#அபிராமிஅந்தாதிபாடல்# - 37
#அபிராமிஅந்தாதிபாடல்# - 37
நவமணிகளை பெற்று தரும்
கைக்கே அணிவது
கன்னலும் பூவும்,
கமலம் அன்ன
மெய்க்கே அணிவது
வெண்முத்து மாலை,
விட அரவின்
பைக்கே அணிவது
பண்மணிக் கோவையும்
பட்டும்,
எட்டுத்திக்கே
அணியும்
திருவுடையானிடம்
சேர்பவளே
இங்கே அம்பாள் என்னென்னவெல்லாம்
அணிகிறாள் என்பது கூறப்பட்டுள்ளது.
கைகளில் - கரும்பு வில், மலர் அம்பு
அவள் நான்கு கைகளிலும் எதை
வைத்துள்ளாள்
#லலிதாசஹஸ்ரநாமத்தில்# விளக்கம்
[கன்னல் - கரும்பு]
[கமலம்- தாமரை]
சதுர் பாஹு சமன்விதா -
நான்கு கைகள் கொண்டவள்.
ராக ஸ்வரூப பசாத்யா
கயிறு (பாசா) வடிவ
அனைவரையும் நேசிக்கும் அவள் -
அவள் இடது கைகளில் ஒன்றில் இதை வைத்திருக்கிறாள்
க்ரோதாகரன்குசோஜ்வாலா
வலது கைகளில் ஒன்றில் அங்குசா
வடிவில் மினுமினுத்து கோபம் கொண்டவள்.
மனோ ரூபேசு கோதண்டா
அவள் இடது கைகளில் ஒன்றில் மனம் கொண்ட இனிப்பு கரும்பு
வில் கொண்டவள்
மாத்ரா சாயக்காவை விட
பஞ்சா தொடுதல், வாசனை, செவிப்புலன், சுவை மற்றும் பார்வை ஆகிய ஐந்து வில்களைக் கொண்ட அவள்
சீர்காழி கோவிந்தராஜனின் கனீரென்று வெங்கல குரலில்
அன்னையின் அழகை வர்ணித்து இருப்பார்.
#சின்னஞ்சிறுபெண்போலே#
சிற்றாடை இடை உடுத்தி
சிவகங்கை குளத்தருகே
ச்ரி துர்கை சிரித்திருப்பாள்
(சின்னஞ்சிறு)
பெண்ணவளின் கண்ணழகை பேசி முடியாது
பேரழகுக்கு ஈடாக வேறொன்றும் கிடையாது
(சின்னஞ்சிறு)
மின்னலை போல் மேனி
அன்னை சிவகாமி
இன்பமெல்லாம் தருவாள்
எண்ணமெல்லாம் நிறைவாள்
பின்னல் சடை போட்டு
பிச்சிப்பூ சூடிடுவாள்
பித்தனுக்கு இணையாக
நர்த்தனம் ஆடிடுவாள்
(சின்னஞ்சிறு)
யார் இங்கு பித்தன் -சதாசர்வ கால தியானத்தில் இருக்கும் பரம்பொருள்.
மற்றும் அன்னப்பறவை போன்ற
மெல்லிய உடலில் வெண்முத்து மாலை.
விடம்கொண்ட நாகம் போன்ற மெல்லிய இடையில் -
பலமணிகளால் கோர்க்கப்பட்ட மாலை,
மற்றும்
பட்டு.
இவ்வாறு அணிகலன்களை அணியும் அம்பிகை,
யாரிடம் சென்று
இடது பாகத்தில் சேர்கிறாள்?
#அர்த்தநாரீ# தத்துவம்
சிவனும் சக்தியும் ஒன்றே என்ற தத்துவம்
எட்டுத்திக்குகளையுமே
ஆடையாய் அணிந்திருக்கும்
திகம்பரனான சிவபெருமானிடம்.
நித்யாய சுத்தாய திகம்பராய -
என்று சிவனை
ஆதி சங்கரர் சிவபஞ்சாக்ஷர ஸ்தோத்திரத்தில் வர்ணித்துள்ளார்.
Comments
Post a Comment