல்லது #இறைவன்#


கோயில் என்பதன் பொருள் "இறைவன் வாழுமிடம்" 


அல்லது 


"இறைவனின் இல்லம்" ஆகும். 


"கோ" என்பது இறைவனை "இல்" என்பது வீட்டை அல்லது இல்லத்தையும் குறிக்கும். 


எனவே, கோயில் என்பது கடவுள் வாழும் இடம்.


அந்த கோயில் உருவாவதற்கு காரணம் மிருகத்திலிருந்து வேறுபட்டு தான் மனிதன் உருவ ஆனததுதன்.


அவனுக்குள் தனக்கு என்ற சுயநல எண்ணம் உருவானது போது,


அந்த மனமானது அழுக்கானது.


மனம் அழக்கு ஆனவுடன்,நிம்மதியை இழந்தான். 


நிம்மதிக்காக கோயிலுக்கு வந்தான். கோயிலுக்கு வந்தவர்களில் இறைவனுடன் ஐக்கியம் ஆனவன் #ஞானி# ஆனான்.


மற்றவர்கள் மனிதர்களாக இருந்து மரித்து மறு ஜென்மம் எடுகிறான்.


இதை தான் ஆதிசங்கர பகவத்பாதாள் புரனபி ஜெனனம் மற்றும் புரனபி ஜெனனம் என்கிறார்.


இறை சிந்தனை நம்முள் வர நல்ல எண்ணம் முக்யம் என்கிறது ஹிந்து சனாதனதர்மம்.


ஆன்மீக பெரியோர்கள் சதா நம்மில் இறை சிந்தனை வர  கோயிலுக்கு செல்லவேண்டும் என்கிறார்கள்.


அந்த கோயிலை மையமாக வைத்து நகரத்தை உருவாக்கி அதன் மூலம் நம்மில் பக்தியை உருவாக்க முற்பட்டனர் நம் முன்னோர்கள்.


எனவே ஹிந்து சனாதனதர்மத்தில் கோயில்,கர்மா மற்றும் இறைபக்தி என்பது ஒன்றோடு ஒன்று இரண்டர கலந்த ஒன்று என்பதே நிதர்சனமான உண்மை.


நம்மில் நல்சிந்தனை மேலோங்கி இறைபணியில் ஈடுபட்டு இறைவனிடம் இரண்டரகலப்போமாக.


என்றும் இறைசிந்தனையில்

தேடுதல் என்பணி ஹரிதியாகராஜன்


#ஓம்பகவானேஓம்பகவதியேபோற்றி#.

Comments

Popular posts from this blog

ஶ்ரீசக்ர தாடங்கங்கள்

காயத்ரி மந்திரத்தில் என்ன சிறப்பு சக்தி இருக்கிறது...?

அம்பாளின் தாடங்க மஹிமைப் பற்றிய வர்ணணை.