அம்பாளின் இருப்பிடம் :முதல் பகுதி)பகுதி -2.
அம்பாளின் இருப்பிடம் :
தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)பகுதி -2.
பூரண சந்திரனைத் தியானிக்கிற போதே மனசும் அது போல் குளிர்ந்து போகிறது.
அங்கே துக்கத்துக்கும் துவேஷத்துக்கும் இடமில்லாமல் சாந்தமாகிறது.
வெளிப் பிரபஞ்சமெல்லாம் ஜீவனுக்குள்ளே இருக்கிறது.
அண்டத்திலுள்ளதெல்லாம் பிண்டத்திலும் உண்டு என்பார்கள்.
சகல ஜீவராசிகளுக்கும் அந்தராத்மாவாக இருக்கிற #பராசக்தியின்# #மனஸே# சந்திரனாக ஆகியிருக்கிறது.
‘புருஷ ஸூக்த’த்தில் இப்படித்தான் சொல்லியிருக்கிறது.
இதனால் ஜீவராசிகளின் மனத்துக்கும் சந்திரனுக்கும் சம்பந்தம் இருக்கிறது.
இங்கிலீஷில் சித்தப் பிரமை பிடித்தவர்களை #lunatic# என்கிறார்கள்.
#Lunar# என்றாலே சந்திரனைப் பற்றியது என்றுதான் அர்த்தம்.
இது சித்தத்தின் விபரீத நிலையைச் சந்திரனோடு சேர்த்துச் சொல்கிறது.
சித்த சுத்திக்கு அதே சந்திர மண்டலத்தில் அம்பாள் தியானத்தை நம் சாஸ்திரங்கள் சொல்கின்றன.
சந்திரனில் அம்பாள் அமர்ந்து இருப்பதாகச் தியானிக்க வேண்டும். தியானம் செய்கிறவனுக்கோ புலித்தோலை ஆசனமாக விதித்திருக்கிறது.
சந்திரனுக்கு நேர் எதிராக புலி என்றால் உக்கிரமாக இருக்கிறது.
புலி எப்படி தன் லக்ஷியமான இரையை ஒரே பாய்ச்சலில் பிடித்து விடுகிறதோ.
அப்படி நம் தியான லக்ஷியத்தை மனசு விடாப் பிடியாகப் பிடித்துக் கொள்வதற்கே வியாக்ராஸனம் விதித்திருக்கிறது.
அதில் அமர்ந்து அம்பாளை
சந்திர மண்டல வாஸினியாக தியானித்தால்,
நம் மனமும் அவள் மனத்திலிருந்து வந்த சந்திரனைப்போல் குளிர்ச்சி அடையும்.
சந்திரன் தாபத்தைப் போக்குவது போல் நம் தாபமும் சமனமாகும்.
சந்திரிகையில் இருட்டு விலகுகிற மாதிரி அஞ்ஞானம் விலகும்.
சூரியனை ஞான ஸ்வரூபமாகச் சொல்லியிருக்கிறது.
ஆனால் சூரியப் பிரகாசம் தாபம் உண்டாக்குகிறது.
அதுவே சந்திரனில் பிரதிபலித்து பரம சீதளமாகிறது.
சந்திரனுக்கு ஸ்வபாவமாக ஒளி கிடையாது.
அம்பாள் சூரியனைப்போல் ஸ்வயம் பிரகாசமாகவும், சந்திரனைப்போல் சீதளமாகவும் இருக்கிறாள்.
தாபத்தைப் போக்கும்போதே ஞானப் பிரகாசமும் தருகிறாள்.
ஞானம் தருகிற குருமூர்த்தி அவளேதான்.
காளிதாஸர் ‘#தேசிகரூபேணதர்சிதாப்புதயாம்#
‘குரு வடிவத்தில் வந்து தன் மகிமையைக் காட்டுகிறவள்’
என்று அம்பிகையை வர்ணிக்கிறார்.
எனவே சந்திரமண்டலத்தில் குரு பாதத்தையும் தியானிக்கலாம்.
நம் தாபங்கள் விலகவும்,
ஞானப்பிரகாசம் உண்டாகவும், நாம் எல்லோரிடம் குளிர்ந்து இருக்கவும் இம்மாதிரி சந்திர மண்டலத்தில் அம்பாளையோ,
குரு பாதுகையையோ தியானிக்க வேண்டும்.
அம்பாளையோ குருவாகத் தியானிக்க வேண்டும்.
#ஓம்ஶ்ரீகுருப்யோநமஹ#.
#ஓம்ஶ்ரீலலிதாம்பிகையேநமஹ#
Comments
Post a Comment