#அபிராமிஅந்தாதிபாடல் - 36

 #அபிராமிஅந்தாதிபாடல் - 36



பழவினை வலிமை குறையும்


பொருளே, 


பொருள்முடிக்கும் போகமே,


அரும்போகம் செய்யும்


மருளே 


மருளில் வரும் தெருளே, 


என் மனத்து போகமே


இருளேதும் இன்றி 


ஒளிவெளியாகி இருக்கும்


 உனது


அருள் ஏது அறிகின்றிலேன், 


அம்புயா தனத்து அம்பிகையே.


பொருள்:


அம்புயா தனம் - குவிந்த ஸ்தனங்கள் அதாவது மார்பகங்கள்.


அம்புஜம் - தமிழில் அம்புயா


அதாவது குவிந்த தாமரை மொடாடை போல் ஒத்த ஸ்தனங்கள்.


அம்பாளை தாமரை மலரைப் போன்று வர்ணிப்பது மஹான்களின் வழக்கம்.


உதாரணம் தாமரை பாதகமலம்.


குவிந்த ஸ்தனங்களை உடைய அம்பிகையே, 


நீயே பொருள், 


அதனால் கிடைக்கக்கூடிய போகம், 


பொருளே நீ தான் அந்த பொருள் மீதுள்ள போகம் நீதான்.


பொன்/மண் போன்ற பொருள் ,அதன் மீது நமக்கு உள்ள மோகம்/போகம்.


அதற்கு காரணகர்தா அவளே


அந்த போகத்தால் உண்டாகக்கூடிய மாயை, 


இந்த உலகம் மாயை என்ற அழியக்கூடிய பொருள். 


அது மாயை என்று உணராமல் இருக்கும் தன்மை.


இதையே சைவசிந்தாந்தம் 


ஆணவம் -ஜீவன்


கர்மா/கன்மா- மனித பிறப்பு


மாயை-இந்த தேகம் அழியக் கூடியது என உணரத தன்மை. அதனால் இந்த தேகத்தின் மீது பற்று.


இந்த பற்றற்வர்கள் ஞானிகள்


பற்றுள்ளவர்கள் மனிதர்கள்


எதில் பற்று?.


குடும்பத்தின்மீது/அழிக்கின்ற தேகத்தின் மீது/பொன்னின்மீது/பொருளின் மீது/சிலருக்கு பொண்ணின் மீது இவை அனைத்தும் மாயை.


மாயை என்பதை உணரந்தவர்க்கள் தெளிவுப் பெற்று மஹான்கள் ஆகிறார்கள்.


அதை உணர்ந்தவர்கள் மனிதர்களாக இருந்து மரிக்கிறார்கள்.


மாயையின் முடிவில் வரும் தெளிவு.


எனது மனதில், 


வஞ்சகத்தினால் இருள் தோன்றாமல்,


வஞ்சனை அற்ற ஞான ஓளி பிறக்க வழிவகுத்தாய். 


உனது அருளினை பூரணமாக அறியமுடியாமல் தவிக்கின்றேன்.


மகாகவி பாரதி,


வஞ்சனை இன்றி, 


பகை இன்றி, 


சூதின்றி,


வையக மாந்தரெல்லாம்,


தஞ்சமென்றே உரைப்பீர் அவள் பெயர்


சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்!


என்று பாடியுள்ளார்.


அதாவது,


சக்தி சக்தி சக்தி என்று மனிதர்கள் சொன்னால், 


வஞ்சனை, பகை, சூது போன்றவை இவ்வுலகை விட்டு போய்விடும். 


இது உறுதி என்று படும்படி, மூன்று முறை அறுதியிட்டு கூறுகிறார்.

Comments

Popular posts from this blog

ஶ்ரீசக்ர தாடங்கங்கள்

காயத்ரி மந்திரத்தில் என்ன சிறப்பு சக்தி இருக்கிறது...?

அம்பாளின் தாடங்க மஹிமைப் பற்றிய வர்ணணை.