அபிராமி அந்தாதி பாடல்100


 அபிராமி அந்தாதி பாடல்100.

குழையைத் தழுவிய


கொன்றையந்தார்


கமழ் கொங்கைவல்லி


கழையைப் 


பொருத திருனெடுந் தோளும், 


கரும்பு வில்லும்


விழையைப் பொரு 


திறல் வேரியம் 


பாணமும் வெண் நகையும்


உழையைப் பொருகண்ணும்


நெஞ்சில் எப்பொதும் 


உதிக்கின்றவே    .


#பொருள்


ஏ, அபிராமி! 


குழையிலே தவழும்படியாகவுள்ள கொன்றை மலரால் தொடுத்த மாலையின் மணம்கமழும் மார்பகங்களையும் தோளையும் உடையவளே! 


மூங்கிலை ஒத்த அழகிய கரும்பு வில்லும், 


கலவிபோருக்கு விரும்பக்கூடிய மணம் மிகுந்த ஐவகை மலர் அம்பும்,


வெண்மையான முத்துப்பல் இதழ்ச் சிரிப்பும், 


மானை ஒத்த மருண்ட கண்களுமே


எப்பொழுதும் என் நெஞ்சில் நிறைந்திருக்கிறது. 


அத் திருமேனியையே நான் வழிபடுகின்றேன்


#பொருளுரை


'தாரமர் கொன்றையும்' என்ற காப்புப் பாடலுடன் தொடங்கியவருக்கு,


அந்தாதியின் இறுதிப் பாடலிலே, அதே கொன்றரை மலர் ஞாபகத்திற்கு வந்தது ஆச்சரியம் இல்லைதான்! 


இறைவன் அணிந்திருக்கும் அந்தக் கொன்றை மாலை, 


இறைவனார், எம் அம்மையைத் தழுவிய போது, 


அம்மையின் ஸ்தங்கள் மீது பட்டுக் குழைந்தது. அம்மையின் ஸ்தனங்களும், குழைந்தன. 


அந்தக் கொன்றை மலரின் வாசனை, அன்னையின் ஸ்தனங்களிலே வீச ஆரம்பித்தது.


மூங்கில்களைப் போரிலே வென்ற 


எம் அம்மையின் தோள்களும், 


அந்தக் காமனுக்கு உயிர்ப் பிச்சையளித்துக் காத்த கரும்பு வில்லும், 


ஆண்களும், பெண்களும் ஒருவரைஒருவர் விழைந்து பொருதும் காமப் போருக்கு அவர்களை ஆளாக்கும் 


அந்த ஐந்து மலர் அம்புகளும் ஒன்றின் பின் ஒன்றாக பட்டரின் நினைவுக்கு வருகின்றன.


அம்மையின் அந்தப் பளிச்சிடும் புன்னகை மனதிலே தோன்றுகின்றது.


இறுதியாக, 


உலகையே காத்து ரஷிக்கும் அந்த தண்ணளிக்குச் சொந்தக்காரர்களான கண்கள், பட்டரின் மனக்கண்ணிலே தோன்றுகின்றன. 


தனது கடைப்பார்வையினால், காத்தளிக்கும் அந்தக் கண்களை எண்ணினாலேயே நமக்கும் விழி நீர் மல்குகின்றது.


அபிராமி அன்னையின் 


அருட் கடாட்சம் எப்போதும் நம் நெஞ்சிலே நிறைகின்றது.


ஒரு குழந்தை போல, 


அன்னையின் ஸ்தனங்களிலிருந்து அன்னையை வர்ணிக்க ஆரம்பித்த பட்டர், 


ஒன்றன் பின் ஒன்றாய்,


அன்னையின் நகில்களையும்,


அவளது மூங்கிலை வென்ற தோள்களின் பெருமையையும், அவளது கரும்பு வில்லையும், 


அந்தக் கரும்பு வில்லிலிருந்து கிளம்பும் பாணங்களையும் சொல்லி,


 கடைசியாக, 


அபிராமித் தாயின் கண்களின் பெருமையையும் சொல்லி அந்தாதியை நிறைவு செய்கிறார்.


அன்னையின் கண்கள், சாதாரணக் கண்கள் இல்லையாம். 


'மான்' போன்ற மருண்ட கண்களாம்! இந்த மான் போன்ற மருண்ட கண்கள், 


உலகிலேயே வயதான் ஒரு தாய்க்கு, அதுவும், 


இந்த உலகையே பெற்றெடுத்த ஒரு தாய்க்கு இருக்குமா என்று முன்னொரு பாடலிலே அலசி ஆராய முற்பட்டவர், 


அந்தத் தாயின் கண்களை, 


'மானை ஒத்த கண்கள்' என்றே சொல்லி முடித்திருப்பதும் எண்ணி எண்ணி இன்புறச் செய்வதாகவே அமைகிறது!


தொடங்கிய சொல்லிலேயே,


 "உதிக்கின்ற" 


என்ற சொல்லிலேயே அந்தாதி முற்றுப் பெற்று, 


நமக்கெல்லாம் நலம் விளைக்கிறது


Comments

Popular posts from this blog

லலிதா சகஸ்ரநாமம்

அம்பாளின் தாடங்க மஹிமைப் பற்றிய வர்ணணை.

காயத்ரி மந்திரத்தில் என்ன சிறப்பு சக்தி இருக்கிறது...?