அபிராமி அந்தாதியும் ஆச்சாரியரின் தெய்வத்தின் குரலும்
அபிராமி அந்தாதியும் ஆச்சாரியரின் தெய்வத்தின் குரலும்
கடந்த சில தினங்களாக அபிராமி அந்தாதி மற்றும் அம்பாள் தத்துவம் பற்றிய பதிவுகளை காண்கிறோம்.
அதில் ஓவ்வொரு பாடலிலும் அம்பாளின் பாதாரவிந்தில் சரணடைவதை குறிப்பிடுகிறார் பட்டர்.
அதற்கு காரணம் எந்த இக்கட்டான நிலையிலும் அம்பாளை சரணடைந்தால் அவள் நம்மை காப்பாற்றுவாள் என்பதை பரிபூர்ணமாக நம்பிக்கிறார் பட்டர்.
காரணம் இந்த சம்சாரசாஹரத்தில் பாசத்தில் சுற்றி திரியும் இந்த ஆவி தயிர்கடையும் மத்தில் சூழுலும் இந்த ஆவி அதாவது சம்சாரசார பந்ததில் சூழலுகிறது. அதிலிருந்து கரையேறுவதற்கு அம்பாளின் பாதாரவிந்ததில் சரணடைவது மிகவும் முக்யம் என்கிறார்.
ஆச்சாரியரின் தெய்வத்தின் குரலை முன்பு படித்த போது புரியாத விஷயம். லலிதாசஹஸ்ர நாமம்,சௌந்தயலஹரி மற்றும் அபிராமி அந்தாதியை கற்க கற்க தற்போது தெய்வத்தின் குரலை ஒரளவு புரிந்துக்கொள்ளும் ஞானம் வந்துள்ளது என்பதை உணர முடிகிறது.
ஆதனால் இடை இடையே ஆச்சாரியரின் தெய்வத்தின் குரலில் கூறிய பாகங்களை பதிவிட்டு வருகிறேன்.
அதில் ஆச்சாரியர் பல நுட்பமான விஷயங்களை தனக்கே உரிய பாணியில் பல உதாரங்களுடன் விளக்கியுள்ளார்.
அதைத் தொடர்ச்சியை வரும் நாட்களில் பதிவாக காணலாம்.
#ஓம்குருப்யோநமஹ#.
Comments
Post a Comment