தெய்வ தத்துவம் ; பகுதி 1
தெய்வத்தின் குரல் (மூன்றாம் பாகம்)
பகுதி - 1
தெய்வ தத்துவம் ;
தெய்வங்கள்
#மீனாக்ஷி#
அம்பாள் ஸ்தோத்திரங்கள் என்று சொன்னால் உடனே இரண்டு நினைவுக்கு வருகின்றன.
ஒன்று #லலிதாஸஹஸ்ரநாமம்# மற்றது #ஸெளந்தர்யலஹரி#
அம்பாள் ரூபங்களில் பிரஸித்தமாகக்
காஞ்சி காமாக்ஷி,
மதுரை மீனாக்ஷி ,
காசி விசாலாக்ஷி
என்ற மூன்றைச் சொல்கிறோம்.
#காமாக்ஷி#
#காமதாயினீ #
என்று ஸஹஸ்ர நாமத்தில் வருகிறது.
ஸெளந்தர்யலஹரியில்காமாக்ஷியின் பெயர் வராவிட்டாலும்,
அதில் த்யான ஸ்லோகம் மாதிரி அம்பாளை வர்ணிக்கிற
#அபிராமிஅந்தாதி #க்வணத்காஞ்சீதாமா#என்ற ஸ்லோகத்தில் காமாக்ஷியின் ஸ்வரூபத்தைத்தான் -
தநுர், பாண, பாச, அங்குசங்களுடன் சதுர் புஜையாகக் காமாக்ஷி எப்படியிருக்கிறாளோ
அப்படிப்பட்ட ஸ்வரூபத்தைத்தான் - சொல்லியிருக்கிறது.
பேர் சொல்லாவிட்டாலும் சிலேடையாக ஊரைச் சொன்ன மாதிரி, 'காஞ்சீ தாமா'என்று வருகிறது. 'காஞ்சீ தாமா'என்றால் ஒட்டியாணப் பட்டை என்று அர்த்தமானாலும் காஞ்சீபுரத்தின் நினைவும் வருகிறது.
மீனாக்ஷியின் பெயர் ஸஹஸ்ர நாமத்தில் வருகிறதா என்று பார்த்தால் வரவில்லை.
'ஸெளந்தர்ய லஹரி'யில் நம் ஆசார்யாள் அவளை வர்ணனை பண்ணியிருக்கிறாரா என்று பார்த்தால், இங்கேயும் காணோம்!
ஏன் இப்படி இருக்கிறது என்று ஆச்சரியமாக இருக்கிறது.
லோகத்துக்கெல்லாம் பிரஸித்தமாக, வர ப்ரஸாதினியாக இருக்கப்பட்டவள் மீனாம்பிகை.
காருண்யத்தோடு ஆதிபத்ய சக்தியும் சேர்ந்திருக்கிறவள் மீனாக்ஷி.
ஆறு மாஸம் தன்னிடம் செங்கோல், ஆறு மாஸம் ஸுந்தரேச்வரரிடம் செங்கோல் என்றிப்படி லோக முழுவதற்கும் ராஜ்யபாரம் பண்ணுகிறவள்.
நித்தியப்படி பூஜை, நைவேத்யம் முதலியவற்றைப் பார்த்தாலோ, ஈஸ்வரனுக்கு அவள் ஸரி ஸமானம் மட்டுமில்லை, அவனைவிட ஒருபடி மேலே என்று தோன்றுகிறது.
பூஜை, நைவேத்யம் எல்லாம் முதலில் அவளுக்குப் பண்ணிவிட்டு அப்புறம்தான் ஈஸ்வரனுக்குப் பண்ணுவது என்று மதுரையில் மட்டும் மாறுதலாக வழக்கம் இருக்கிறது.
த்வாதசாந்தம் என்று சாக்த தந்த்ரம் சிறப்பிக்கும் தத்வ ஸ்வரூபமாய் இருப்பது மதுரை..... இங்கே ஒன்று நினைவு வருகிறது.
#ஓம்மீனாக்ஷிதாயேநமஹ#
Comments
Post a Comment